(Reading time: 5 - 9 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 22 - லதா சரவணன்

kadhal ilavarasi

லெக்ஸ் ஏஞ்சலினா இருவரும் கப்பலின் இரண்டாவது அடுக்குத் தளத்தில் நின்றுகொண்டு கடலை வேடிக்கைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் கப்பலை அணைத்தாற்படியே, சிறிய கப்பல் ஒன்று ஒட்டியபடி சென்றது. அதிலிருந்து அதிகாரி அலெக்ஸ்ஸைப் பார்த்துக் கைகாட்டினார். 

வாங்க வர்கீஸ் என்ன இந்தப்பக்கம் ?

நான் வர்றது இருக்கட்டும் அலெக்ஸ் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கப்போறேன்னு சொன்னீங்க மறுபடியும் கடலுக்குள்ளே வந்து நிக்கிறே ஒருவேளை இது ஹனிமூன் டிரிப்பா 

சீக்கிரமே மாறும் வர்கீஸ் இப்போ பிளைட் கிராஷ் விஷயமா ஆராய வந்திருக்கிறோம் நீ சொன்னாற்போல இந்த டிரிப் முடிந்ததும் ஒரு நல்ல சேதி சொல்றோம். சரி நீங்க என்ன விஷயமா வந்தீங்க ?

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் கடல் அட்டைகள் கடத்தப்படறதா தகவல் வந்தது நான்கு நாட்களுக்கு முன்பு நியூஸ் படிச்சிருப்பீங்களே ? பிடிபட்ட கடல் அட்டைகளை எல்லாம் மீண்டும் கடலுக்குள்ளேயே விட்டுட்டுடோம் இந்தப் பகுதியில் மறுபடியும் கடல் அட்டைகள் கடத்தப்படறதா தகவல் வந்திருக்கு, அதான் ஒரு ரொன்டீன் செக்கப் அவர் தலையாட்டிவிட்டு கிளம்ப மற்றவர்களும் புன்னகையுடன் வழியனுப்பினார்கள். 

சீக்கிரமே நாம இரண்டுபேரும் ஹனிமூன் டிரிப்க்கு வரணும் ஏஞ்சல் என்வரையில பிரச்சினை இல்லை உன்வீட்டு சைடில்...

கடல் கண்ணின்னு அலையாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிசொல்லி அலுத்துப் போயிட்டாங்க அதனால எங்க வீட்டுலே பச்சைக்கொடிதான். 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கடல் அட்டைகள் மறுபடியும் கடத்தப்பட்டு இருக்கிறதா ? 

ம்..நானும் படித்தேன் முன்பெல்லாம் கடல் கொள்ளைகள் மறைக்கப்பட்ட ஏதாவது புதையல்களைத் தேடியோ, அல்லது பொக்கிஷங்களைத் தேடியோதான் இருக்கும். அதற்குப்பிறகு வாணிபக் கப்பல்கள், பயணக்கப்பல்கள்ன்னு சூறையாடினாங்க, அதுக்குப்பிறகு கடத்தல், பிறகு கடலின் வளங்கள் என ஒவ்வொன்றாக கொள்ளைகள் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. இப்போ கடைசியா கடல் அட்டைகள், இந்த கடல் அட்டைகள் 2001வரைக்கும் இந்தியாவில் பிடிக்கப்படும் ஒரு பொருளாகத்தான் இருந்தது. மொத்தம் 53 கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க இந்தியாவில் தடையிருக்கு ஆனா, சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எல்லாம் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதுவும் கள்ள மார்கெட் மாதிரிதான், இதில் ராஜா கடல் அட்டைக்குத்தான் தனி மரியாதையிருக்கு, இதைக் கடத்தறதுக்குன்னு ஒரு கும்பலே இருக்கு.... இதிலே கொடுமை என்னன்னா...?! கடல்அட்டைகளைப் பிடிக்க தனி வலை ஏதும் கிடையாது சில சமயம் மீனவர்களின் வலைகளில் அதுவா வந்து மாட்டிக்கும் அதுக்காக தண்டனை அடைந்து சிறைக்குப் போனவங்களும் அதிகம்... அலெக்ஸ் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவனின் செல்போன் ஒலித்தது. 

