(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 10 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

வெண்ணிலா

என் மேல் கோபம் ஏன்

ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ

காதலே

உன் பேர் மௌனமா

நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம் வளர்ப்பது சரியா சரியா சரியா

தொலைவில் தொடு வான் கரையை தொடும் தொடும்

அருகில் நெருங்க விலகி விடும் விடும்

இருவர் மனதில் ஏனொ அடம் அடம்

ஓருவர் பார்த்தால் மூடும் உடைபடும்

காதலா

ஓர் வார்த்தை சொல்லடா

முதல் வார்த்தை நீ சொன்னால்

நான் மறு வார்த்தை சொல்வேன்

நான் தினம் சொல்வேன்

எந்தன் காதல் சொல்வேன்

ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்

நினைவிலிருந்து மீண்டவனுக்குத் தெரியும் அந்த நொடியிலிருந்து தன் கண்ணம்மாவை கோடி மடங்கு காதலிக்கத் தொடங்கியிருந்தான் அவன் என.அத்தனை பெரிய குறையிருப்பதாய் கூறிய அடுத்த நொடி ஒன்றையும் யோசிக்காமல் நான் இருக்கிறேன் என்று கூறுபவளை எப்படியாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றியது.

வெண்பாவிற்கு நிச்சயமாகவே அந்த செய்தி சிறு அதிர்வை கொடுத்திருந்தாலும் வாழ்வே முடிந்துவிட்டது என்ற முடிவுக்கெல்லாம் வந்து விடவில்லை.தன்னவனை அந்த செய்தியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவளுக்கு பிரதானமாய் இருந்தது.

நினைவுகளை புறந்தள்ளியவன் அனைத்தையுமாய் ஓரளவு பேக் செய்துவிட்டு சிந்தம்மாவிற்கும் தனக்குமாய் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வந்தான்.அதற்குள் வெண்பாவிற்காக கஞ்சியை போட்டு வைத்தவர் உணவை முடித்து அவனோடு மருத்துவமனைக்குக் கிளம்பினார்.

இருவரும் உள்ளே நுழைந்த நேரம் வாசலையே வெறித்தப்படி வெண்பா விழித்துதான் இருந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இப்போ எப்படி இருக்கு பாப்பா?”

“பரவால்ல சிந்தாம்மா உங்களை தான் ரொம்ப படுத்துறேன்..சாரி..”

“என் பிள்ளைங்களுக்கு நா பண்ணாம யாரு பண்ண போறா ஏன் இப்டியெல்லாம் பேசுற கண்ணு..நாளைக்கு நீ மறுபடி நம்ம வீட்டுக்கு வரப் போறதே அத்தனை பலம் கொடுத்துருக்கு எனக்கு..”

அமைதியாகவே சிரிப்பை உதிர்த்தவள் அத்தனை நேரமும் பார்வையாளனாய் மட்டுமே இருந்த திவ்யாந்தை ஓரப் பார்வை பார்த்தாள்.மெதுவாய் வந்து அவளருகில் அமர்ந்தவன்,

“எப்படியிருக்க கண்ணம்மா..”

“பீலிங் பெட்டர் திவா..”

“குட் இன்னைக்கு புல்லா ரெஸ்ட் எடு நாளைக்கு இன்னுமும் நல்லா தெம்பாய்டுவ..கஞ்சி கொண்டு வந்துருக்காங்க சிந்தாம்மா கொஞ்மா சாப்டு..”

“இல்ல இப்போ எதுவும் வேணாம்..சாப்பிட தோணல..”

என்றவளை பார்த்தவாறே எழுந்து சென்றவன் கஞ்சியையும் ஸ்பூனையும் எடுத்துக் கொண்டு வந்தான்.அவனே அவளுக்கு ஊட்டிவிட மறுப்பேதும் கூறாமல் வாங்கிக் கொண்டாள்.

அதன் பின் மீண்டும் அவள் உறங்கும் வரையுமே அந்த அறையை விட்டு நகராதவன் அவளோடு ஒரு வார்த்தையும் பேசவில்லை.அவளுக்கு புரிந்தது மேலும் தன்னை குழப்ப வேண்டாம் என ஒதுங்குகிறான்.எது எப்படியாயினும் நாளை முல் தன் வாழ்க்கை திருமதி திவ்யாந்தாய் அந்த வீட்டில் தான் என்பதை தீர்மானித்து விட்டான் என்றே தோன்றியது.

அவள் உறங்கிய பின் சிந்தாம்மாவிடம் கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பியவன் தன்னவளுக்காய் வீட்டையே ஒருவழி ஆக்கினான்.அவர்களின் அறையை ஒழுங்குபடுத்தி சுத்தம் செய்து என ஒருவித உற்சாகத்தோடு இருந்தான்.

அன்றைய மொத்த நாளும் எத்தனையோ அலைச்சலும் வேலைகளும் ஆனால் அதன் தாக்கமும் சோர்வும் துளியும் இன்றி அத்தனை பரப்பரப்பாய் வேலைகளைத் தொடர்ந்தான்.

அதற்கு முழு காரணமும் அவனின் கண்ணம்மா..அவளால் மட்டுமே இந்த மந்திரத்தை அவன்மீது செலுத்த முடியுமென அவனுக்குத் தெரியும்.நினைவுகள் அதுவாய் தன் கடந்தகாலத்தில் பயணிக்க ஆரம்பித்திருந்தது.

அன்றைய நாளுக்குப்பின் வெண்பா தன்னவனுக்காய் இன்னும் இன்னும் தன் காதலை பொங்கி வழிய செய்து கொண்டிருந்தாள் என்றே கூற வேண்டும்.அவன் மருத்துவ அறிக்கையை பொருட்டென கூட கொள்ளாமல் எப்போதும் போல் இயல்பாகவே இருந்தாள்.

ஆனால் திவ்யாந்த் எத்தனை முயன்றும் சில நாட்களுக்கு அவனின் முகத்தில் ஒருவித தெளிவில்லாமல் தான் இருந்தது.அதையும் போக்கி அவனை பழைய திவ்யாந்தாய் மீட்டிருந்தாள் அவனின் வெண்பா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.