(Reading time: 10 - 20 minutes)

"கொலுசு சத்தம் கேட்க வேண்டாமா?"குறும்பு புன்னகை.

காதல் கனம் கலைத்தது அவன் அலைபேசி

"ம்ம்ம இப்போ உன் போன் சத்தம் கேட்குது எடுத்து பேசு"

அலைபேசி என்ன செய்தி சொன்னதோ துவண்டு போனான். நீண்ட மௌனம் பின் இயல்பானான்.அன்று சாலையில் ஒரே வண்டியில ஆனால் புதிதாய் ஒரு நெருக்கம்.சில சீணடல்கள்.சில ஸ்பரிசங்கள்.

இந்த கொலுசு என் தூக்கம் பறித்தது.காலில் அவன் போட்டது கொலுசா?இல்லை அவன் இதயமா ஓயாமல் ஒளித்து என்னை சீண்டுகிறது.எப்போதும் அவனோடு இருப்பதாய் ஒரு எண்ணம்.கொலுசு தொட்டு பார்க்கும் போதெல்லாம் அவனை தீண்டுவதாய் ஒரு ப்ரமை.இது காதல் தான்.ஆனால் இந்த அவஸ்தைகள் அவனுககும் உண்டா?.அருகில் அமர்ந்தால் அவனை தீண்டாமல் இருக்க முடியவில்லை. வண்டியில் பயணித்தாலும் அவனை பிரியமுடிவதில்லை.அவன் மூச்சுக்காற்று என் உயிர் சுடுகிறது.அவன் பார்வை என்னை கொள்ளையிடுகிறது.அவன் விடைபெற்ற பிறகும் அவன் பிம்பம் கண்ணுக்குள் சுற்றி சுற்றி வருகிறது. எல்லாம் அவன் எதிலுய் அவன்சொல்லிவிடலாமா?ஒரு வேளை அவனுக்கு இந்த அவஸ்தை இல்லை என்றால்..

என் தனி உலகில் நான் மிதக்க என் அப்பா அவர் கடமையை சரியாக செய்ய தொடங்கினார். பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. எப்போதும் என் மனம் அறியும் என் அப்பா என்னை ஏன் எதுவும் கேட்கவில்லை என தோன்றினாலும் அவசர ஏற்பாடு என்பதால் எதுவும் சொல்ல முடியவில்லை. என் காதலை ஆழமாக்கியது இது.கல்யாணமா எனக்கா?வேறொருவர் உடனா,?என் அறிவ,என் காதல்?என் கனவு?முதன்முறையாக பயம் தொற்றிக்கொண்டது. காதல் சொல்லாமல் என் வாழ்க்கை தடம் மாறிவிடுமோ என்று அஞ்சினேன்.அறிவழகன் சந்தித்து பேச வேண்டும். அதுவரை....?அப்பா என் தோழன் தான் ஆனால் காதல் சொல்லும் நேரம் இது அல்ல.அவர் கௌரவ ப்ரச்சனை.பெண பார்ககத்தானே வரட்டும்..என் சம்மதம் இல்லாமல் அப்பா முடிவெடுக்க மாட்டார்.பெண் பார்கக வந்தாரகள் நிறைய திண்றாரகள என்னவோ பேசினார்கள். அப்பாவிற்கே திருப்தி இல்லை. நிம்மதி அடைந்தேன். அன்று மாலையே அவனை சந்திக்க வற்புறுத்தினேன்.

"அறிவு இன்றைக்கு எங்க வீட்டுக்கு சில கெஸ்ட் வந்தாங்க"

"என்ன விஷயம்"

"என்ன கேட்காத எதுக்கு கேளு"

"எதுக்கு?"

"என்னை பெண் பாரக்க"

கலைத்த அவன் முகத்தில் சலனம்..அதிர்ச்சியாய்....

"என்ன.....நீ பொம்மை மாதிரி அலங்கரிச்சிட்டு நின்றயா?"

அவன் கோபம் ஏனோ குளிர்ந்தது என்ககு.

"நம்ம ஊரில அப்படி தான் அறிவு"

"என்ன சொன்னான்...... மாப்ப்ப்பிள்ளை"பேச்சில் அனல்

"என்னை ரொம்ப புடிச்சி போச்சாம்"

"ஆங்....எப்போ கல்யாணம்"

"அதுவும் ஆச்சு கையோட தாலி கட்டியாச்சு"சிரித்தேன்.எரிமலையானான்.

"முன்னமே என் கிட்ட ஏன சொல்லல"

"எனக்கே காலைல தான் தெரியும்...அம்மா வற்புறுத்தல்"

"அப்படியே கட்டிக்க சொல்லுவாங்க கட்டிக்கோ"

"என்ன இவ்வளவு கோபம்"

"நீ பொம்மை மாதிரி நின்றிருப்ப அவன் என்ன எண்ணத்தோட உனை பாரத்தானோ நினைக்கும போதே கோபம் வருது"

"என் வாழ்க்கை துணை இவ தானோன்னு பார்த்திருப்பார.நீயும் பெண பாரகக போன்ன அபபடி தானே"

"நான் ஏன வேற பொண்ணு பார்க்கனும் அதான் தினமும் பாரக்கிறேனே"அவனை அறியாமல் வந்து விழுந்தது வார்த்தைகள்.மகிழ்ச்சி உச்சமாக

"என்ன என்ன சொன்ன இப்போ"

"உன்னை தான் டீ சொன்னேன்"

"தெளிவா சொல்லு...எர்க்கு விளங்கல"கோபத்தின் உச்சியில் இருந்த் அவன் தனக்கு ஒரு தடை போட்டுக்கொண்டு

" என்ன விளங்க வேணும் உனக்கு. நமக்கு தெரிஞ்ச விஷயம் தானே."

"அதை தான் தெளிவு படுத்த சொல்வறேன்."

"மனசும் மனசும் பரிஞ்ச அப்புறம் பேச்செல்லாம் வீண்"

"பேசிட்டா குழப்பம் போகும்"

"குழப்பம் எனககிலலை கயல்"

அழுத்தக்காரன்.அவனே சொல்லாமல் நான் எதுவும் வாங்க முடியாது. அவனுள் நான் இருப்பது தெளிவான பின்னும் அவன் வாய் வார்ததைக்கு ஏங்கியது உள்ளம்.தாபங்களோடு விடைபெற்றோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.