(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 08 - ஜெய்

Gayathri manthirathai

எல்லாரும் எப்படி இருக்கீங்க... சாரி 3 பார்ட்ல ஒரு பார்ட் மட்டும்தான் இந்த வாரம் கொடுக்க முடிஞ்சுது... பசங்களுக்கு லீவ் ஆரம்பித்து விட்டது... So செம்ம பிஸி... நிறைய டைப் பண்ண முடியலை... இல்லாட்டா மட்டும் அப்படியே 10-15 பக்கம் கொடுத்துடுவேன்னு நீங்க மைன்ட்ல நினைச்சதை நான் கேட்ச் பண்ணிட்டேன்... ப்ளீஸ் அட்ஜஸ்ட்....

அடுத்து போன அப்டேட்ல அந்த ஸ்டோன் சைஸ்னால ப்ரோப்லம் வராதுன்னு நிறைய பேர் சொல்லி இருந்தாங்க... கண்டிப்பா வரும் 5mm க்கு மேல போனாலே cyst, stone எல்லாமே பிரச்சனைதான்... எந்நேரம் வேணாலும் வெடிக்க சான்ஸ் இருக்கு... அப்படி இல்லைனா அங்க இருந்து jump பண்ணி பக்கத்துல இருக்கற organsக்கு போகவும் வாய்ப்பு இருக்கு... இதை நான் அனுபவிச்சிருக்கேன்... எனக்கு gallbladder stone 7mm அப்படியே jump ஆகி பக்கத்துல pancreasல விழுந்து நேரா ICU-க்கு போகறா மாதிரி ஆகிடுச்சு... அங்க டாக்டரும் கண்ணாடியை கழட்டிட்டு இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தீங்கன்னா உங்களை காப்பாத்தி இருக்க முடியாதுன்னு சொன்னார்... so சின்ன stone அப்படின்னு கவனிக்காம விடாம அதுக்குறிய treatment எடுத்து குணப்படுத்திக்கோங்க....

வா வா சந்தியா... என்ன உங்க காலேஜ் படு பரபரப்பா இருக்கு போல... காலைலேர்ந்து எல்லா சேனல் breaking நியூஸ்லயும் உங்க காலேஜ்தான் வந்துட்டு இருக்கு...”

“ஆமா மாமா… ஒரு பொண்ணு இறந்து போச்சு... தற்கொலையா, கொலையான்னு தெரியலை... காலேஜ்லேர்ந்து கிளம்பற வரை தற்கொலை மாதிரிதான் பேசிட்டு இருந்தாங்க...”

“ஹ்ம்ம் நியூஸ்ல பார்த்தேன்.... ஆனா உன் முகத்தை பார்த்தா அது மாதிரி இல்லை போலையே....”

“ஆமாம் மாமா.... என்னால தற்கொலைன்னு அதை நினைக்க முடியலை....”

“ஏன் சந்தியா.... கொலைன்னு சந்தேகப்படறா மாதிரி எதாச்சும் அங்க பார்த்தியா....”

“இல்லை மாமா.... என்னோட அனுமானம்தான்... காலைல நான் கிளாஸ்க்குள்ள நுழையும்போது அந்த பொண்ணை பார்த்தேன் மாமா... ரொம்ப சாதாரணமாத்தான் பக்கத்துல இருக்கற பொண்ணுகூட பேசிட்டு இருந்தா.... அவக்கூட ஹாஸ்டல்ல தங்கி இருக்கற பொண்ணுக்கிட்ட கேட்டேன்... நேத்தும் எப்பவும் போலதான் இருந்தா... காலைலயும் ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் மெஸ்ல சாப்பிட்டுவிட்டு கிளாஸ்க்கு வந்தோம்ன்னு சொன்னா... தற்கொலை எண்ணம் இருக்கற பொண்ணு இவ்ளோ காஷுவலா இருப்பாளா.... இல்லை சடார்ன்னு அந்த எண்ணம் வர்ற அளவுக்கு பெரிய விஷயமெல்லாம் இன்னைக்கு காலேஜ்ல நடக்கலை.....”

“ஹ்ம்ம் நீ சொல்றதும் யோசிக்கறா மாதிரிதான் இருக்கு....”

“நியூஸ் பார்த்துட்டு என் PAக்கிட்ட விசாரிக்க சொல்லி இருக்கேன்.... பார்க்கலாம் போலீஸ் கேஸ் எப்படி எடுத்துட்டு போறாங்கன்னு....”

