(Reading time: 23 - 46 minutes)

“நீ கட்டும் வேட்டி மடிப்புல நான்

  மயங்கிப்போனேனே....

உன் கட்டழகு மீசையிலே

  கிறங்கிபோனேனே...

வண்டு சாமந்தி பூவில்

        நாயனம் ஊதுது மாமா

மனசு ஆசையினாலே

   ஊஞ்சல் ஆடுது மாமா

மலரும் தாவணி பூவில்

 தேனை எடுத்துக்க மாமா..

கொலுசு போட்ட காலிலே

        தாளம் போட்டுக்க மாமா...” 

அவளை அவன் கூறிய வார்த்தைகள் எதுவும் பாதிக்கவில்லை...அவள் அவளது  காதலை தனது மச்சான்னிடம் சொல்லிவிட்டாள்...

அதுமட்டுமே அவளது நினைவுகளில்.... அதன்பிறகு அவள் அவனை நெருங்கியது இல்லை...அவனை வைத்த கண் வாங்காமல் தன்னை அவள் பார்பதை உணர்ந்து தான் இருந்தான்...அவளது இந்த ஆசை அனைவரையும் எந்த நிலையில் கொண்டு போய் நிறுத்தப்  போகிறது...அதுதான் அவனது யோசனை... அவள் தன்னிடம் காதலை சொல்லிய நாளை  நினைத்து பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டான் மதிவேந்தன்...

அவளது கல்லூரிக்கு அடுத்த நாள் அசோக் தான் வந்தான் மதிவேந்தன் வரவில்லை...அதுவே நிலாவிற்கு நிறைவாய் இருந்தது...

அனைவரது வாழ்க்கையும் எந்தவித தடங்கலும் இல்லாமல் சென்றுக் கொண்டிருந்தது...

நிலாவிற்கு இறுதிவருடம் என்பதால் அவளும்,கயலும் இண்டன்ஷிப்பில் ப்ராஜெக்ட் செய்ய சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் அப்ளை செய்து அதற்காக அனுமதி கிடைத்ததும் அவர்கள் இருவரும் சென்னை செல்ல முடிவு செய்தனர். அங்கு இருந்த கௌதம் அவர்களுக்கு தேவையானதை செய்து அவர்களை பார்த்துக்கொள்வதாக  தனது பெற்றோர்களிடமும்,கயல் பெற்றோர்களிடமும் சொல்ல அவர்களும் ஒத்துக் கொள்ள நாற்பது நாட்களுக்கு சென்னையில் தங்க தங்களது பயணத்தை ஆரம்பித்தனர் இருவரும்...

அனைவரையும் சமாதனம் செய்த கௌதாமல் அன்னத்தை சமாதானம் செய்வது தான் பெரும்பாடாக இருந்தது... அவனுக்கு பல ரூல்ஸ்களை போட்டு அதற்கு எல்லாம் ஒத்துக் கொண்ட பிறகு தான் அன்னம் தேன்நிலாவை அனுமதித்தார்...

தேன்நிலாவிற்கும் பல அறிவுரைகளை கதிரேசன்,அன்னம்,தேவி கூறினர்..இப்பொழுது நாட்டில் நடக்கும் செய்திகளை பார்க்கும் பொழுது எந்த பெற்றோருக்கு தான் தங்கள் பிள்ளைகளை  வெளியில் அனுப்ப மனம் வரும்...

கௌதம் அங்கே  இருப்பதாலும்...அவனது அலுவலக தோழியுடன் தான் இவர்கள் தாங்குவதால் மட்டுமே அவர்கள் ஒத்துக்கொண்டனர்...

அவர்ளை அழைத்து செல்ல கௌதம் வந்திருந்தான்...சென்னை செல்லும் அன்று தனது மச்சானை தூரத்தில் இருந்தே தனது கண்களில் நிரப்பிக்கொண்டு சென்றாள் தேன்நிலா...

நிலாவின் வாழ்கைக்கான குழப்பங்களுக்கான வேலைகளையும் காலம் செய்ய ஆரம்பித்தது... அவள்  சென்ற ஒரு வாரத்தில் அன்னத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக,வேந்தன் தான் அவரை கவனித்துக்கொண்டான்...

அன்னம் தேவியிடமும்,கதிரேசனிடமும் நிலா மற்றும் கௌதமுக்கு கூற வேண்டாம் என்றுக் கூறி விட அவர்களும் அவர்களுக்கு தகவல் சொல்லவில்லை...

அன்னத்தை  சோதித்த டாக்டர்கள் அவருக்கு கர்ப்பபையில் கட்டி இருக்கிறது என்று சொல்ல அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர்...

அப்பொழுதும் அன்னம் கூற கூடாது என்று சொல்லிவிட்டார்...அவள் தனது ப்ராஜக்டை நல்லப்படியாக முடித்து வரவேண்டும் என்று கூறிவிட அவர்கள் தகவல்களை கூறவில்லை...

வேந்தன் முதல் இரண்டு தடவை செக்கப் சென்ற பொழுது கதிரேசனையும்,தேவியையும் தனது அத்தையுடன் வருவதற்கும் அவர்கள் வீட்டில் அன்னம் தங்கி இருக்கவும் ஒத்துக் கொண்டான்...

ஆனால் அறுவைசிகிசைக்கு என்று நாள் குறித்து அன்னத்தை அவன் அழைத்து சென்றபொழுது அவன் கதிரேசனிடம் எதையும் கூறாமல் அழைத்து சென்றுவிட்டான்...தெரிந்து கதிரேசன் வந்த பொழுதும்  அவரை ஒரு பொருட்டாக அவன் மதிக்கவில்லை...

அன்னத்தின்  அறுவைசிகச்சை அப்பொழுது மருத்துவமனையில் வாங்கும் கையெழுத்து கூட அவன் தான் போட்டான்...அவரை அதற்கும் அனுமதிக்கவில்லை...

அதுமட்டுமில்லாமல் அன்னத்தை அருகில் இருந்துப் பார்த்துக் கொள்ளவும் அவன் தேவியை அனுமதிக்கவில்லை.... அன்னத்திற்கு ஒரு இரு நாட்கள் கழித்து அவன் இல்லாத பொழுது வந்த தேவி அன்னதிடம் அக்கா என்று அழைத்து அனைத்தையும் அழுதுக்கொண்டே கூற

அன்னம் வேந்தன் வந்த பிறகு பேசுவதாக கூறினார்...

சிரித்த முகத்துடன் தனது அத்தையை பார்க்க வந்தவனது முகம் அங்கே தேவியை பார்த்ததும் கோபத்தை வெளிபடுத்தியது...அன்னம் அவனிடம் இதைப் பற்றி விசாரிக்க அவனோ அவனது அத்தையிடம் அவர்கள் இங்கு வர கூடாது என்று கூறி மிகவும் அடம்பிடித்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.