(Reading time: 23 - 46 minutes)

தனது பைக்கில் தெனாவட்டாக அமர்ந்திருக்கும் அவனையே பார்த்திருந்தால் தேன்நிலா...

அந்த ,மாலை நேர காற்றிற்கு ஏற்றார் போல் அலைஅலையாய் பறக்கும் அவனது தலைமுடியில் தனது கைகளை அலைய விட அவளது மனம் ஏங்கியது...

அதையே நினைத்து அவனை அவள் பார்த்துக் கொண்டிருக்க அவளை திட்டிக்கொண்டிருந்த இருவரும் அவளிடம் எந்தவித பிரதிபலிப்பும் இல்லாமல் போக அவளை பார்க்க அவளது பார்வை முழுவதும் வேந்தனிடம் மட்டமே இருந்தது...

அதை உணர்ந்துக்கொண்ட கயல் அவளை முறைக்க பார்க்க,அசோக் தனது தலையில் அடித்துக்கொண்டான்...

அவளை முறைத்துப்பார்த்த கயல் அவளது தலையில் நங்கென்று கொட்ட...

“அம்மா...எதுக்குடி என்ன கொட்டுனா...”

“ஆமாம் இவ்வளவு நேரம் நாங்க உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா...நீ என்னான சைட் அடிச்சிட்டு இருக்க...அதான் கொட்டுனேன்...கொட்டுறதே உன்னால தாங்க முடியல...இதுல அண்ணா மட்டும் வண்டியை நிறுத்தலனா என்ன ஆகுறது...” என்று கயல் மூச்சுவிடாமல் பேச

“விடுடி...அதான் உன்னோட அண்ணா நிறுத்திட்டாருல...நான் போய்  அவர்கிட்ட பேசிட்டு  வரேன்...”என்று கூறிவிட்டு வேந்தனை நோக்கி சென்றாள் நிலா...

அவனது அருகில் அவள் செல்ல அப்பொழுதும் அவளை திரும்பி பார்க்காமல் அமர்ந்திருந்தான் வேந்தன்.

அவனது மனதில் இப்பொழுது எதற்கு இவள் வந்துள்ளால் என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது...

அவள் அவனை தினமும் பார்ப்பது அவனுக்கு தெரியும்...ஆனால் அவள் அவனை நெருங்கி பேசமாட்டாள்...

எதாவது விஷயம் என்றால் மட்டுமே அவனிடம் பேசுவாள்...அவள் எதற்கு இப்பொழுது தன்னிடம் பேசமுயல்கிறாள்  என்று யோசித்துக் கொண்டிருந்தான்...

“மச்சான் எப்படி இருக்கீங்க...கொஞ்சம் வைட் போட்டுறிகீங்க போல...அத்தயோட சாப்பாடு அவ்வளவு நல்லா இருக்குமா... ஒரு நாள் எனக்கு எடுத்துவரியா...நானும் குண்டாகுனும் அப்ப தான் நம்ம கல்யாணத்தப்ப உன்னோட பக்கதுல என்னை பார்த்த நல்லா இருக்கும்...நீ என்ன நினைக்குற மச்சான்...”

அவள் புறம் திரும்பிய மதிவேந்தன்,”இப்ப எதுக்கு வந்த அந்த விஷயத்த முதல சொல்லிட்டு போ...” என கூற

“நாளைக்கு எங்க காலேஜ்க்கு கிளாஸ் எடுக்க வரியா மச்சான்...”

“இத கேட்க தான்..இந்த சாகசம் பண்ணியா...ஆமாம் நான் நாளைக்கு என்னோட காலேஜ்க்கு வரேன்...ப்ரின்சி கால் பண்ணி சொன்னாரு...இப்ப அதுக்கு என்ன...”

“நீ கிளாஸ் எடுக்க வரகூடாது மச்சான்...” என்று தேன்நிலா கூற

“நீ சொல்லுறத எல்லாம் என்னால கேட்க முடியாது...நீ சொல்லி கேக்குற அளவுக்கு நீ ஒன்னும் எனக்கு முக்கியமானவ இல்ல...நாளைக்கு நான் காலேஜ்க்கு வருவேன்...      உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க...”என்று வேந்தன் கூற

“மச்சான் நான் ஒன்னும் செய்ய மாட்டேனு நினைச்சி நீ எதுவும் முடிவு பண்ணாத...நீ காலேஜ்க்கு நாளைக்கு  நீ பாடம் நடத்த வருவ...நாளு பொண்ணுங்க உன்ன..இல்ல..இல்ல...எல்லா பொண்ணுங்களும் சைட் அடிப்பாங்க...என்னை அதப் பார்த்துகிட்டு இருக்க சொல்லுறியா...

ஒழுங்கா சொல்லுறத கேட்டுட்டு நாளைக்கு காலேஜ் வராம இரு..இல்ல...”

“இல்ல...என்னடி பண்ணுவ...”

“என்ன பண்ணுவேனா...காலேஜ்ல இருக்குற அத்தனை பேர் முன்னாடியும் கிஸ் பண்ணிடுவேன்...குழந்தைக்கு கொடுக்குற மாதிரி கன்னத்துல கொடுப்பேனு  நினைச்சியா...டைரக்ட்டா இங்கிலீஷ் கிஸ் தான் மச்சான்(பயபுள்ள நிறைய ரொமான்ஸ் படம் பார்த்து கெட்டுப் போயிடுச்சு போல...ஆனா இம்புட்டு தைரியம் ஆகாது)...”என்று அவள் சொல்ல

“ஏய்...”என்று கை ஓங்கியிருந்தான் வேந்தன்.

தனது ஓங்கிய கையை இறக்கியவன்,”பொண்ணா பேசுடி...என்னோட அத்தையோட வளர்ப்பு தப்புன்னு இந்த ஊரு பேச வச்சிடாத...”என்று  வேந்தன் கூற

“எங்க அம்மா பெயர நான் கெடுக்க மாட்டேன்(இந்த வாக்கை காபத்திவியா..எனக்கு என்னோம நம்பிக்கை இல்லை...) அதையெல்லாம் நான் பார்த்துக்குவேன்...நீ நாளைக்கு வர கூடாது...வந்தா அப்பறம் எதுக்கும் நான் பொறுப்பு இல்ல...” என்று அவள் சொல்ல

அவளை அடிக்கும் கோபம் வந்தாலும் அதைசெய்ய முடியாமல் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன்...

“இப்ப எதுக்கு  இப்படி முறைச்சிப் பாக்குற மச்சான்...உன்னோட மூளையில இப்ப என்ன ஓடுதுனு எனக்கு  தெரியும்...அசோக் அண்ணாவ போக சொல்லு...அவங்க அந்த சப்ஜெக்ட் நல்லா எடுப்பங்கா..”என்று  அவள் சொல்ல

ஐடியாலாம் நல்லாதான் சொல்லுறா என்று அவன் அதபத்தி யோசிக்க...தான் வந்த வேலை முடிந்தது என்று நினைத்தவள் செல்ல நினைக்க,அப்பொழுது வேந்தன்அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.