(Reading time: 23 - 46 minutes)

அன்னம் தனது வீட்டில் இருக்க...அவர் கொடுத்த புதுபாவாடை  தாவணி அணிந்தவள்...தனது அன்னையிடம் காமிப்பதற்காக காத்துக்கொண்டிருக்க...அன்னத்தின்  உறவுகள் வந்ததால் மல்லி மட்டும் வீட்டு வேலை பார்த்துக்கொள்ளுவதால் அவளுக்கு உதவி செய்ய அன்னம் அங்கே இருந்துக் கொள்ள...தனது அன்னையிடம் காட்டுவதற்காக தேன்நிலா அன்னம் வீட்டிற்கு வந்தாள்...

அப்பொழுது அங்கு இருந்த அன்னத்தின் சொந்தகாரர்கள் பேசுவதை எதற்சையாக தேன்நிலா கேட்க நேர்ந்தது...அவர்கள் வேல்விழிக்கும்,வேந்தனிற்கும் திருமணம் செய்வதை பத்தி மரகதத்திடம் பேசிக்கொண்டிருக்க அதற்கு மரகதமும் அவர்களுக்கு தான் தாங்கள் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளதாக கூற

“உன் நினைப்பு நெஞ்சு

        குழி வர இருக்கு..

என் உலகம் முழுசும் உன்னை

        சுத்தி சுத்தி கிடக்கு...

மனசுல ஒருவித வலிதான்

சுகமா...சுகமா.

எனக்குள்ள உருக்குற உன்னையும்

நீயும் நெஜமா... நெஜமா...

கண்ணே கண்ணே காலம்

தோறும் என்கூட நீ மட்டும்

 போதும் போதும் நீ நாளும்...”

ஒருநிமிடம் தேன்நிலாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...அவளது மதிமச்சான்  அவளுக்கு இல்லாமல் போக கூடும் என்று அவள் உணர்ந்த அந்த நொடி தான் அவள் தன் மனதில் வந்தது ஈர்ப்பு இல்லை...காதல் என்று புரிந்துக்கொண்டாள்....

தனது மச்சானிடம்  இதை இன்றே கூற வேண்டும் என்று நினைத்தாள் தேன்நிலா...

அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தாள் அவள்... மாலை அனைவரும்  கோவில் சென்றிருக்க... மல்லி தான் வேண்டுதலுக்காக அம்மனுக்கு சில நகைகள் செய்து வைத்திருந்தார்...அதில் ஒரு சில நகையை வீட்டிலே மறந்து வைத்துவிட அதை எடுக்க மதிவேந்தனை வீட்டிற்கு அனுப்பினார்...இதையெல்லாம் அன்னத்தின் அருகில் இருந்துக் கவனித்துக்கொண்டிருந்த மதி அவனை பின்தொடர்ந்து சென்றாள்...

ஊரே கோவிலில் இருந்ததால்  தெரு அனைத்தும் அமைதியாக இருக்க  இவர்களை கவனிப்பவர்கள் யாரும் இல்லை...

தனது பைக்கை பின்தொடர்ந்து வரும் அவளது சைக்கிளைப் பார்த்தவன்...அவள் தன்னை பின் தொடர்ந்து வருவதை புரிந்துக் கொண்டவன்... தனது பைக்கை ஓரமாக நிறுத்தி அவளை பார்த்தான்...

அவன் தான் பின்தொடர்வது தெரிந்து தான் அங்கு நின்றிருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவள்...அவனுக்கு அருகில் தனது சைக்கிளை நிறுத்தினாள்...

அவனுக்கு ஓரளவு விஷயம் தெரியும் என்று யூகித்துவிட்டாள் தேன்நிலா.. அவளை அவன் தீர்க்கமாக பார்க்க அதை புரிந்துக் கொண்டவள் அவனிடம் தான் நினைத்ததை பேச வாய் திறக்க

“நிலா...நீ பண்றது நல்லதுக்கு இல்லை...ஒழுங்கா படிக்குற வேலையப் பாரு...”என்று அவன் கூற

“இல்லை மச்சான்...” என்று அவள் எதுவோ பேச வர

“நிலா...நீ என்ன பண்ணிட்டு இருக்குறனு புரியாத அளவுக்கு நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல...நீ நினைக்கிறது என்னைக்கும் நடக்காது...அதுவும் இல்லமா உன்னை வளர்த்த எங்க அத்தை பேர கேடுத்துடாத...இது எல்லாம் இந்த வயசுல வர ஈர்ப்பு தான் இது...           அதனா ஒழுங்கா படிக்குற வேலைய  பாரு...” என்று அவ்வளவு தான் .முடிந்துவிட்டு  என்பதுபோல் அவன் தனது பைக்கை கிளப்ப

அவன் முன்னால் வந்து நின்ற தேன்நிலா,”மச்சான் நான் சொல்லுறதா நல்லா கேட்டுட்டு போங்க...நீங்க சொன்னீங்கள  ஈர்ப்புன்னு ...அது மாதிரி தான் நானும் நினைச்சேன்...முத தடவனு இல்லமா...பல தடவ உங்க நினைப்பு வரப்ப...

ஆனா எனக்கு போக போக தான் புரிஞ்சுது இது ஈர்ப்புல்லன்னு...இருந்தாலும் எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருந்தது...ஆனா,இன்னைக்கி உங்க சொந்தகாரங்க எல்லாம் பேசினப்ப மரகதப்பாட்டியும் அவங்க கூட சேர்ந்து உங்களுக்கு வேல்விழிய தான் கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா சொன்னாங்களோ அப்ப தான் மச்சான் நான் புரிஞ்சுக்கிட்டேன்...நான் உங்கள எவ்வளவு லவ் பண்றேன்னு இன்னைக்கி தான் புரிஞ்சுகிட்டேன் மச்சான்..ஐ லவ் யூ மச்சான்...” என்று அவள் சொல்ல அவள் கடைசியில் சொன்ன வார்த்தையில் கோபம் அடைந்தவன்

தனது கோபத்தை எதில் காண்பிபது என்று தெரியாமல் தனது வண்டியின் கண்ணாடியை உடைத்தவன்...”நீயெல்லாம் சொன்னா புரிஞ்சுக்க மாட்ட...அனுபவப்பட்டா தான் உனக்குயெல்லாம் புத்தி வரும் என்று கூறிவிட்டு அவளைக்  கடந்து சென்றுவிட்டான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.