(Reading time: 8 - 15 minutes)

கடலில் மாட்டிக்கொண்டவர்களை காக்கும் பொருட்டு மீட்புப் பணியினர் விரைந்தனர் அந்தமான் கடலை நோக்கி !

ப்ரியன் தன் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வெகு வேகமாக அறைக்குத் திரும்பிக்கொண்டு இருந்தான் தன் மானிட்டரில் நீரஜாவின் போல்டரை லாக் செய்யாதது வேறு நினைவுக்கு வந்து இம்சித்தது. பரத்தின் நண்பனும் இந்த திட்டங்களுக்கு எல்லாம் சூத்திரதாரியான ரவி வெகு விரைவில் வரப்போகிறானே ? அதற்குள் உருகிவரும் யுரேனியத்தின் அளவையும் புதிதாக கடலுக்கு அடியில் சுவாசக் குழாய்களோடு தாங்கள் தயாரித்த செயற்கை சுரங்கப்பாதையுனையும் பார்த்துவரச் சென்றிருந்தான். இன்னமும் அந்தப் பகுதிகளை கணிப்பொறி வழியாக பார்வையிடும் சேவையை அவன் செய்து முடிக்கவில்லை, முன்பெல்லாம் நீரஜா மட்டும்தான் விவரம் தெரிந்தவள். அதிலும் பாதி நேரம் அவள் பரத் பின்னாலேயே சென்றுகொண்டிருந்ததால் ப்ரியனுக்கு அவனின் வேலையைக் கவனிக்க ஏதுவாய் இருந்தது. இப்போது அப்படியில்லையே பத்மினி உத்ரா என்று இரண்டு பேருக்கும் விஷயங்களும் அத்துப்படியாக தெரிந்திருக்கிறது. இவர்களை அப்புறப்படுத்துகிற வரையில் தான் சற்று ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டுமே.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பலதரப்பட்ட யோசனைகளோடு அறைக்குள் கால் வைக்கப் பார்த்தவன் பத்மினி நீரஜாவின் போல்டரை கிளிக் செய்து பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டதும் அதிர்ச்சியாய் இருந்தது. அடக்கடவுளே எது நடக்கக்கூடாது என்று பயந்தேனோ அது நடந்து விட்டதே, நீரஜாவின் கொலைக்கு காரணம் பரத் என்று தான் சொன்ன எல்லாமே இப்போது பொய்யாகிப் போகுமே என்ன செய்வது ? சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ப்ரியன் தன் மருத்துவ அறைக்கு விரைந்தான். ஏதோவொரு மருந்தை இன்ஜெக்ட் செய்து அந்த சிரஞ்சியோடு பத்மினி இருக்கும் அறைக்கு வந்தான்.

த்ராவிடம் மட்டும் அல்ல பத்மினியிடமும் பரத்தான் நீரஜா என்ற பெண்ணின் இறப்பிற்குக் காரணம் என்ற விதையை தூவியிருந்தான் ப்ரியன். ஆனால் நடப்பவை எல்லாமே தலைகீழாக இருக்கிறதே ப்ரியன் அந்தபெண்ணின் பெண்மையோடு விளையாடிக்கொண்டிருக்க அவள் ஏன்அசையாமல்... அப்படியென்றால் அந்த பெண் சுயநினைவில் இல்லை, ப்ரியன் இத்தனை கயவனா ? அதனால் தான் கெட்டவன் என்ற சாயத்தை பரத்தின் மேல் பூசிவிட்டு கொண்டிருக்கிறானோ ?!

கடவுளே இந்த உத்ராவும் பரத்தும் எங்கேயே வெளியே செல்வதாக சொன்னார்களே அவர்கள் எங்கிருந்தாலும் உடனே இந்த விஷயத்தை சொல்லிவிடவேண்டும் என்று தன் மொபைலில் நீரஜாவின் வீடியோவை ஏற்றிக்கொண்டாள். சட்டென்று அந்த இடம் விட்டு அகன்று அறைக்குள் நுழைந்து பெட்டியை நோக்கி நகர முயல ப்ரியன் அவள் பின்னாலேயே வந்து தன் கையில் உள்ள சிரஞ்சியை அவள் புஜத்தில் செலுத்திவிட்டான். 

தெறிக்கும் விழிகளோடு ப்ரியனின் மேல் பார்வையை நிலைத்தவளின் கையில் இருந்த செல்போன் கட்டிலுக்கு அடியில் மறைந்தது. பத்மினியின் கை கால் எல்லாம் செயலற்று போயிருந்தது. ப்ரியனை தடுக்கும் எந்த முயற்சியையும் அவளால் செய்ய முடியவில்லை ஒரு வெற்றி சிரிப்போடு உனக்கு எதுக்கு இந்த டிடெக்டிவ் வேலை ?! பத்மினி..... எத்தனை அழகான உடம்பு உனக்கு பார் யாருக்கும் வாய்க்காமல் கடலில் விலங்குகளுக்கு இரையாகப் போகிறது அவனின் வெறித்தனம் மின்னிய கண்கள் பத்மினியை பயங்கொள்ள வைத்தது. அவன் மிக மெதுவாக பிளாஸ்டிக் கவரில் அவளின் உடலைத் தள்ளினான். 

தொடரும்...

Episode # 15

Episode # 17

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.