(Reading time: 11 - 21 minutes)

காயு ரிலாக்ஸ்....  அதையே நினைச்சுட்டு இருக்காத... சாதாரணமாவே நீ எல்லாத்துக்கும் பயப்படுவ.... உன்னை யாரு அந்த ரூம்க்குள்ள எட்டி பார்க்க சொன்னது....”

“நானா ஒண்ணும் பார்க்கலை சந்தியா... அங்க டீன் உள்ள போகும்போது எல்லாரும் வழி விட்டாங்க இல்லை..... அப்போ எதேச்சையா திரும்பினா அங்க அந்த பொண்ணு விழுந்து கிடக்கு.... அந்த பொண்ணை பார்த்தா அத்தனை சாதுவா இருந்துது.... தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க போறது அவளுக்கு....”

“தற்கொலைன்னு எதை வச்சு சொல்ற காயு....”

“அதுதான் அந்த போலீஸ் ஆபீசர் சொன்னாரே....”

“ஹ்ம்ம் இருக்கலாம்... இல்லாமையும் இருக்கலாம்... அந்த பொண்ணு கைல கட் ஆகி இருந்ததை வச்சு அந்த முடிவுக்கு அவங்க வந்திருக்கலாம்.... ஆனா நாம இங்க சேர்ந்து இத்தனை நாள்ல அந்த பொண்ணை பார்த்தா தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு பெரிய பிரச்சனைல இருந்தா மாதிரி தெரியலை.....”

“அப்படிலாம் வெளில behave பண்றதை வச்சு இப்போலாம் முடிவு பண்ண முடியலை சந்தியா... அமுக்குணி மாதிரி இருக்கறதுங்கதான் பெரிய பெரிய அப்பாடக்கர் வேலையெல்லாம் பண்ணுதுங்க....”

“நீ சொல்றதும் சரிதான் மாலு... பார்க்கலாம் எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல ஏன் இப்படி செஞ்சான்னு தெரிஞ்சுடும்....”

சந்தியா பேசியபடியே இன்று நடந்ததை சக்திக்கு மெசேஜ் செய்தாள்.... 

வாங்க சதீஷ்.... என்ன டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டீங்களா... ரிப்போர்ட்ஸ் கொண்டு வந்திருக்கீங்களா....”, சதீஷ் டெஸ்ட் ரிப்போர்ட்களை மருத்துவரிடம் கொடுத்தான்....

மருத்துவர் அதை பார்த்துக்கொண்டிருக்க அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று இங்கு சதீஷிற்கு வேர்க்க ஆரம்பித்தது.... சுந்தர் அவன் கையை அழுத்தி பதட்டப்படாமல் இருக்குமாறு கண்களாலேயே ஆறுதல் படுத்தினான்....

“ஹ்ம்ம் கொஞ்சம் சீரியஸ் பிரச்சனைதான் சதீஷ்.... உங்களோட kidney, gallbladder ரெண்டுலயும் ஸ்டோன் form ஆகி இருக்கு.... கிட்னில மூணு பெரிய சைஸ் கல்லு இருக்கு அதே மாதிரி gallbladderல பெரிய கல்லு மூணு அதைத் தவிர ரொம்ப போடி சைஸ் கல்லு ஏகப்பட்டது இருக்கு.... அந்தக் கல்லு எப்பலாம் மூவ் ஆகுதோ அப்பலாம் உங்களுக்கு பயங்கர வலி வந்திருக்கு... வாந்தியும் அதனாலதான்.... உங்க gallbladder மொத்தமா அழுகி செயலிழந்த நிலைல இருக்கு.... அதை உடனடியா எடுத்தாகணும்... அதே மாதிரி உங்க ஒரு கிட்னி முழுக்க வேலை செய்யலை அதையும் எடுக்கறது நல்லது....”