“சார் நான் கமிஷ்னர்கிட்ட பேசினேன்.... அந்த காலேஜ் பொண்ணு தற்கொலைதான் பண்ணி இருக்கு போல... அவ ரூம்ல லெட்டர் எழுதி வச்சுட்டு கீழ லேப்ல போய் அங்க வச்சிருந்த கத்தி எடுத்து கையை அறுத்துட்டு இருக்கு....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஹ்ம்ம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சா....”

“வந்துடுச்சு சார்... சந்தேகப்படறா மாதிரி எந்த குறிப்பும் இல்லை சார்....”

“அந்த லெட்டர்ல என்ன எழுதி இருந்ததாம்....”

“அவங்க அம்மா அப்பாக்கு பொண்ணை டாக்டர் ஆக்கனும்ன்னு கனவு.... சின்ன வயசுலேர்ந்து அதையே சொல்லி சொல்லி வளர்த்திருக்காங்க... ஆனா படிச்சது மொத்தமும் தமிழ் மீடியம்... அந்த பொண்ணால cope up பண்ண முடியலை போல.... படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு... நடத்தற பாடம் புரியாததால ரொம்ப ஸ்ட்ரஸ்ஸா இருக்கு.... இதுவரை எந்த எக்ஸாம்லயும் fail ஆனதில்லை... முதல் முறையா போன வாரம் வச்ச டெஸ்ட்ல fail ஆகிட்டேன்... என்னால எங்கப்பா, அம்மாகிட்ட இதை சொல்ல முடியலை... கிளாஸ் டெஸ்ட்டே என்னால பாஸ் பண்ண முடியலை... எக்ஸாமை நினைச்சா பயமா இருக்குது.... அதனால தற்கொலை பண்ணிக்கறேன்னு எழுதி வச்சிருக்குது....”

“இந்தக் கால பசங்களுக்கு கொஞ்சம் கூட மன தைரியமே இல்லை... இதெல்லாம் சாகுறதுக்கு ஒரூ காரணமா... மனுஷ உயிரோட மதிப்பு கொஞ்சம்கூட தெரியலையே...”

“நீங்க சொல்றது உண்மைதான் சார்... விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டேங்கறாங்கன்னு போன வாரம் ஒரு பையன் தற்கொலை பண்ணி இருக்கான்... இந்த கால குழைந்தைங்க சின்ன விஷயத்தை கூட ரொம்ப இமோஷனலா எடுத்துக்கறாங்க....”

“ஹ்ம்ம் இளைய தலைமுறையை நினைச்சா கவலையா இருக்கு... சரி நாளைக்கு சிவகாசி ப்ரோக்ராம்க்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டீங்களா....”

“எல்லாம் ரெடி சார்.... காலைல ஆறு மணிக்கு கிளம்பினா சரியா இருக்கும்....”

“சரி அப்போ நீங்க கிளம்புங்க... நாளைக்கு பார்க்கலாம்....”

PA கிளம்ப சந்தியா யோசனையாக அமர்ந்திருப்பதை பார்த்தவர்...

“என்னம்மா அதி தீவிர யோசனை....”

“உங்க PA சொன்னதை வச்சு பார்த்தா இந்த கேசை தற்கொலைன்னு சொல்லி மூடிடுவாங்க போலையே மாமா....”

“இன்னும் உன் சந்தேகம் போகலையா சந்தியா... அதுதான் அந்த பொண்ணு கிளீனா லெட்டர் எழுதி வச்சிருக்கே....”

“அந்த லெட்டர் மேட்டர்க்கு அப்பறம்தான் சந்தேகம் இன்னும் வலுக்குது மாமா....”

“என்னம்மா சொல்ற...”

“அன்னைக்கு நடந்த டெஸ்ட்ல ஒரு மூணு பேர் தவிர எல்லாருமே failதான்... பாஸ் பண்ணின மூணு பேரும் கூட பார்டர்லதான் பாஸ் பண்ணி இருந்தாங்க... Infact எங்க லெக்சரர் கூட இது சும்மா மாடல் டெஸ்ட்தான்... so worry பண்ணிக்காதீங்க... வரப்போற மெயின் எக்ஸாம் எப்படி இருக்கும்ன்னு உங்களுக்கு ஒரு சாம்பிள்... so இந்த பாட்டர்ன் மாடலா வச்சு தயார் ஆகுங்கன்னு சொன்னாங்க.... அந்த மார்க் வந்த பிறகு கூட அவ சாதாரணமாதான் இருந்தா மாமா....”

“ஹ்ம்ம் maybe வெளிய காமிக்கலையோ என்னவோ... மனசுக்குள்ளயே வசிருந்துருக்கும் போல... அதுதான் இப்படி அழுத்தம் தாங்காம தற்கொலை வரை போய் இருக்கு...”

“என்னால இன்னுமே ஒத்துக்க முடியலை மாமா...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.