(Reading time: 12 - 24 minutes)

“நா நல்லாயிருக்கேன் மா நீ எப்படியிருக்க அப்பா எப்படியிருக்காரு?”

“அவருக்கென்ன நல்லாயிருக்காரு எனக்கு தான்..”

“ம்மா என்னாச்சு நல்லாயிருக்க தான..”

“அப்படி சொல்லனும்னுதான் எனக்கும் ஆசை டா..ஆனா நிஜமா நல்லாயில்லை டா..என்க்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு வெண்பா மா..”

“என்னமா என்னவோ போல பேசுற!?”

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக் டா வெண்பா..ரொம்பவே கஷ்டப்பட்டு தான் பொழைக்க வச்சாங்க..”

“ம்மாமா என்ன சொல்ற நீ ஏன் என்கிட்ட சொல்லவேயில்ல.இப்போ எப்படிமா இருக்க..மாத்திரையெல்லாம் ஒழுங்கா போடுறியா?”

“இப்போ பரவால்ல வெண்பா..ஆனா உன்னை பார்க்கணும் போல இருக்கு அம்மாவ பார்க்க வருவியா டா..”

“ம்மாமா அது திவாகிட்ட கேட்டு சொல்றேன்ம்மா..கண்டிப்பா நாங்க ரெண்டு பேரும் சீக்கிரமே வரோம்..”,என்றவளின் பதிலைக் கேட்டு மறுபுறம் பல்லை கடித்தவர் அதை காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடு பட்டார்.

“ஓ..”

“ம்மா தப்பா எடுத்துக்காத அவர்கிட்ட கேக்காம நா சொல்ல முடியாதுல நீ புரிஞ்சுக்கோயேன்..”

“சரிம்மா என்ன இருந்தாலும் உனக்கு உன் புருஷன் முக்கியம்..சரி விடு நா வேணா உன்னை பார்க்க வரலாமா வெண்பா..”

“என்னம்மா இப்படி கேக்குற நீ எப்போ வேணா வரலாம்..ஆனா உன் ஹெல்த்..”

“அதெல்லாம் ஒண்ணும் ப்ரச்னையில்ல வெண்பா..எனக்கும் இட மாறுதல் தேவையோனு தோணுது..சரி நா அப்பாகிட்ட பேசி டிக்கெட் போட்டுட்டு சொல்றேன்மா..வச்சுட்றேன்..”

போனை வைத்தவளின் மனம் ஆனந்த களிப்பில் பொங்கியது.என்னதான் இருந்தாலும் பெற்றவளின் குரலும் அரவணைப்பும் என்றுமே தனி சுகமாயிற்றே.மாலை திவ்யாந்திடம் அனைத்தையும் கூறியவள் குழந்தையாய் ஆர்பரித்தாள்.

“திவா ஐ அம் சோ சோ ஹேப்பி..அம்மா என்னை பார்க்க வரேன்னு சொன்னதும் எனக்கு எப்படியிருந்தது தெரியுமா..”

“இவ்ளோ பாசத்தை வச்சுகிட்டு இத்தனை நாள் மனசுகுள்ளேயே வச்சுட்டு இருந்துருக்க ஹம்ம்..எனக்கு உன் கண்ணை பாத்தாலே தெரியும் பல நேரத்துல நீ அவங்களை தேடுறனு..இருந்தும் அதை கேட்டு உன்னை கஷ்டப்படுத்த வேண்டாமேனுதான் அமைதியாவே இருப்பேன் கண்ணம்மா..இப்போதான் உன் சிரிப்புக்கு இன்னும் கொஞ்சம் ஜீவன் சேர்ந்த மாதிரி இருக்கு..”

“திவா..அது..”

“கண்ணம்மா உன் இமை அசைவுக்கும் எனக்கு அர்த்தம் தெரியும் அதுல பெரிய கர்வமே இருக்கு எனக்கு அதுக்காக தான் சொன்னனே தவிர தப்பா எதுவும் சொல்லல டா..”

“தெரியும் டா திவா..சும்மா..”,என்றவள் பழிப்புகாட்டி ஓடிவிட அத்தனை உற்சாகமாய் அவளைப் பார்த்தவனுக்கு மனம் மகிழ்ந்துதான் போனது.

அடூத்து வந்த நாட்கள் அத்தனையுமே ஒருவித உற்சாகத்தோடே நகர்ந்தது வெண்பாவிற்கு.வார இறுதியில் அவளை டின்னருக்காக வெளியே அழைத்துச் சென்றிருந்தான்.

“அப்பறம் அம்மாகிட்ட பேசினியா கண்ணம்மா?”

“ம்ம் திவா..நானே கால் பண்ணேன் இங்க வர்ற வேலையெல்லாம் முடிக்குறதுல பிசியா இருக்காங்களாம் அவங்களே கூப்டுறேன்னு சொல்லிட்டாங்க..”

“ஓ..சரி..அப்பறம் கண்ணம்மா..ஒரு விஷயம் சொல்லணும்..”

“ஏன் திவா இவ்ளோ தயக்கம்?என்னனு சொல்லுங்க..”

“பார்சூனேட்லி நம்மளோட இந்த ஒன் இயர் நா ஓரளவு ரிலாக்ஸ்டானா லைஃப் தான் நமக்கு போச்சு.அதாவது என்ன சொல்ல வரேன்னா ஏற்கனவே சொல்லிருந்த மாதிரி என் வேலை எப்போ எப்படியிருக்கும்னு தெரியாது..

அடுத்த மாசத்துல இருந்து மெடிக்கல் காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்க்கு பொரொபஸரா போக வேண்டியது இருக்கு கண்ணம்மா..”

“வாவ் இது நல்ல விஷயம் தான திவா இதுக்கு ஏன் இவ்ளோ யோசிச்சீங்க..”

“இல்லடா அது என்னனா மார்னிங் டூ நூன் காலேஜ் அதுக்கப்பறம் வழக்கமான என் டியூட்டி. சோ கொஞ்சநாளுக்கு இட் வில் பி ஹெக்டிக்..எனக்கு இது பழகின விஷயம் தான்.ஆனா உனக்கு ரொம்பவே புதுசா இருக்கும்.எப்போ வருவேன் எப்போ கிளம்புவேன்னு சொல்ல முடியாது..எல்லாம் ஆல்ரெடி சொல்லிட்டேன் தான் இருந்தாலும் இப்போ ப்ராக்டிக்கலா வரும்போது எனக்கே கொஞ்சம் ஏத்துக்க கஷ்டமா இருக்கு..”

“திவா..என்ன இது குழந்தை மாதிரி..நீங்க எப்போ எங்கயிருந்தாலும் என் திவாங்கிறது மாறிட போகுதா..உங்க ப்ரோபஷன் மேல நீங்க வச்சுருக்குற லவ் அண்ட் பேஷன் எனக்கு நல்லாவே தெரியும்.அப்படியிருக்கும் போது இதெல்லாம் பொறுத்துக்க மாட்டேனா..

நீங்க ஒழுங்கா உங்க வேலைல கான்சென்ட்ரேட் பண்ணுங்க நானும் எப்படியும் அம்மா வந்தா பிஸி ஆயிடுவேன்..சோ உங்க வழிக்கு வரமாட்டேன்...”,என்று விளையாட்டாய் முடித்தவளைப் பார்த்தவனுக்கு ஒருவித நிம்மதி பரவியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.