(Reading time: 23 - 46 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 06 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல்  ஓடிக்கொண்டிருந்தது...

கௌதமும்,மதிவேந்தனும் தங்களது கல்லூரி படிப்பை முடித்திருந்தனர்...கௌதம் ஒரு சாப்ட்வர் கம்பெனியில் வேலையில் சேர்ந்து இருந்தான்...

மதிவேந்தன் மேனஜ்மென்ட் படிப்பை எடுத்து முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்....

தேன்நிலா பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்...மதிவேந்தன் முற்றிலுமாக தேன்நிலாவை தவிர்த்தான்...

அன்று தனது அத்தை பேசிவிட்டு போனப்பிறகு  தனது தந்தை பட்ட மனகஷ்டத்தை பார்த்தவனுக்கு தேன்நிலா மீது கோபம் தான் அதிகமாகியது...

இவன் இங்கு இப்படி இருக்கோ நிலவுபெண் அவளோ இவனது நியாபகத்திலே தனது நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள்...

இரண்டு கேட்டான் வயதில் எல்லா குழந்தைகளுக்கும் வரும் எண்ணங்கள் தான் அவளுக்கும் தோன்றி இருந்தன...ஈர்ப்பு...

ஆம் ஈர்ப்பு தான்...பார்த்தவை அனைத்தின் மீதும் வருகின்ற ஈர்ப்பு...தங்களை கவர்கின்ற அனைத்து  பொருள்களின் மீதும் ஏற்படும் ஆசை...தான் நினைப்பதும்,செய்வதும் சரி என்று நினைக்கும் பகுத்தறியும் திறனற்ற தன்மை....அவைகள் தான் அந்த வயது குழந்தைகளின் தடமாற்றத்திற்கு காரணமாகின்றன...

தேன்நிலாவும் அப்படி பட்ட ஈர்ப்பில் தான் மாட்டிக்கொண்டிருந்தாள்...அவளுக்கு வந்த ஈர்ப்பு  அவளது மச்சான் மீது...

இந்த  வயதில் தங்கள் நட்புக்குள் பேசிக்கொள்வது தான்...இவளுடன் படிக்கும் தோழிகள் காதலை பற்றியோ அல்லது அவர்களுக்கு பிடித்த ஹீரோவோ பற்றியோ அல்லது தனக்கு வரபோகும் கணவன் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பேசும்பொழுது அவளது கண்களில் வந்து போவது என்னவோ அவளது மதிமச்சான் தான்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவன் அவளை ஒதுக்க ஒதுக்க அவளுக்கு அவன் மீது தான் ஈர்ப்பு வந்தது...அவன் அவளை கண்டுகொள்ளாமல் போகும்பொழுது ,அவளே சென்று அவனிடம் பேசும்பொழுது அவன் அவளை உதாசீனப்படுத்திவிட்டு செல்லும் பொழுது எல்லாம் அவளுக்கு அவன் மீது கோபம் வரவில்லை...

அவனை நோக்கி ஈர்க்கத்தான் பட்டாள் தேன்நிலா...அது காதலா   என்ற கேள்விக்கு அவளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை...அவள் இருக்கும் வயதும் அதுபோல தான்...அவளுக்கு எப்பொழுது அதற்கான பதில்  கிடைக்குமோ அப்பொழுது அவள் மனதில் இருக்கும் காதல் அவளை ஆனந்த வெள்ளத்தில் மிதக்க வைக்க தான் போகிறது...

ஆனால் அவளது காதலுக்கானா பதில் எவ்வாறு இருக்கும்...

வெறுப்பா,ஏமாற்றமா,கோபமா...எதை பெறுவாள் அவள் தனது காதலனிடம்...

அவள் தனது மாமன் மகனின் மேல் இருந்த ஈர்ப்பை உணர்ந்தது அவளது பன்மவயதில் தான்...

நாட்கள் வேகமாக செல்ல மதிவேந்தன் தனது படிப்பை எல்லாம் முடிதுவிட்டு தங்களது தொழிலை கையில் எடுத்து நிர்வகிக்க ஆரம்பித்தான்...அதுமட்டும் இல்லாமல் சில புதிய தொழில்களையும் நடத்த ஆரம்பித்தான்...

தேன்நிலா தனது கல்லூரி படிப்பின் கடைசி ஆண்டில் இருந்தாள்...அழகாய் அவளது வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்தது...

அவளது குழந்தை தனமான முகம் மறைந்து,அந்த வயதுக்கு உரிய முக களையுடனும்,அழகுடனும் மிளிர்ந்தாள்...

தனது குடும்பத்தாரின் அணைப்பு,தனது தோழிகளுடன் ஆன அழகிய பொழுதுகள் என்று அவளது மனம் எந்தவித சங்கடமும் இல்லாமல் சென்றுக்கொண்டிருந்தது...

பலவித கலாட்டகளுடன் அவளது கல்லூரி வாழ்க்கையின் கடைசி வருடம் நகர்ந்துக் கொண்டிருந்தது...

அன்றும் அதுபோல் தான் அவர்களது தோழிகள் கூட்டதின் மாநாடு நடந்துக்கொண்டிருந்தது...

“ஏய் தேனு...உனக்கு ஒண்ணு தெரியுமா...நம்ப காலேஜ்கு நாளைக்கு ஒரு புதிய கெஸ்ட் லக்சர் வர போறாங்களாம்...”என்று தேன்நிலாவின்  தோழி  சொல்ல

“யாருடி...நம்ப கிளாஸ்க்காடி...”என்று தேன் கேட்க

“இல்ல...இல்ல...நம்ப ஜூனியர்ஸ்க்கு தான் கிளாஸ் எடுக்க வறாங்க...நம்ப அஞ்சலி மேம் மெண்டலிட்டி லீவ்ல இருக்காங்கல,அதற்கு பதிலா... ”என்று அவள் சொல்ல

“ஓ...”என்று அந்த ஒற்றை சொல்லோடு தேன்நிலா தனது பேச்சினை முடித்துக்கொள்ள

அவளது தோழிகளது பேச்சுகளும் மற்றவற்றை  பற்றி திரும்பியது...

அவளது தோழிகள் அனைவரும் முன் செல்ல தேன்நிலா கயலுடன் சேர்ந்து வந்துக்கொண்டிருந்தாள்.

“தேனு...நாளைக்கு வர போறது யாருன்னு தெரியுமா...”என்று கயல் கேட்க

“யாருடி நமக்கு தெரிஞ்சவங்க யாராவது வாரங்களா...நம்ப ஊர்லேருந்து யாராவதா...இல்லையே நம்ப ஊர்ல அப்படி யாரும் எனக்கு தெரிஞ்சு இல்லையே...”என்று தேன் சொல்ல

“எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆளு தான்...இல்ல...இல்ல உன்னோட ஆளு தான்...”என்று கயல் சொல்ல

முதலில் புரியாமல் முழித்த தேன் அவள் சொன்ன வார்த்தைகளின் புரிந்துக்கொண்டவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.