(Reading time: 23 - 46 minutes)

அவர் அவன் பேச்சை கேட்டால் அவர் கூறுவதை தான் கேட்பதாக கூறினான்...அன்னத்திடம் கெஞ்சி,கொஞ்சி,கோபித்து எப்படியோ தான் நினைத்ததை சாதித்தான் வேந்தன்...

தனது அண்ணன் மகனிற்காகவும்,தன்னை பார்க்க வரும் தனது வீட்டு ஆட்கள் எப்படியும் தேவியை அங்கு பார்த்தால் அவளது மனது புண்படும்படி பேசுவார்கள் என்றும் நினைத்தவர் தேவியை வர வேண்டாம் என்று கூறிவிட தேவி வரவில்லை...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அன்னத்தின் குடும்பமே அவரை கையில் வைத்து தாங்கியது...தனது அத்தையை தனது கண்ணுக்குள் வைத்து தங்கினான் வேந்தன்..

நாட்கள் றெக்கை கட்டிப்பறக்க...தனது ப்ராஜெக்டை முடித்துக்கொண்டு தேன்நிலாவும்,கயலும் ஊருக்கு திரும்பினர்...கௌதமிற்கு கடைசி நிமிடத்தில் ஆபீஸ் வேலையாக வெளியில் செல்ல வேண்டி இருந்ததால் அவன் இவர்களுடன் வர முடியாமல் போனது...

மெல்ல வெளிச்சம் படர்ந்த இருளாய் இருந்த விடியற்காலையில் தனது ஊரை வந்தடைந்தனர் இருவரும்...

பேருந்தை விட்டு அவள் இறங்கிய உடன் அவளது கண்களில் முதலில் விழுந்தது அவளது மதி மச்சான் தான்..

தனது பைக்கிள் வந்துக் கொண்டிருந்தான்...அவனை பார்த்தவுடன் அந்த பயணகளைப்பையும் மீறி அவளது உதடுகளில் புன்னகை மலர்ந்தது...அவளது மச்சானை பார்த்து முழுவதாய் நாற்பது நாட்களை தாண்டி இருந்தது...தனது மன்னவனை தனது கண்களில் நிரப்பிக்  கொண்டிருந்தாள் தேன்நிலா...

அவளது அருகில் வந்து அவன் பைக்கை அவன் நிறுத்தினான்...அவன் தனது அருகில் வந்து பைக்கை நிறுத்தியதும் இன்பமாக அதிர்ந்தவள்...அவனை  ஆசையுடன் நிமிர்ந்துப்பார்க்க அவனோ ருத்துர மூர்த்தியாக அவளை முறைத்துக் கொண்டிருந்தான்...

”ம..” என்று அவள் வாய்திற்பதற்குள் முன்னாலே அவனது கோபத்தை அவள் மீது தெளித்தான் வேந்தன்...

“ஏய்..உன்னோட குடும்பத்துக்கு எங்க அத்தை என்ன வேலைகாரிய...”என்று அவன் கேட்க

“எதுக்கு மச்சான் இப்படி பேசுறீங்க..அம்மாவ அப்படிலாம் சொல்லாதீங்க...”என்று அவள் கூற

“சும்மா உங்க அப்பன் மாதிரி நடிக்காதடி...உனக்கு என்னோட அத்தை ஆயா வேலைப் பாக்குற ஆளு..உன்னோட அப்பனுக்கும் உன்னோட வீட்டுல இருக்குற அந்த பொம்பளைக்கும் எங்க அத்தை என்ன வேலைக்காரியா...” என்று அவன் கேட்க

“மச்சான்...அப்பாவையும்...தேவியாம்மவையும்...அப்படி பேசாதீங்க...அதே மாதிரி அம்மாவ வேலைக்காரினு சொல்லாதீங்க உங்களுக்கே தெரியும் நான் தேவிம்மாவை கூட அம்மான்னு கூப்பிட மாட்டேன் அவங்கள தேவிம்மானு தான் கூப்பிடுவேன்...அம்மாவ மட்டும் தான் அம்மானு கூப்பிடுறேன்...எதுக்கு மச்சான் இப்படி பேசுறீங்க...”என்று தேன்நிலா கேட்க

“ஓவரா நடிக்காதடி உங்க குடும்பத்துக்கு  நடிக்க சொல்லியா தரனும்...உங்க அப்பன் அளவுக்கு நீயும் நல்லாதான் நடிக்குற...”என்று  வேந்தன் கூற

தனது தந்தையை அவன் மரியாதை இல்லாமல் பேசுவதை பார்த்தவள் கோபம் கொண்டு

“மச்சான் அப்பாவா மரியாதையில்லாம பேசுறீங்க…இப்படி பேசாதீங்க எனக்கு கோபம் வரும்..நாங்க ஒன்னும் நடிக்கலாம் இல்லை...”என்று தேன்நிலா கூற

“பொய் சொல்லாதடி..இந்த ஒரு மாசமா என்னோட அத்தைக்கு உடம்பு சரியில்லாம போய் அவங்களுக்கு ஆபரேசன் பண்ணுச்சு..ஆனா,உன்னை ஆளையே காணும்...”என்று அவன் கூற

அவன் கூறிய  அந்த செய்தியில் அதிர்ச்சி அடைந்தவள்...பதறியபடி...”ம...ம..மச்சான்  அ... அம்மாவுக்கு என்ன ஆச்சு...”என்று அவனை கேட்க

“அப்பா...என்ன நடிப்புடா சாமி...உங்கள மாதிரி யாராலையும் நடிக்க முடியாது...”என்று அவன் மேலும் பேச...அவன் கூற வருவதை கேட்காமல் தனது அம்மாவை காண கண்ணீருடன் ஓடினால் தேன்நிலா...

அவன் கூறிய வார்த்தைகள் அவளை காயப்படுத்தி இருந்தாலும் அதை பற்றி நினைக்க அவளுக்கு இப்பொழுது நேரம் இல்லை... தனது அன்னையை பார்க்கும் நினைப்பு மட்டும் தான்  அவளிடம் இருந்தது...தனது அன்னையின் இல்லம் நோக்கி சென்றாள்...

அன்னத்தின் இல்லத்தை நோக்கி செல்ல...அவள் செல்வதையே கோபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் வேந்தன்...

Kathal kathalitha kathaliyai kathalikkum

காதலி காதலிக்க படுவாளா...

Episode # 05

Episode # 07

Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page

{kunena_discuss:1175}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.