(Reading time: 6 - 11 minutes)

அதற்கு முன்னே தரணுக்கு பரிட்சை ஆரம்பித்துவிட்டது..

அதுவும் லாவண்யாவின் வடிவில்..!!

பரிட்சை எழுதி முடித்ததும் க்ளாஸைவிட்டு தரண் வெளியே வரத்துவங்க.. அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தாள் லாவண்யா..!!

அவளைக் கண்டதும் தரணின் நடை லேசாக நின்று செயல்பட லாவியின் கண்களில் உக்கிரம்..

மாக்காளியைப்போல் காட்சிதந்தாள் அவள்..!!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை தரண்.. அவன்பாட்டிற்கு நடக்கத்துவங்கியிருந்தான் வேகமாக.. அவளைவிட்டு வெகுதூரம் செல்லவேண்டுமென்ற முடிவுடன்..

அதைப்புரிந்துகொண்டவளுக்கு இன்னும் இன்னும் அவன் மீது கோபம் பொங்கிவழிய.. அவன் முன்னால் ஓடிச்சென்று நின்றாள்.. மூச்சுவாங்க..

“எதுக்கு லா..வ்.. லாவண்யா இப்படி பின்னாடியே வர..??”, கோபம் தரணுக்கு.. நான்தான் இவளை அவாய்ட் செய்கிறேனே.. பிறகு எதற்கு என் பின்னால் வருகிறாள் என்று.. அதை அவன் கண்களுகளும் அழகாய் பிரதிபலித்தது..

“இன்னைக்கு என் பர்த்டே தரண்.. அதுக்கூட மறந்துட்ட நீ..??”, ஆதங்கம்.. எப்படி நீ மறந்திடலாம் என..

குற்றவுணர்வாய்ப் போய்விட்டது தரணுக்கு..

பிறந்தநாள் அன்று அவளை ஹர்ட் செய்கிறோமென..

அவள் கண்களைப் பார்த்து, “ஹாப்பி பர்த்டே லாவி..”, என்று லேசாக அவன் முணுமுணுத்திட..

சமுத்திரத்தில் பட்டுத்தெறிக்கும் நட்சத்திரங்களின் ஒளியைப்போல் பிரகாசித்தது லாவண்யாவின் முகம்..

அவன் மீதிருந்த கோபங்களைக்கூட கொஞ்சம் வெகு பின்னால் தள்ளிவிட்டிருந்தது அவள் மனது..

அவசரமாக தனது பேக்கிலிருந்து ஸ்வீட் பாக்ஸை எடுத்து அவள் நீட்டிட.. அதைத் தயக்கமாய் பெற்றுக்கொண்டவன்.. தனது பேகிலிருந்து அவளுக்காய் வாங்கிவைத்திருந்த பரிசுப்பொருளைக் கொடுக்க..

மொத்தமாக அவள் கோபங்கள் இடிந்துவிழ..

மனது முழுவதும் அத்தனை சந்தோஷம்.. அதனை அவள் முகம் வெளிச்சமிட்டுக்காட்டிட.. தரணுக்குமே கொஞ்சம் கொஞ்சம் புன்னகை முகத்தினில்..

அதற்குமேல் அவன் பேசவேண்டுமென்று தோன்றவில்லை லாவண்யாவிற்கு..

தன்னிடம் வெற்றிடமாக இருந்த உடன்ப்பிறப்பின் இடத்தை அவன் முற்றிலுமாய் நிறப்பியதுபோலிருக்க..

அவன் கால்கள் பயணிக்கும் திசையில் அவனுடனே பயணிக்கத்துவங்கினாள் லாவண்யா..

எல்லாம்.. எல்லாமே.. இன்னும் சிறிது நாட்கள் என்று அறியாமல்..

உற்சாகத்தை மட்டுமே மனதில் சுமந்தவளாக..!!

தரணின் நடையின் மாற்றம் அறியாதவளாக..!!

அதை அறிந்துகொண்டவன் அவர்கள் அறியாமல் அதனை தன்னுடன் இருப்பர்களிடம் சுட்டிக்காட்டி.. கேலி செய்து.. அதில் அல்ப சந்தோஷப்படுகிறானென்று சுத்தமாக தெரியாதவளாக..!!

மொத்தத்தில் சுற்றியும் பின்னத்துவங்கியிருக்கும் சக்ரவியூகம் தெரியாதவர்களாக..!!

 

வணக்கம் தோழமைகளே..

இந்த 2004 ஆம் வருட நிகழ்வுகள் முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது..

“தரண் என்ன ஆனான்..??”, கண்டிப்பாக கேள்வி இருக்கும்..

விடையுடன் விரைவில் வருகிறேன்..!!

நன்றி..!!

 

உருவெடுப்பாள்..

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.