(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - தாரிகை - 17 - மதி நிலா

series1/thaarigai

ன் விழிகளுக்குள்

நான் விழுவது எப்பொழுதடி..”

இன்று என்ன வெள்ளைப்பூக்களா..??

அழகான புன்னகை தாரிகையிடம்..!!

கை முழுவதிலும் அந்த வெள்ளப்பூக்களை அள்ளி எடுத்துக்கொண்டவள்.. ஒருமுறை அதனை வருடிகொடுக்க.. ஏனோ சிலிர்த்தது மனது..

தலையை உலுக்கித் தன்னை சமன்படுத்துக்கொண்டவள் தனக்காக வெளியே காத்திருந்த நிஷாவுடன் காரில் ஏறி அமர்ந்திட.

தாரிகையின் கையிலிருந்த பூக்களின் தரிசனம் நிஷாவிற்கு..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மனதை மென்மையாக வருடிச்செல்லும் அந்த வெள்ளை நிறம் நிஷாவின் மனதையும் கொள்ளைக்கொள்ள..

“பூ ரொம்ப அழகா இருக்குக்கா..”, என்றபடி தாரிகையின் கையிலிருந்து அதை தன் கரங்களுக்கு இடமாற்றிக்கொண்டான் நிஷா.. ஆசையாசையாய்..

தவித்துப்போனது தாரிகையின் மனது..

எங்கே அதிலிருக்கும் வரிகளை அவள் படித்துவிடுவாளோ என்ற பயத்தில்..

“நிஷா.. கொடேன்.. நானே பிடிச்சிட்டு வரேன்..”, தவிப்பாய் இவள் சொல்லிட.. கேள்வியாய் அவள் முகம் பார்த்தான் நிஷா..

“கொடு நிஷா.. நான் சும்மாதானே நடந்து வரேன்.. பிடிச்சுக்கறேன்.”, தனது தடுமாற்றத்தை மறைத்துக்கொண்டு அவள் சொல்ல..

அவளது மாற்றங்கள் எல்லாம் வித்தியாசமாகப்பட்டது நிஷாவிற்கு..

“என்னாச்சுக்கா உங்களுக்கு..?? ஏன் ஆடா பிஹேவ் பண்றீங்க..??”, தாரிகையிடம் என்றும் தயக்கம் எழுந்ததில்லை நிஷாவிற்கு.. என்றும் பயம் மட்டுமே.. அதனால் சட்டென்று கேள்வி பிறந்திருந்தது நிஷாவிடமிருந்து..

“ஒ..ன்..னு..ம்.. இ..ல்..லை..யே..”, உடல்மொழியிலும் பிரதிபலிப்புகள்..

தாரிகையை கூர்ந்து பார்த்த நிஷா.. அந்தப் பூங்கொத்தை ஆராயத் துவங்க..

அதனை எட்டிப்பறிந்திருந்தாள் தாரிகை..

அதற்குள் அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் அனைத்தும் விழுந்து தொலைத்தது நிஷாவின் கண்களுக்கு..

“ஆஹான்.. இதான் விஷயமா..??”, மனதிற்குள் சிரித்துக்கொண்டவள்.. அமைதியாகி தாரிகையை குறுகுறுவென பார்த்திட..

அத்தனை வெட்கங்கள் அவள் முகத்தினில்..!!

சிரித்தேவிட்டாள் நிஷா..!!

“எதுக்கு நிஷா சிரிக்கற இப்போ..??”, கோபமேற்றி தாரிகை கேட்டபொழுதிலும்.. அவளது கோபக்குரலில் சட்டென நின்றிடும் சிரிப்புக்கூட இன்று ஏனோ நிற்கபாடில்லை நிஷாவிற்கு..

“நி..ஷா.. நம்ம கலெக்ட்டர் ஆபிஸில் இருக்கோம்”, தாரிகை கொஞ்சம் எச்சரிக்கை..

கண்களை உருட்டியவள், “உன் ஆபீஸ் தாண்டியாச்சுக்கா..”, புன்சிரிப்புடன்.. மேலும் மேலும் கேலியை முகத்தில் பரவவிட்டு..

“ப்ச்.. எதா இருந்தாலும் அப்புறம்..”, முன்னால் அமர்ந்திருக்கும் ட்ரைவரைச் சுட்டிக்காட்டி கிசுகிசுப்பாய் எச்சரிக்க..

“சா..ரிக்கா.. கொஞ்சம் எக்ஸைட்மெண்ட் எனக்கு..”, தாரிகையைப் போலவே கிசுகிசுப்பாய் மொழிந்தவள், “யாராம் அது..??”, என்று கண்கள் சிமிட்டிட..

“யாரது..??”, புரியாததுபோல்..

“நம்ம போகி தான்..”

“போகியா..?? அது நெக்ஸ்ட் மந்த் தானே..??”

“ஐயோ அக்கா.. போகி மீன்ஸ் போயட் கிங்க்.. நம்ம மாமா.. யார் அவர்..?? ”

“ஹே.. லூசு.. அதெல்லாம் யாரும் இல்லை.. இது யாரோ என்னைப் ப்ராங்க் பண்றாங்க போல.. ஏதாவது உளறிவைக்காதே நீ..”, எச்சரிக்க..

வேகமாக மாட்டேன் என்பதாய் தலையசைத்தாள் நிஷா.. அதிலே புரிந்துவிட்டது அவளுக்கு.. இவள் கண்டிப்பாக உளறிக்கொட்டுவாள் என்று..

“நி..ஷா..”, ஏனோ குரல் நடுக்கம் கண்டது தாரிகைக்கு..

“செல்விக்கா.. நான் ஜஸ்ட் உங்களை டீஸ் செஞ்சேன்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்..”, குறும்புகள் அனைத்தும் மறைந்துபோக, “யாருக்கா..?? உனக்குத் தெரியுமா..??”, சீரியஸாக..

“ம்ஹூம்.. யாருனு தெரியாது.. பட் என்னை அவங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு.. என் ஒவ்வொறு மூவும்.. என்னைத் தொடர்ந்து வருவது போலவே தோணல் எனக்கு.. எல்லாம் என் அஸம்ப்ஷன் தான்..”

“யாராவது தெரிஞ்சவங்களாத்தான் இருக்கும்க்கா..”

“இல்லை நிஷா.. ஐ பீல் சம்திங்க் ஃபிஷ்ஷி.. எப்படி அவங்களுக்கு என் ஒவ்வொறு மூவும் தெரியுதுனு.. இது கெட்டதுக்கெல்லாம் இல்லைதான்.. ஆனால்.. இ..து.. இதை இப்படியே வளரவிடுவது பிடிக்கலை எனக்கு..”

“ஏன்க்கா..??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.