(Reading time: 9 - 17 minutes)

பூங்கொடி பொதுவாகவே நிறைய பேசும் சுபாவம் கொண்டவள்.ஆகவே, தமிழுடன் மிக விரைவில் ஒட்டிக்கொண்டாள். அனைவரும் இரவு உணவை முடித்து விட்டு தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்திற்கு பிறகு,

"பூங்கொடி... ஸ்கூல் யூனிபோர்ம் கூட மாத்தாம அப்டியே வந்துட. போ... போய் மாத்திட்டு உக்காந்து படி. ஏங்க பூங்கொடி சைக்கிள் பஞ்சர் ஆகிடுச்சினு சொன்னா அத கொஞ்சம் ரெடி பண்ணுங்க, அவ நாளைக்கு ஸ்கூலுக்கு எடுத்துட்டு போகணும்", என்று தன் மகளையும் கணவரையும் அனுப்பிவைத்தார் ஈஸ்வரி.

அதே சமயம் குருமூர்த்தி தாத்தா மடியில் அன்பிடம் பேசி கொண்டு இருந்தார்.

"உங்க வாழ்க்கைல என்ன நடந்துச்சு எனக்கு தெரியாது. ஆனா உங்க ரெண்டு பேரையும் பாக்கும் போது நிச்சயம் தப்பா தோனல. என்னனு தெரில, உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாக்கும் போது ஒரு இனம் புரியா சந்தோசம் ஆத்மாத்தமா தோணுது. அது தான் உங்களுக்கு உதவ தூண்டுச்சுனு நா நெனைக்கரன். உங்க நடவடிக்கை, பெரியவங்க கிட்ட இருக்க மரியாத, யாருக்கும் கஷ்டம் குடுக்க கூடாதுனு நெனைக்கற மனசு, எதையும் இலவசமா பெற நினைக்காத மனசு இதெல்லாம் உங்க நல்லா மனச காட்டுது.

தமிழுக்கும் அவளோட சந்தோஷத்துக்கு, உணர்வுகளுக்கு நீ குடுக்குற மரியாத முக்கியத்துவத்த பாக்கும் போது உங்க காதலோட ஆழம் புரியுது. ஒரு நல்ல இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் இதுலாம் தான். இன்னைக்கு நீங்க ஆரம்பிச்சி இருக்க உங்க வாழ்க்கை எப்பவும் இதே சந்தோஷத்தோட இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டுகிறேன். உங்க ரெண்டு பேருக்கும் தாத்தா நா இருக்கேன்", தாத்தா.

பட்டென அவர் காலில் விழுந்தவன் "ரொம்ப நன்றி தாத்தா, ஆசீர்வாதம் பண்ணுங்க", அன்பு.

"எழுத்துரு பா. எப்பவும் என் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும்", தாத்தா.

"தாத்தா... உங்க கிட்ட இனொரு விஷயம் பேசணும்", அன்பு.  

"என்னப்பா சொல்லு", தாத்தா.

"அது... வந்து தாத்தா எனக்கு ஒரு வேல வேணும். உங்களுக்கு தெரிஞ்ச யார்கிட்டயாவது பேசி பாக்கறீங்களா?. எந்த வேலையா இருந்தாலும் பரவால்ல நான் செய்வேன்.  ", அன்பு.

மெல்ல புன்னகைத்தவர், "கண்ணடிப்ப ஏற்பாடு செய்றேன். நீ என்ன படிச்சி இருக்க பா", தாத்தா.

"நா டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சி இருக்கேன். சென்னைல ரெண்டு வருஷம் ஒரு தனியார் கம்பெனி ல டெக்னீகள் ஆபரேட்டர் ஆ வேல பாத்தேன்", அன்பு.

"சரிப்பா நா விசாரிச்சிட்டு உனக்கு சொல்றேன். சரி நேரம் ஆச்சு வா போகலாம்", என்று கீழே அழைத்து சென்றார்.    

அவர்கள் கீழே செல்லவும் கஸ்தூரி பாட்டியும் ஈஸ்வரியும் வீட்டில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. அனைவரும் அவனிடமிருந்து விடை பெற்று சென்றபின், அவன் வீட்டினுள் சென்று கதவை தாழிட்டு விட்டு உறங்குவதற்கு படுக்கை அறைக்கு சென்றான்.

அங்கு அழகு தேவதையாய் ஜொலித்து கொண்டிருந்தாள் அவனின் தமிழ். எளிய காட்டன் புடவையில் தலை நிறைய பூவோடு உதிரி பூக்களால் அலங்கரிக்க பட்ட பாயில் பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள்.     

ஏதேதோ யோசனையில் உள்ளே வந்தவன் அவளை பார்த்ததும் அனைத்தையும் மறந்து அவளின் பார்வையில் மயங்கி போனான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க, அன்பு மெல்ல நடந்து அவளருகில் சென்றான்.

அவன் அருகே வருவதை கண்டவள் சட்டென எழுந்து நிற்க முயற்சிக்க பதட்டத்தில் கீழே விழ போனவளை தாங்கி பிடித்து நிற்க வைத்தான்.

"அது... அது வந்து மாமா, பாட்டியும் ஈஸ்வரி அம்மாவும் தான் இதல்லாம் ஏற்பாடு பண்ணாங்க..." என்று அவள் ஒரு வித தயக்கத்தோடு இழுத்து கூற மெல்ல சிரித்தவன்,

"இப்போ எதுக்குடி டென்ஷன் ஆகுற?. புதுசா கல்யாணம் ஆன எல்லாருக்கும் இப்படி ஏற்பாடு பண்றது வழக்கம் தான?. ம்ம்ஹும்... நீ சரியே இல்ல. இதுவே என் பழைய தமிழா இருந்தா மாமா... மாமான்னு என்ன கட்டிபிடிச்சிட்டே சுத்தி இருப்பா" என்று பொய்யாக முகத்தை சோகமாக வைத்து கொண்டு திரும்பி கொண்டான். 

அவன் செய்கையை கண்டு மெல்ல சிரித்தவள் அவனை பின்னாலிருந்து அணைத்து கொண்டாள். இதை எதிர்பார்த்தவன், சிரித்துக்கொண்டே அவளை மேலும் தன்னுடன் சேர்த்து இறுக்கி கொண்டான்.

"ஒய்...", அன்பு

"ம்...", தமிழ்

"பயம் போயிடுச்சா?", அன்பு

"ம். போயிடுச்சி மாமா.

மாமா...", தமிழ்.

"என்னடி?", அன்பு

"லவ் யூ சொல்லு", தமிழ்

"லவ் யூ டி நெறய", என்று திரும்பியவன் அவளின் கை பற்றி அமர வைத்து தானும் அவளருகில் அமர்ந்து கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.