(Reading time: 12 - 24 minutes)

“திவா நாளைக்கு நாட்டியாலயா டே செலெப்ரேஷன் இருக்கு..நீங்க வருவீங்க தான?”

“கண்டிப்பா டா..நா இல்லாம உன் ப்ரோக்ராமா அதுவும் கல்யாணத்துக்கு அப்பறம் நீ கொடுக்கப் போற முதல் பெர்பார்மன்ஸ் அதை மிஸ் பண்ணுவேனா?”

மறுநாள் வெண்பா காலையிலேயே நடனப் பள்ளிக்குச் சென்றிருக்க மதியத்திற்கு மேல் மருத்துவமனைக்குச் சென்று ஒரு பைலை எடுத்து வந்தவன் அதை தன் அலமாரியில் மத்த பைல்களோடு சேர்த்து வைத்துவிட்டு கிளம்பத் தயாரானான்.

அந்த மாலையின் நாயகி வெண்பா என்றே கூற வேண்டும் அந்தளவுக்கு அவள் அலங்காரமும் ஒப்பனையும் நேர்த்தியான நடனமும் ஒருவித மாயையே தோற்று வித்திருந்தது திவ்யாந்திற்கு.ஒவ்வொரு முறையும் அவள் பார்வை தன்னை தீண்டும் போதும் அதிலிருந்த ஏதோ ஒன்று மீண்டும் மீண்டுமாய் அவள்மீது காதல் கொள்ளச் செய்து கொண்டேயிருந்தது நிச்சயமாய்.

அன்று இரவு திவாவின் கையணைப்பில் இருந்தவள் அவனிடம்,

“திவா ஆனாலும் நீங்க கொஞ்சமே கொஞ்சம் ஸ்மார்டா இருக்கீங்களோ?”

“என்ன??”,சட்டென அவன் கேட்ட விதத்தில் சிரித்தவள்

“எதுக்கு இப்படி ஒரு ஷாக், இல்ல இன்னைக்கு ப்ரோக்ராம்ல ஜுனியர் டீச்சர்ஸ் புதுசா ஜாயின் பண்ணிருகாங்க உங்களைபத்தி அப்படி ஒரு கமெண்ட் என்னால சிரிப்பை கன்ட்ரோல் பண்ணவே முடில..”

“என்ன சைட் அடிக்குறத பாத்தா உனக்கு சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடிலயா?”,என செல்லமாக அவள் கன்னம் கிள்ள அவளோ இன்னும் சிரித்தவாறே,

“ஐயோ திவா அப்படியில்ல..அவங்க பேசினதை கேட்டு சிரிப்பு வந்துச்சுனு சொன்னேன்.அப்பறம்தான் பார்த்தா என் புருஷன் கொஞ்சமே கொஞ்சம் அழகோனு தோணிச்சு..”

“அதனால தான் ஆடும்போது அப்பப்போ என்னை பார்த்துட்டே இருந்தியா?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல என் திவா நா பாப்பேன் எப்போ வேணாலும் எப்படி வேணாலும்..அதே தான் உங்களுக்கும் என்னை தவிர யாரையாவது பார்த்தீங்க கொன்னுருவேன்..”,என்றபடி மீசையை திருகிச் சிரித்தாள்.

“ம்ம் பார்க்க வேண்டிய காலத்துலயே நானெல்லாம் அவ்ளோ குட்பாய் இப்போ கல்யாணத்துக்கு அப்பறமா அதெல்லாம் பண்ண போறேன்.சாகுறவர எனக்கே எனக்கு மட்டுமான என் கண்ணம்மா போதும்”,என்று தன்னவளோடு ஒன்றிக் கொண்டான்.

அதே நேரம் அங்கு துபாயில்,”வாவ் மிஸ்டர் ஆனந்த் இது உங்க பொண்ணா இதுவரை நா பாத்ததேயில்லையே?”

“அவ இந்தியால இருக்கா மிஸ்டர் கிஷோர் டான்ஸ் டியூட்டரா இருக்கா..”

“தட்ஸ் இன்ட்ரெஸ்டிங்..ஆனந்த் உங்ககிட்ட நேரடியாவே கேக்குறேன்..ஐ லவ் திஸ் கேர்ள்.எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதமா?ஒரு வேளை அது உறுதியாகுற பட்சத்துல இப்போ நம்ம ஸைன் பண்ணிருக்குற கான்ட்ராக்டை மொத்தமா உங்களுக்கே கொடுத்துடுறேன்.இட்ஸ் அ டீல்..

ஒரு பிஸினஸ் மேனா என்னால இப்படி தான் கேக்க முடியும் பட் ட்ரஸ்ட் மீ இதுவரை எந்த பொண்ணையும் நா நிமிர்ந்து பார்த்ததுகூட இல்ல.என் வசதியின் உயரம் உங்களுக்கு தெரியும் ஆனா அதை தப்பான வழியில் நா எப்பவும் யூஸ் பண்ண நினைச்சதில்ல.

சோ உங்க முடிவை நீங்க யோசிச்சு உங்க பொண்ணுகிட்ட பேசிட்டு சொல்லுங்க..”

“அது வந்து சார்..”,என்றவரை கைப்பற்றி நிறுத்திய சுலோச்சனா அவனிடம்,

“மிஸ்டர் கிஷோர் நாங்க பேசிட்டு சீக்கிரமே நல்ல முடிவா சொல்றோம்”,என்று புன்னகையோடு வழியனுப்பி வைத்தார்.

“என்ன சுலோ வெண்பாக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு சொல்லிற வேண்டியதுதான..ஏன் இப்படி சொன்ன?”

“என்னங்க பேசுறீங்க..இந்த ப்ராஜெக்ட் மதிப்பு தெரியும் தான இந்திய பணமதிப்பு படி நூறுகோடி..அதுவும் மொத்தம்மா கிடைச்சா கொஞ்சமாவது யோசிங்க ஆனந்த் நம்ம மதிப்பு எங்கேயோ போய்டும்..அதுவும் கிஷோரோட மாமனார் மாமியார்னா நம்ம ஸ்டேடஸ் எப்படி இருக்கும்னு யோசிச்சீங்களா?”

“எல்லாம் சரிதான் ஆனாலும்..”

“ஆனாலும் என்ன ஆனாலும்..அவ ஏதோ சின்ன புள்ளை தனமா விளையாட்டு கல்யாணம் பண்ணிகிட்டா அதெல்லாம் பெரிய விஷயமா..ஒரு வருஷத்துக்கும் மேல இருக்குமே முதல்ல அங்க நிலைமையை விசாரிப்போம்..நா அடுத்த மாசமே இந்தியா போறேன்.

அவ என் பொண்ணு நா சொன்னா கேப்பா..டிவோர்ஸ் வாங்கின கையோட அவளை இங்க கூட்டிட்டு வரேன்.இதுக்குமேல பேச ஒண்ணுமில்ல ஆனந்த் இந்த ப்ரச்சனையை நா பாத்துக்குறேன்.கிஷோரை சமாளிக்குறது மட்டும் உங்க வேலை..காட் இட்..”

இரண்டு நாட்கள் கழித்து வெண்பாவிற்கு போனில் அழைத்தார் சுலோச்சனா.

“ஹலோ அம்மா!!!”

“வெண்பா எப்படிமா இருக்க?”

தன் செவிகளை தானே நம்பாமல் விழிவிரிய கண்களில் நீர்கோர்க்க அமர்ந்திருந்தாள் வெண்பா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.