(Reading time: 23 - 46 minutes)

“என்னடி சொல்லுற...,மச்சானா வர போறாரு...யாருடி சொன்ன உனக்கு...”என்று  தேன்நிலா கேட்க

“அசோக் அண்ணா தாண்டி சொன்னாரு...நாளையிலேருந்து அண்ணா ஒரு ரெண்டுமணிநேரம் வந்து கிளாஸ் எடுத்துக் கிட்டு போய்டுவாங்கனு சொன்னாங்க...” என்று கயல் சொல்ல

“அப்படியா...”என்று தேன்நிலா யோசிப்பது போல சொல்ல

“ஏய்... நான் ஒண்ணு சொல்லட்டா...அண்ணாவ பார்த்தா பின்னாடி  நம்ப காலேஜ்ல இருக்குற எல்லா பொண்ணுங்களும்  அண்ணா பின்னாடி தான் சுத்த போறாங்க...நீ தாண்டி பாவம்...”என்று கயல் கூற

அவளை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தால் தேன்நிலா.அவளது முறைப்பை பார்த்த கயல் அவளை பார்த்து சிரிக்க தான் செய்தாள்.(எல்லாரும் பயப்புடுற அளவு நம்ப ஹீரோயினுக்கு அவ்வளவு  சீன் இல்ல...)

“ஏய்...சிரிக்கிறியா...நல்லா சிரிச்சிக்கோ...ஆனா நாளைக்கு உங்க அண்ணன் வர மாட்டாரு...” என்றுக் கூறியவள்

மாலை அவர்கள் எங்கே இருப்பார்கள் என்று அசோக்கை கேட்டுக்கொண்டு கல்லூரி முடிந்து அங்கே செல்ல தயாரானார்கள் இருவரும்...

தனது மன்னவனின் நினைப்புடனே  அவன் இருக்கும் இடம் நோக்கி செல்ல ஆரம்பித்தால் தேன்நிலா.

“மனசெல்லாம் பந்தலிட்டு

        மல்லி கொடியாக உன்னை விட்டேன்..

உசுருக்குள் கோயில் கட்டி

 உன்னை கொலுவெச்சு கொண்டாடினேன்...

மழை பேஞ்ச தானே மண்வாசம்

   உன்னை நினைச்சாலே பூவாசம் தான்..

பாதை மேலே பூத்திருப்பேன்

 கையில் ரேகைபோல சேர்ந்திருப்பேன்...”

அவனை நினைத்தவுடன்,அவனது முகம்  அவளது கண்களில் வந்து சென்றது.அவள் சின்ன பிள்ளையாய் இருந்தபொழுது  பார்த்த மதிவேந்தனுகும் இப்பொழுது பார்க்கும் மதிவேந்தனுக்கும் அவள் பல வித்தியாசங்களை சொல்வாள்...

ஆறடி உயரத்தில்...ஆண்மை உரிய இலக்கணங்களுடன் மற்றவரை மதிப்பு பார்வை பார்க்க வைக்கும் வகையில் தன்னை நிலை நிறுத்தியிருந்தான்...தனது தொழில்களை  திறம்பட நடத்திவந்ததோடு மட்டுமில்லாமல் அனைவரையும் மதித்து நடக்க தெரிந்து  வைத்திருந்தான்...

அவனை பார்க்கபோகும் எண்ணமே மகிழ்ச்சி கொள்ள வைக்க அவனை பார்த்து பேச போவதை  நினைத்து சந்தோசத்துடன் அவனை நோக்கி சென்றாள்...

அவனை இன்று ஒரு வழி செய்திட வேண்டும்  என்ற எண்ணத்துடன்...

மதிவேந்தனும்,அசோக்கும் தங்களது வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மதிவேந்தன்,அசோக்கும் சிறந்த நண்பர்கள்.வேந்தனுடைய அனைத்துமாய் அவன் இருந்தான்...

இருவருக்கிடையில்  எந்த ஒளிவு,மறைவும் இதுவரை இருந்தது இல்லை...

அசோக்,வேந்தனுக்கு தெரியாமல் செய்யும் ஒரு விஷயம் வேந்தனை பற்றிய எல்லா விஷயங்களையும் நிலாவுக்கு தெரியப்படுத்துவது...

அசோக்கை பொருத்தவரை அது வேந்தனுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்...

ஆனால், வேந்தனுக்கு அவன் தான் தன்னை பற்றி நிலாவிடம் கூறுகிறான் என்று தெரியும்...

அதில் அவன் தலையிடுவதில்லை...

நிலா, வேந்தனை காதல் செய்வதது சம்பந்தப்பட்ட இருவரையும்  தவிர அசோக்கும்,கயலுக்கும் தான் தெரியும்...

வேந்தனும்,அசோக்கும் ஊரை அவர்களது தோப்பு வழியாக நெருக்கும் பொழுது அந்த அவனது பைக்கிற்கு இடையில் வந்து தனது  சைக்கிளை நிறுத்தினால் தேன்நிலா.

அவள் இவ்வாறு இடையில் திடீர் என்று வந்ததால் அவன்  வண்டியை நிறுத்தினான்.ஆனால் அவளது செயலில் பயந்தது என்னவோ கயலும்,அசோக்கும் தான்...

சைக்கிளை குறுக்கே நிறுத்தியவளுக்கும் பயமில்லை(அவ்வளவு நம்பிக்கையா...உனக்கு...),வண்டியை அவள் மேல் ஏத்தாமல் நிறுத்தியவனுக்கும் பதட்டமில்லை...

அவன் வண்டியை நிறுத்தியதும் இறங்கி வந்த அசோக்,”என்ன தேனு...உனக்கு அறிவே இல்லையா...சட்டுனு இடையில வந்து வண்டிப்போற வழியில நிக்குற...அவன் வண்டியை நிறுத்துலைனா என்ன ஆகுறது...” என்று கத்த

கயலும்,’நல்லா கேளுங்க அண்ணா...எனக்கு உயிரே ஒரு நிமிஷம் போய் வந்துடுச்சு...” எனக் கூற

வேந்தனோ அங்கு நடப்பவைக்கும் தனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்ற பாணியில் அமர்ந்திருந்தான் வேந்தன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.