(Reading time: 23 - 46 minutes)

“இன்னைக்கி காலேஜ்ல இருக்குற பொண்ணுங்க என்னை சைட் அடிக்க கூடாதுனு... இப்படி நீ பண்ற...இன்னும் கொஞ்சநாள்ல நான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு மொத்தமா நான் அவளுக்கு  சொந்தமாக போறேன்...அப்ப என்ன பண்ணுவ...அதனால உன்னோட மனசுல எந்த ஆசையும் வசுக்கமா ஒழுங்கா படிக்குற வேலையப் பாரு...” என்று கூற

அவனை பார்த்தவள்,”என்னை தவிர உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க...தேவையில்லாம இப்படி பேசிகிட்டு சுத்தாத...” என்று அவள் கூற

“நீ முடிவு பண்ணிட்டா எல்லாம் நடந்துடும்னு நினைக்குறியா...” என்று அவன் கேட்க

“நான் முடிவு பண்றது எல்லாம் நடக்கும்னா எனக்கு தெரியாது...ஆனா உன்னோட விஷயத்துல நான் நினைக்குறது மட்டும் தான் நடக்கும் மச்சான்...என்னை தவிர நீ வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க ரெண்டு வழி தான் இருக்கு...ஒண்ணு நானா உன்னை விட்டு தரனும்...அது இந்த ஜென்மத்துல நடக்க சான்ஸ் இல்ல(அப்படியா...), இன்னொரு வழி நான் செத்து போறது...பொறு மச்சான்...அதுவேணா நடக்க சான்ஸ் இருக்கு...நான் சொல்லுறது புரிதா...”என்று விட்டு கயலை அழைத்துக் கொண்டு தனது வீடு நோக்கி செல்ல ஆரமித்தாள் நிலா...

அவளது பதிலில் அதில் இருந்த உறுதியில்  அவன் ஒரு நிமிடம் திகைத்து தான் போனான்...

நிலாவும்,கயலும் சென்ற உடன் நிலா சொன்னது போல் அசோக்கிடம் அவனையே நாளை கல்லூரிக்கு செல்லுமாறு  கூறினான்.                                                

அவன் அவ்வாறு கூறியதும் அவனை ஒரு மார்கமாக அசோக் பார்க்க அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்த வேந்தன்..”நீ நினைக்கிற மாதிரி எதுவும் இங்க இல்ல...அவ சொன்னத செஞ்சாலும் செஞ்சுடுவா...” என்று வேந்தன் சொல்ல அவனின் நிலையை நினைத்த அசோகிற்கு சிரிப்பு தான் வந்தது...

அசோகிற்கு தெரிந்து வேந்தனால் சமாளிக்க முடியாத ஆட்கள்  அவன் குடும்பமும்,தேன்நிலா மட்டும் தான்...தன் குடும்பத்தை கூட ஓரளவிற்கு மேல் சமாளிக்க முடிந்த அவனால் தேன்நிலாவை மட்டும் சமாளிக்க முடியவில்லை....

வீட்டிற்கு  நிலா செல்லும் பொழுது மணி ஆறை கடந்து இருந்தது...தேவியும்,அன்னமும் திண்ணையில் அமர்ந்திருந்தனர்...அவர்களுடன் கதிரேசன் அன்னை சாந்தாவும் அமர்ந்திருந்தார்..

நிலா வரவும்...”எங்கடி போன இவ்வளவு நேரம்...பொழுதுபோனப் பிறகு தான் வரதா... பள்ளிகூடம் எப்பவே முடிஞ்சி இருக்குமே...”என்று சாந்தா கேட்க

“பாட்டி உன்னோட கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது...நான் ரொம்ப களைப்பா இருக்கேன்...தேவிமா எனக்கு ஒரு டீ...”என்றுக் கூறியவள் அன்னம் மடியில் படுத்துக்கொண்டாள்...

“இங்கபாருடி செல்லம் பாட்டி...இப்படி கேட்டனு கோச்சிக்காதா...ஊர்ல உலகத்துல நடக்குற நியூஸ் கேட்டா எனக்கு பயமா  இருக்கு...அதான்டி...இப்ப யாரையுமே நம்ப முடியல...”என்றுக் கூறியவர் தனது பேத்தியின் கன்னத்தை வழித்து முத்தம் வைத்தார்...

“புரிதுப்பாட்டி உன்னோட அக்கறை... நான் அம்மாக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்...இனிமே சீக்கிரம் வரேன்...”என்று அவள் கூறவும் கதிரேசன் வரவும் சரியாக இருந்தது...

“தேன்குட்டி எழுந்துரு அப்பா வராரு  பாரு...நான் போய் குடிக்க தண்ணீ எடுத்துட்டு வந்து தரேன்... நீயும் போய் கைகால் கழுவிட்டு டிரெஸ் மாத்திட்டு வா...”என்று விட்டு அன்னம் செல்ல நிலாவும் தனது அறையை நோக்கி செல்ல  ஆரம்பித்தாள்....உடை மாற்றி வந்தவள் தனது தந்தை,தாய்களுடன் சிறிதுநேரம் கழித்தவள்... தனது அண்ணன்  கால் பண்ண அவனுடனும் பேசிவிட்டு...இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்க சென்றனர்...

இன்று மதிவேந்தனை பார்த்து பேசிய சந்தோசத்திலே தேன்நிலா நன்கு தூங்க ஆரம்பித்தாள்..

சாப்பிட்டு வந்தவன் தனது அறையில் தூக்கம் வராமல் பைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்...அவனால் வேறு எதிலும் தனது  கவனத்தை செலுத்த முடியவில்லை...

மதியம் நிலா பேசியதே அவனது நினைவில் வந்து சென்றது.... அவள் நினைப்பது எதுவும் நடக்க போவதில்லை என்று அவனது மனது நினைத்தாலும் அவளது அந்த உறுதியான பேச்சில்...அவள் எதாவது செய்து அது தனது குடும்பத்தையே மற்றவர்களையோ பாதித்துவிடுமோ என்று யோசிக்க ஆரம்பித்தான் வேந்தன்...

அப்படி அவன் யோசிக்கும் பொழுது அவள் முதன்முதலில் தன்னிடம் அவளது காதலை சொன்னதை நினைவு வந்து சென்றது...

நிலா கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்த காலம் அது...வேந்தன் தனது தந்தை தொழிலை எடுத்து பார்த்துக்கொள்ள ஆரம்பித்த நேரம் ... நிலா தன்னை பார்க்கும் பார்வையில் ஒரு வேறுபாட்டை உணர்ந்திருந்தான் அவன்...ஆனால் அவளை தவிர்ப்பதால் அவளிடம் அவனால் நேரடியாக சொல்ல முடியவில்லை...

சரி எப்பொழுதாவது அவளை நேருக்கு நேர் சந்திக்கும் நாள் வரும் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் அதை அப்படியே  விட்டுவிட்டான்...

அவன் எதிர்பார்த்த நாளும் வந்தது...அந்த வருட திருவிழா வர ஊரே களைக்கட்ட தொடங்கியது...வேல்விழி,தனம் என அனைவரும் திருவிழாவிற்கு வந்திருந்தனர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.