(Reading time: 9 - 17 minutes)

ஹே மொறப் பொண்ணு எப்போ வந்த... உங்க காலேஜ்தான் இப்போ ஹாட் டாபிக் போல...”

“ஹ்ம்ம் நீ ஒருத்தன்தான் பாக்கி நீயும் சொல்லிட்டியா.... காலைலேர்ந்து இதையே பேசி தலை வலிக்குது....”

“எனக்கு இவ அந்த காலேஜ்ல சேரும்போதே தெரியும்பா... இந்த மாதிரி  ஏகப்பட்ட தற்கொலைகள் நடக்கும்ன்னு... சந்தியா உண்மைய சொல்லு... நீ இன்னைக்கு காலைல உன் மூஞ்சியை கிட்ட கொண்டு போய் அந்த பொண்ணுகிட்ட காமிச்ச இல்லை... அதுல மிரண்டு போய்தானே அவ இப்படி பண்ணிக்கிட்டா....”

“ஹான் என் மூஞ்சியை காட்டலை... நீ நாலாப்பு படிக்கும்போது மூக்கு ஒழுகிட்டே ஒரு போட்டோ எடுத்தியே.... அதை காமிச்சேன்... அதுலதான் ஸ்பாட் அவுட்....”

“ஹே ரெண்டு பேரும் சும்மா இருக்கீங்களா.... ஒரு உயிர் போய் இருக்கு... நீங்க என்னடான்னா அதை வச்சு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க...”

“சாரிப்பா.... ஹே சந்தியா நான் உன்கிட்ட சொன்ன வேலையை முடிச்சிட்டியா...”

“இல்லை சக்தி... போன உடனேயே வேலையை ஆரம்பிக்க வேண்டாமேன்னு கொஞ்சம் விட்டு வச்சிருக்கேன்....”

“பாரு நீ தள்ளிப்போட்ட ஒரு உயிர் போய்டுச்சு....”

“என்ன சக்தி அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்...”

“எனக்கு சம்மந்தம் இருக்குமோன்னு தோணுது சந்தியா...”

“என்ன சொல்ற சக்தி...”

“ஆமாம்ப்பா இது அந்த காலேஜ்ல நடக்கற முதல் தற்கொலை இல்லை... போன வருஷமும் இப்படித்தான் ஒரு பையன் செத்துப்போனான்... தீராத வயித்து வலின்னு  கேசை இழுத்து மூடிட்டாங்க... அதுக்கு முந்தின வருஷம் ரெண்டு பேர்... ஒரு பொண்ணு ஒரு பையன்... அவங்க ரெண்டு பேருக்குள்ள காதல்... ஆனா பிரிஞ்சுட்டதால தற்கொலை பண்ணிட்டதா கேஸ் க்ளோஸ் பண்ணியாச்சு.....”

“அது எப்படி இந்த காலேஜ்ல தற்கொலை பண்ணிக்கன்னே பசங்க சேருவாங்களா....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நீ சொல்றது யோசிக்க வேண்டிய விஷயம்தான்னாலும், அவங்க தற்கொலை பண்ணி இருக்கவும் வாய்ப்பு இருக்கு சக்தி... ஏன்னா ரெண்டு கேஸ்லையும் அவங்க parents அதை உறுதி படுத்தி இருக்காங்க...”

ல்லைப்பா இதை நாம வேற கோணத்துல பார்க்கணும்ப்பா.... சந்தோஷ்க்கு போன் பண்றேன்.... அவன்தான் இன்னைக்கு வந்த போலீஸ்கூட இருந்தது....”

“யோவ் மாமா... நல்லா ஒரு ஆளை spy வேலைக்கு அனுப்பி இருக்க... மொத்த காலேஜும் அந்தாளை பார்த்து ஜொள்ளு ஊத்துது.... இதுல என்னைய வேற கெட்அவுட்ன்னு சொல்லிட்டான் தெரியுமா... ”

“உனக்கு ஏன் கண்ணு பொறாமை... அவன் என்னை மாதிரி மாஸ்மா..... அழகா இருந்தா அள்ளிட்டுதான் போவாங்க.... நீ என்னமோ மொதோ தபா கிளாஸ்க்கு வெளிய நிக்கறா மாதிரி அப்படியே பொங்கற.... ஒண்ணாங்கிளாஸ்லையே கிளாசை விட்டு வெளிய நின்னு சாதனை படைச்சவதானே நீ...”

