(Reading time: 11 - 22 minutes)

"ஓஓஓ....இப்போ வீட்டுல பேசி சம்மதம் வாங்கிட்டாராமா" என்றான் நக்கலாக.

"அது...இன்னும் இல்ல.  நான் நேத்துதான் உங்களப்பத்தி அவர்கிட்ட சொன்னேன் அவர்தான் நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லியிருக்கனும்னு சொன்னார்.  சாரி கௌவுதம் நான் உங்ககிட்ட இத முன்னாடியே சொல்லியிருக்கனும்.  ஐ யம் ரியலி சாரி"

"ஹூம்.... பேர் என்ன சொன்ன ம்ம்.. பிரணவ் ம்ம்...ஆமா அவர் என்ன பண்றார்"

"ஏன் கேக்குறீங்க"

"சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான்"

"அது உங்களுக்கு எஸ்டேட் ஓனர் ஜீவாநந்தம் தெரியுமா"

"ம்ம்...தெரியுமே"

"அவரோட சன்தான் பிரணவ்"

"ஓஓ...."

"உங்களுக்கு அவரத் தெரியுமா"

"மிஸ்டர் ஜீவாநந்தம் கிட்ட ஒரு சில தடவ பேசியிருக்கேன்.  ஆனா பிரணவ் கிட்ட பேசினது இல்ல ஒன்னு ரெண்டு தடவ பாத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

  போதையில் கண்கள் இரண்டும் இரத்த நிறத்தில் இருந்தது.

"என்ன கௌவுதம் இது ஏன் இப்படி குடிச்சுட்டு இருக்கீங்க"  என்றாள் சற்று கடுப்பாக.

"ஒன்னுமில்ல நீ போ"

"என்ன ஒன்னுமில்ல.  இவ்வளவு நாளா இல்லாம இப்போ ஏன் மறுபடியும் ஆரம்பிச்சிருக்கீங்க.  இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.