“டாக்டர் என்ன சொல்றீங்க... சாதாரண கல்லுதானே டாக்டர்... இதுக்கு எதுக்கு organ removal வரைக்கும் போறீங்க..... இந்த கிட்னி ஸ்டோன் வெறும் டயட்லையே குணப்படுத்திடலாம் சொல்றாங்க....”

“தம்பி நீங்க டாக்டர்க்கு படிக்கறீங்க அதை நினைப்புல வச்சுக்குங்க... சாதாரண கல்லுதானேன்னு நாம சொல்றோம் தம்பி.... ஆனா அதை கவனிக்காம அஜாக்கிறதையா விட்டா அது உங்க உயிரை குடிக்கற அளவு போய்டும்... அதுவும் இவர்க்கு இருக்கற கல்லு சைஸ் கிட்டத்தட்ட 8mm இருக்கு.... டேஞ்சர் லெவல்.... எந்த நேரமும் வெடிக்க சான்ஸ் இருக்கு..... அதே மாதிரி gallbladderல இருக்கற கல்லு எப்போ வேணா கணயத்துல(pancreas) விழ வாய்ப்பிருக்கு... அது உயிருக்கே ஆபத்து.... அதுனால உடனடியா அறுவை சிகிச்சை செய்யுறதுதான் நல்லது.....”

“டாக்டர் இதுக்கு எத்தனை செலவாகும்... என் குடும்பத்தை பத்தி முன்னாடியே உங்ககிட்ட சொல்லி இருக்கேன்....”

“பணத்தை பத்தி கவலைப்படாத தம்பி... நான் நம்ம கல்லூரி முதல்வர்க்கிட்ட உன்னை பத்தி பேசிட்டேன்.... அவர் உனக்கு முழு சிகிச்சையும் இலவசமா கொடுக்க சொல்லிட்டார்.... அறுவை சிகிச்சை முடிஞ்சு ஒரு பத்து நாள் நீ ஹாஸ்பிட்டல்ல இருக்க வேண்டி வரும்.... அதனால ஊருலேர்ந்து உன்னை பார்த்துக்க மட்டும் யாரையாவது வர சொல்லு... அடுத்த வாரம் புதன் கிழமை உனக்கு ஆபரேஷன் பண்ணிடலாம்... திங்கள்கிழமை வந்து அட்மிட் ஆகிடு.... அதுக்கு முன்னாடி சில மருந்துகள் எழுதி தரேன்... அதை வேளாவேளைக்கு சரியா சாப்பிடு.... காரமான அதிக எண்ணெய் சேர்த்த சாப்பாடு வேணாம்.... நிறைய காய்கறி பழங்கள் சாப்பிடு.... அதே மாதிரி தண்ணி நிறைய குடி....”, மருத்துவரிடம் மருந்துகளை பெற்றுக்கொண்டு சுந்தரும், சதீஷும் தங்கள் அறை  நோக்கி சென்றனர்....

“என்னடா சதீஷ் இது... இந்த டாக்டர் சர்ஜெரின்னு குண்டு போடறாரு.....”

“இதுக்குதாண்டா நான் இந்த ஸ்பெஷல்லிஸ்ட் எல்லாம் வேணான்னு சொன்னேன்....இவங்கல்லாம் சும்மாவே இந்த மாதிரி எதானும் ஏத்தி விடுவாங்கடா....”

“ஆமாடா அவர் இப்போத்தான் படிக்க ஆரம்பிச்சு இருக்காரு.... உனக்கு சர்ஜெரி பண்ணிதான் கத்துக்க போறார்... பேசறான் பாரு.... அவர் எவ்ளோ பெரிய gastroenterologist தெரியுமா.... உன்கிட்ட பணமும் வாங்கப் போறதில்லை... so பணத்துக்காக இந்த மாதிரி சொல்றாருன்னும் சொல்ல முடியாது...  அதனால எதைப் பத்தியும் யோசிக்காம அறுவை சிகிச்சைக்கு தயாராகு....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.