“அதெல்லாம் அந்த காலம் மாமு... இப்போ இந்த காலேஜ்ல எனக்கு எத்தனை fans இருக்காங்க தெரியுமா.... சீனியர்லையே ரெண்டு மூணு பேர் என்கிட்டே வந்த ரெண்டு நாள்லயே லெட்டர் கொடுத்தாங்க... அதெல்லாம் உனக்கெங்க தெரியப்போகுது....”

“அய் அய் இந்த கதைதானே வேணாங்கறது... அது உன் friend காயத்ரிக்கு கொடுத்ததுதானே... அவக்கிட்ட நேரடியா கொடுத்தா அவ பயத்துல மயக்கம் போட்டுடுவான்னு உன்கிட்ட கொடுத்து கொடுக்க சொன்னா நீ அதை ஆட்டைய போட்டுட்டு உனக்கு வந்தா மாதிரி சொல்லிட்டு திரியுற... what is this?”

“அதுல அவ பேரு போட்டிருந்துதா... இல்லைல அப்போ அது எனக்கு வந்ததுதான்....”

“இங்க பாரும்மா மகாலக்ஷ்மி மாதிரி பொண்ணு இருக்கும்போது யாரானும் மாரியாத்தாவ பார்ப்பாங்களா... கொஞ்சமானும் லாஜிக்கா யோசிம்மா...”

“ஏண்டா டேய்... ரெண்டு பேரும் நிறுத்த மாட்டீங்களா... எப்ப பாரு நர்சரி பிள்ளைங்க மாதிரி அடிச்சுக்க வேண்டியது...”,சக்தியின் தந்தை திட்ட இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடியே அமைதியானார்கள்....

“சக்தி அந்த function பத்தி கேக்க சொன்னேனே.... கேட்டியா...”

“ஹ்ம்ம் விசாரிச்சேன் சந்தியா... இதுவரை அந்த மாதிரி பெரிய விழாலாம் நடத்தி பரிசு கொடுத்ததில்லை... வருஷா வருஷம் படிப்புக்கு உதவறோம் அப்படிங்கற பேருல அவங்க சொந்தக்காரங்ககுள்ளேயேதான் கொடுத்துட்டு இருந்து இருக்காங்க... ஆனா விழா நடக்கப் போறது உறுதி... ரெண்டு மூணு பெரிய தலைங்களை கூட கூப்பிட்டு இருக்காங்க...”

“இது என்ன சக்தி.. ஏதோ வில்லங்கம் மாதிரி தெரியுது....”

“ஹ்ம்ம் ஆமாம் சந்தியா... வில்லங்கத்தோட ஆரம்பம்ன்னு சொல்லலாம்.... எப்படி இருந்தாலும் உடனடியா உன் தோழிக்கு எதுவும் ஆபதில்லைன்னு தோணுது... ஏன்னா பெரிய ஆளுங்கல்லாம் வரப்போறாங்க... அங்க வச்சு எந்த வேலையும் அப்பனும், மகனும் பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன்... காயத்ரி தவிர வேற யாரு உங்க காலேஜ்ல இருந்து செலக்ட் ஆகி இருக்காங்க....”

“அது தெரியலை சக்தி... இன்னும் ரெண்டு நாள்ல invitation தரேன்னு சொல்லி இருக்காங்க... அதுல பார்த்தா தெரியும்....”

“சரி அது கிடைச்ச உடனே நீ எனக்கு தகவல் சொல்லு...”,இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது சந்தோஷிடம் இருந்து அவசரமாக அழைக்குமாறு சக்தியின் கைப்பேசிக்கு தகவல் வந்தது.....  

தொடரும்

Episode # 07

Episode # 09

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.