(Reading time: 11 - 21 minutes)

“பயமா இருக்குடா சுந்தர்.... இப்போதான் எனக்கு பத்தொன்பது வயசாகுது... இப்போவே கிட்னி, gallbladder எல்லாம் எடுத்துட்டா இன்னும் குறை காலம் எப்படிடா தள்ளப் போறேன்.... நான் தலை எடுத்துதாண்டா எங்க வீட்டுல எல்லாரையும் ஒரு நிலைக்கு கொண்டுவரணும்.... அப்பா, அம்மா என்னை நம்பித்தான் இருக்காங்க.....”

“கவலைப்படாத சதீஷ்.... மனுஷனுக்கு ஒரு கிட்னியே போதும்... அதை வச்சுட்டே உயிர் வாழ்ந்துடலாம்... உனக்கு இதைத் தவிர வேற ஒண்ணும் பெரிசா இல்லை... எந்த கேட்ட பழக்கமும் இல்லாம ஒழுங்கான உடற்பயிற்சி செய்து சத்தான சாப்பாடா சாப்பிட்டா பின்னாடியும் பெரிசா உடல்நிலை பாதிக்காம வச்சுக்கலாம்.... சரி ஊருல இருந்து யாரை வர சொல்லப்போற.....”

“தெரியலைடா இனிதான் அப்பா அம்மாக்கிட்ட பேசிட்டு முடிவு பண்ணனும்... அம்மா வந்துட்டா அங்க எல்லாரும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவாங்க... அப்பா வந்துட்டா அப்பாவும் பணம் இல்லாம சாப்பாட்டுக்கு கஷ்டம்தான்.... பார்க்கலாம்.... ஆனா எனக்கு படிப்பை நினைச்சாதான் பயமா இருக்கு... தினம் கிளாஸ் அட்டென்ட் பண்ணும்போதே ஒண்ணும் புரியலை... இதுல அடுத்து ஒரு இருவது நாளைக்கு நான் வகுப்புக்கு வர முடியாது போல... எப்படி சமாளிக்க போறேனோ..... ”

“அதை பத்தியெல்லாம் கவலைப்படாதடா... தினம் நடக்கறதை நான் உனக்கு சாயங்காலம் வந்து சொல்லி கொடுக்கறேன்...”, சுந்தர் சொல்ல, அறைக்கு சென்று தன் அன்னை தந்தைக்கு அழைத்து பேச ஆரம்பித்தான் சதீஷ்....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மணி இறந்த செய்தியை காவல்துறையினர் அவனின் பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் அலறி அடித்துக்கொண்டு காவல் நிலையம் நோக்கி சென்றனர்.....

“ஐயா எம்புள்ளைக்கு என்னாச்சுய்யா..... எப்படியா ஆச்சு....”, மணியின் அன்னை தன் தலையில் அடித்து அழுதபடியே அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் கேட்டார்.....

“இங்க பாரும்மா இந்த மாதிரி இங்க வந்து கத்திட்டு இருக்காத... இன்ஸ்பெக்டர் ஐயா வந்தா கத்துவாரு.... எலெக்ட்ரிக் வயரை கடிச்சு உன் புள்ளை தற்கொலை பண்ணி இருக்கான்....”

“ஐயா நாங்க வந்து பாக்கும்போது நல்லாதானே இருந்தான்... அதுக்குள்ள எப்படிய்யா இப்படி ஆகும்.... ”

“அவன் பண்ணின கொலைல எப்படியும் தூக்கு தண்டனைதான் அவனுக்கு கிடைக்கும்ன்னு தெரியும்... அதுதான் எதுக்கு கஷ்டப்படனும்ன்னு தற்கொலை பண்ணிக்கிட்டான் போல....”

“ஐயா அவன் அந்த பொண்ணை கொலை செய்யலைய்யா... அன்னைக்கு முழு நாளும் எங்க கூடவேதான் அவன் இருந்தான்.....”, மணியின் தந்தை அழுதபடியே சொன்னார்....

“நீங்களும் இதையேதான் மறுபடி மறுபடி சொல்றீங்க... ஆனா நம்புறா மாதிரிதான் இல்லை... சரி நீங்க அரசு மருத்துவமனைக்கு போங்க... அங்கதான் உங்க புள்ளை உடம்பை போஸ்ட்மார்ட்டம் பண்ண எடுத்துட்டு போய் இருக்காங்க.... இன்ஸ்பெக்டரும் அங்கதான் இருக்காரு....”, கான்ஸ்டபிள் சொல்ல மணியின் தாயும், தகப்பனும் வெளியில் வந்தார்கள்....

“என்ன மாமா சொல்றாங்க.... மணி எப்படி செத்தானாம்....”

“அவன் தற்கொலை பண்ணி செத்ததா சொல்றாங்கப்பா... ஒண்ணுமே புரியலை....”

“மாமா எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு.... மணி அந்த மாதிரி பண்ற ஆளே கிடையாது... கொலை பண்ற அளவுக்கெல்லாம் அவனுக்கு தைரியம் கிடையாது மாமா.... அப்பறம் எதுக்கு பண்ணாத தப்புக்கு பயந்து அவன் தற்கொலை பண்ணிக்கணும்..... இந்த போலீஸ்காரங்கதான் ஏதோ பண்ணிட்டாங்க....”

“ஆமாம்டா எனக்கும் சந்தேகமாத்தான் இருக்கு.... அந்த பொண்ணு செத்துப்போனதா சொன்ன அன்னைக்கு அவன் எங்க கூடத்தாண்டா இருந்தான்....”

“மாமா நீயும், அத்தையும் முன்னாடி போங்க... நான் நம்ம சொந்தக்காரங்களை கூட்டிட்டு வரேன்... நாங்க வர்றவரை நீ அங்க யார்கிட்டயும் எதுவும் பேசாத....”

மணியின் பெற்றோர் அரசு மருத்துவமனை நோக்கி செல்ல, உறவினர்களை அழைத்து வர அவனின் நண்பன் அவர்கள் வீட்டை நோக்கி சென்றான்....  

தொடரும்

Episode # 06

Episode # 08

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.