(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 07 - ஜெய்

Gayathri manthirathai

ந்தியா, மாலதி, காயத்ரி பேசிக்கொண்டிருக்கும்போது லேப் அறையிலிருந்து மாணவர்கள் அலறும் சத்தம் கேட்க மூவரும் அந்த இடத்தை நோக்கி நகர்ந்தார்கள்....

லேப் அறை  வாசலில் பத்து பதினைந்து மாணவர்கள் நின்று கொண்டிருக்க சந்தியா அவர்களிடம் சென்று என்னவென்று கேட்டாள்....

“ஹலோ சீனியர்... என்னாச்சு உள்ள ஏதானும் ப்ரோப்லமா... எதுக்கு இப்படி கத்துறாங்க....”

“ஹே நீ first year ஸ்டுடென்ட்தானே.... உன் கிளாஸ் பொண்ணு ஒண்ணு உள்ள suicide அட்டெம்ப்ட் பண்ணிருக்கு.... எங்களுக்கு இப்போ லேப் hour.... உள்ள போகலாம்ன்னு பார்த்தா அங்க அந்த பொண்ணு விழுந்து கிடக்கு... பக்கத்துலையே சர்ஜிகல் கத்தி கிடக்குது...  என் கிளாஸ்மேட் உயிர் இருக்குதான்னு செக் பண்ணிட்டு இருக்கா....”

“அடக்கடவுளே... தள்ளுங்க யாருன்னு பார்க்கிறேன்....”, சந்தியா உள்நுழையப் பார்க்க, அதற்குள் காலேஜ் டீன், மற்றும் சில ஆசிரியர்கள் அவர்களை நோக்கி வேக வேகமாக வந்தார்கள்....

“ஸ்டுடென்ட்ஸ் இங்க கூட்டம் போடாதீங்க.... சந்தோஷ் பசங்களை எல்லாம் கிளாஸ்க்கு அனுப்புங்க....”, அவர்களை விலக்கியபடியே அறையுள் நுழைந்தார் டீன்...

அங்கு சென்று அந்தப் பெண்ணை பரிசோதிக்க அவள் இறந்து சிறிது நேரமாகி இருந்தது....

“என்னடா இது தலைவலியா போச்சு... இது தற்கொலை பண்ண நம்ம காலேஜ்தான் கிடைச்சுதா.... அடுத்து போலீஸ், விசாரணைன்னு நம்ம தாவு தீர்ந்திடும்..... சந்தோஷ் நீங்க அந்தப் பொண்ணு கிளாஸ்ல போய் ஏதானும் பிரச்சனையா, எதுனால அந்தப் பொண்ணு இந்த முடிவுக்கு வந்ததுன்னு விசாரிங்க... அதுக்குள்ள நான் போலீஸ்க்கு inform பண்ணிடறேன்....”

அடுத்த அரை மணியில் போலீஸ் வந்து அவர்கள் விசாரணையை துவக்க.... அந்தப் பெண்ணின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சந்தோஷ் சந்தியாவின் வகுப்பிற்கு சென்று அங்கிருந்த மாணவர்களுக்கு ஏதேனும் தெரியுமா என்று விசாரித்துக்கொண்டு இருக்கும்போது போலீஸ் உயரதிகாரி அந்த வகுப்பில் நுழைந்தார்....

“சாரி ஸ்டுடென்ட்ஸ்.... இன்னைக்கு ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டது... உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.... தற்கொலை பண்ணின பொண்ணுக்கு யாரானும் இங்க நெருங்கின friends இருக்காங்களா.... அந்த பொண்ணை பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.... அவளோட பெற்றோர்க்கும் சொல்லி இருக்கோம்... அவங்க வந்துட்டு இருக்காங்க.....”

“சார் அவ பேர் மலர்க்கொடி..... அருப்புக்கோட்டை பக்கத்துல ஒரு கிராமத்துல இருந்து வந்து இங்க படிக்கறா..... ரொம்ப அமைதியான பொண்ணு சார்.... யார் கூடவும் அவ்வளவா பேச மாட்டா.... நான் அவ பக்கத்துல உட்கார்ந்து இருக்கறதால ஓரளவு பேசுவா....”, இறந்த பெண்ணின் அருகில் அமரும் அவள் தோழி பதிலளித்தாள்....

“ஓ இன்னைக்கு அந்த பொண்ணு ஏதானும் வருத்தமாவோ இல்லை விரக்திலையோ  இருந்துச்சாம்மா.... உன்கிட்ட எப்படி பேசினா.....”

“அப்படிலாம் ஏதும் தெரியலை சார்... பொதுவாவே அவ ரொம்ப பேசற டைப் கிடையாது... அதனால எனக்கு எதுவும் வித்யாசமா தெரியலை...”

“காதல் விவகாரம் அப்படி ஏதானும் இருக்குதாமா......”

“அப்படிலாம் இருக்கறா மாதிரி தெரியலை சார்... ரொம்ப பெர்ஸனலா எனக்கு அவளைப் பத்தி தெரியாது.....”

“ஓ அந்த பொண்ணு இங்க ஹாஸ்டல்ல தங்கி இருக்குதுல்ல... அவளோட ரூம்மேட் யாருன்னு தெரியுமாம்மா.....”

“நான்தான் சார் அவளோட ரூம்மேட்.... சரிதா சொன்ன மாதிரிதான் சார்.... ரூம்லயும் ரொம்ப அமைதியாத்தான் இருப்பா... ஏதானும் கேள்வி கேட்டா பதில் சொல்லுவா.... முக்கால்வாசி நேரம் படிச்சுட்டேதான் இருப்பா...”

“Boy friend அப்படி இப்படின்னு யார் கூடயாச்சும் பேசி பார்த்திருக்கியா....”

“இல்லை சார்.... அந்த மாதிரிலாம் எதுவும் பேசி பார்க்கலை.... டெய்லி ராத்திரி அவங்க அம்மா அப்பாக்கு பேசுவா... அவ்வளவுதான்....”

மாணவர்களை காவல்துறை உயரதிகாரி விசாரித்துக் கொண்டிருக்கும்போது காவலர் ஒருவர் உள்நுழைந்து அந்த பெண்ணின் அறையை சோதனை இடும்போது ஒரு கடிதம் கிடைத்துள்ளதாக கூறி அவரை அழைத்தார்....

அதிகாரி சந்தோஷுடன்  வெளியேற சந்தியா செல்லும் அவரையே பார்த்தபடி இருந்தாள்.....

“ஹே காயு என்னாச்சுடி... ஏன் இப்படி இருக்க.... உன் கையெல்லாம் ஏன் இப்படி வெடவெடான்னு நடுங்குது..... பாரு எப்படி வேர்த்து ஊத்தி இருக்குது...”,மாலதி கூற சந்தியா அவளை திரும்பி பார்த்தாள்....

“மாலு நான் அந்த பொண்ணு நேத்து கூட என்கிட்ட பேசினாடி.... டவுட் இருக்குன்னு வந்து என்கிட்டே கேட்டுட்டு இருந்தா.... எவ்ளோ அமைதியா பேசினா தெரியுமா..... தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு என்னடி கவலை இருக்கும் அவளுக்கு.... அந்த பொண்ணோட உடம்பை அங்க லேப்ல பார்த்ததுல இருந்து நேக்கு உடம்பெல்லாம் நடுங்கறதுடி.... பாவம் இல்லை எவ்ளோ வலிச்சிருக்கும்....”, அழுதபடியே பேசிக்கொண்டிருந்தாள் காயத்ரி....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.