அவனும் இப்போது தான் சுடரின் மீது நட்பை தாண்டி தன் மனம் சலனப்பட்டிருக்கிறது என்பதையே உணர ஆரம்பித்திருந்தான். விமான நிலையத்தில் அமுதனை பார்த்து அவனுக்கு பொறாமை என்று அமுதன் சொன்னதாக சுடர் சொன்னபோதே, ஒருவேளை சுடர் மீது தனக்கு இருப்பது காதலா? என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
இன்னும் முழுமையாக கூட உணரவில்லை, அதற்குள் அவன் எப்படி திருமணம் வரை சிந்தித்து பார்க்க முடியும்? இதில் வீட்டில் அருளுக்கும் அவனுக்கும் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருப்பது தெரியாதே,
அதுவுமில்லாமல் தன் பெற்றோர்களை பற்றி அவனுக்கு தெரியாதா? கண்டிப்பாக காதல் என்று வீட்டில் வந்து சொன்னால் பெண் நல்ல பெண்ணாக இருந்தால் தடை சொல்ல மாட்டார்கள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
அந்தஸ்து, ஜாதி, மதம் பார்த்து தான் சில பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் புகழேந்தி குடும்பத்தை பொறுத்தவரை, கதிரவன் வேற்று ஜாதி என்று தெரிந்து தான் எழிலுக்கு திருமணம் செய்து வைத்தனர். முத்து பாட்டி மட்டும் தான் கொஞ்சம் தயங்கினார். ஆனால் புகழேந்தியோ, கதிர் நல்லவரா என்று மட்டும் ஆராய்ந்து தான் அவரை அவர்கள் வீட்டு மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டார்.
அப்படியிருக்க ஒருவேளை சுடரை காதலிப்பதாக அவன் வீட்டில் சொன்னால் மறுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்குமல்லவா.. அதனால் தன் காதலுக்கு எதிர்ப்பு வருமா? என்றெல்லாம் அவன் யோசித்து பார்த்திருந்திருக்க மாட்டான். அதனால் தான் அவனால் தன் நண்பனின் செயல் குறித்து இப்படி பேச முடிந்தது.
ஆனால் அதை சுடர் தவறாக புரிந்துக் கொண்டு அவனிடம் பேச வந்ததை பேசாமல் விஷயத்தை சிக்கலாக்கி கொண்டாள். அதன்பின் வந்த நாட்களிலும் மகி மற்றும் அவன் குடும்பத்தை விட்டு தள்ளியிருக்க வேண்டும் என்று நினைத்தாள். அதற்கேற்றார் போல் இப்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால், அவள் வேலை பார்க்கும் ஓவியப்பள்ளியில் முழு நேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தது. அதனால் அவள் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஆனாலும் மகி மேல் இருக்கும் காதல் சற்றும் குறையவில்லை. அவன் தனக்கில்லையா என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்.
சிறிது நாட்களாக கலகலவென்று இருந்த சுடர் இப்போதெல்லாம் சோர்வாக இருப்பதை கவனித்து எப்போதாவது பார்க்க நேரிடும்போது மகி வீட்டார் என்னவென்று கேட்பர்.
இதில் அவள் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணபிக்கும் நாள் வந்த போது, அவளை பல்கலை கழகத்திற்கு அழைத்துச் சென்ற மகி கூட, அவளின் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பினான். ஆனால் அவள் எதற்கும், “ஒன்றுமில்லை நான் சாதாரணமாக தான் இருக்கேன்..” என்ற பதிலை மட்டும் கூறிக் கொண்டிருந்தாள். ஆனால் என்னவோ சரியில்லை என்று மட்டும் மகி உணர்ந்துக் கொண்டான்.
இதேபோல் தான் சிறிது நாட்களாக அமுதன், ஆனந்தியிடமும் அவள் பேசவில்லை, எங்கே பேசினால் தன் மனதில் உள்ளதை அவர்களிடம் கொட்டி விடுவோமோ என்ற பயமும், கூடவே இந்த வேதனையெல்லாம் சார்லியால் தான் வந்தது என்று அமுதன் மேல் சிறிதளவு கோபமும் இருந்தது தான் காரணம்,
இதில் எழில் வேறு சுடர் இப்போதெல்லாம் சோர்வாக தெரிகிறாள் என்று ஆனந்தியிடம் சொல்லிவிட்டார். அதை ஆனந்தி அமுதனிடம் சொல்லவும், சுடர் வேறு அவன் தொடர்புக் கொண்டாலும் பேசாமல் இருப்பதால், என்ன பிரச்சனை என்று தெரிந்துக் கொள்ள உடனே இந்தியா செல்ல நினைத்தான். அதற்கேற்றார் போல் அவன் சொந்தமாக நடத்தும் நிறுவனத்தை போன முறையே பார்வையிடாமல் வந்ததால், இப்போது அதையும் ஒரு சாக்காக வைத்து உடனே இந்தியா கிளம்பினான்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.