அலெக்ஸ் நான் வர்கீஸ் பேசறேன் இப்போ உங்க கப்பலில் இருந்து 10கிலோமீட்டர் தொலைவில் கடல்அட்டைகள் கடத்தல் நடந்து இருக்கு அதிலும் கடலில் வாழும் அறிய வகை உயிரினங்கள் சிலதும் இருந்திருக்கிறது சேஸிங்ல பிடிப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் கடலிலேயே விழுந்துவிட்டது. இப்போ சிக்கல் என்னன்னா இந்தப்பகுதி முழுவதும் வெப்பம் அதிகமா இருக்கிறதால் சில அபூர்வ உயிரினங்கள் இறந்தும் போயிருக்கு. கடல் மட்டத்தில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதாக உணரப்பட்டு இருக்கு, தயவு செய்து நீங்களும் உங்களைச் சார்ந்தவங்க யாரும் கொஞ்சம் கடலில் இறங்க வேண்டாம். அதற்காகத்தான் போன் செய்தேன். அப்படி கடலுக்குள் இறங்கிறாமாதிரி இருந்தா பத்திரமா தகுந்த ஏற்பாடுகளோட செய்யுங்கள். அப்போ நான் போனை வைச்சிடறேன் என்றார். 

வர்கீஸ் சொன்ன விஷயத்தை சொன்னதும், வெறுமனே தலையசைத்து வைத்தாள் ஏஞ்சலினா.....!

த்ரா காட்டியத் தகவல்கள் அனைத்தையும் பார்த்தபிறகு ப்ரியனின் மேல் கொலைவெறி எழுந்தது பரத்திற்கு முதல்ல அந்த நாய் எங்கே இருக்குன்னு காமி அவனை நாலு மிதி மிதிச்சா எல்லா உண்மையும் வெளியே வந்திடும் அதிலும் என் நண்பன் சத்யாவுக்கு இந்த மாதிரி தில்லுமுல்லெல்லாம் பிடிக்காது நான் அவன்கிட்டேயும் பேசறேன். முதல்ல இந்த ப்ரியனைப் பிடிப்போம் வா....?! உத்ராவும் பரத்தும் அந்த அறையை நெருங்கி தாழ்பாளை நீக்கும் போது, ப்ரியன் அங்கே இல்லை. 

நான் கதவைப் பூட்டும் போது, ப்ரியன் உள்ளேதான் இருந்தான். இந்தப்பக்கம் வேற ஏதாவது வழியிருக்கா ?

எனக்குத் தெரியலை உத்ரா.... முதல்ல நான் ப்ரியன் மேல போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்துடறேன் அதுக்குப்பிறகு பத்மினியைத் தேடலாம் நீ கவலைப்படாதே பத்மினிக்கு ஒண்ணும் ஆகாது. அவர்கள் புறப்பட்ட அதேநேரம் அலெக்ஸ் ஏஞ்சலினாவின் கப்பலும் அந்தத் துறையில் வந்து சேர்ந்தது. 

நேரம் போகப் போக பத்மினியினால் இருப்புக்கொள்ள முடியவில்லை, தகுந்த ஏற்பாடுகள் அந்த சுரங்கத்தில் இருப்பதால் சுவாசம் பற்றிய பிரச்சனையில்லையென்றாலும் பசி வயிற்றைக் கிள்ளியது. என்ன செய்வது ? அள்ளிக்குடிக்க அளவில்லாத நீர் இருக்கிறது ஆனால் தாகம் தணிக்க தண்ணீர் இல்லை, உண்ணவும் உடுத்தவும் வழியில்லை, ஏற்கனவே 8 மணிநேரங்களுக்கு மேலாகிவிட்டது, என்ன செய்யலாம் என்று மீண்டும் அந்த குட்டித் திரை வழியே வெளியே பார்வையிட்டாள். கண்ணாடித் திரை வழியே ப்ரியனின் முகம் விகாரமாய்த் தெரிந்தது. ....

தொடரும்...

Episode # 21

Episode # 23

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.