"ஏய்!எனக்கும் இது முதல் தான் டீ...என் கண்ணைப்பாரு.....இதுக்கே இப்படி னா அப்புறம் ரொம்ப கஷ்டம்"குறும்பாய் சிணுங்கினான்
என் வெட்கம் அவனுடையது தானே என்று மெல்ல தலை திருப்பி அவன் கண்களை நோக்கினேன். காதல் ததும்பும் அந்த காந்த கண்களால் என் வெட்கம் அளந்தான். அவன் கண்களில் வீழ்ந்த இந்தகயல் இன்று வரை எழமுடியவில்லை. காதல் சில சமயம் கண்க்கட்டி வித்தை தான். அது நம்மை ஒரு தனி உலகில் உலவ விடும்.அதை மீறி இயல்பு வர போராட்டம் நடத்த வேண்டும்.எங்கள் இயல்பு திரும்ப சிலமணித்துளிகள் ஆனது.
கண்ணில பறிமாறிய காதல் கைகளில் பாயசசிக்கொணடோம்.கோர்த்த கை பிரிககாமல் எவ்வளவோ பேசினோம்.அந்த நிமிடங்கள் எல்லாம் நான் கமேகத்தில மிதந்து வானவில்லை கைப்பற்றினேன்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
எங்கள் தவம் கலைத்தது அவன் அலைபேசி.எண்ணைபபாரத்த அவன் முகம் சற்று மாறியது.ஒரு நிமிடம் கேட்டுவிட்டு அரைமணியாய் பேசிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் பெரிய வாட்டம். மௌனமாய் அமரந்திருந்தான்.அவன் மௌனமே அவன் இதய சுமை அளவை காட்டியது.சுமை தாஙக நான் இருப்பதாய் "என்ன ஆச்சு அறிவு....ஏதாவது ப்ரச்சனை யா?"
"ஒன்றுமில்லை கயல்..சமாளிககக் கூடியது தான்"
"நீங்க இப்போதெல்லாம் இப்படி தான சோர்ந்துபோறீங்க...சின்ன விஷயத்திற்கு இப்படி இருக்க மாட்டீங்களே...என் கிட்ட சொல்லக்கூடாதா?"
"அப்படிஇல்ல கயல்..இது எளிதில் முடியற விஷயம்..உனக்கு எதுக்கு கஷ்டம்"
"உங்க சுமை குறையுமே"
"என் சுமையை நான் தான் சுமக்கனும்"
என்ன நினைத்தானோ என் கையை பற்றி சின்னதாய் ஒரு முத்தமிட்டான்.கண் ஓரம் சற்று பனித்தது.
"கயல்விழி நீ எப்போதும் சந்தோஷமா இருக்கனும்.உன் சிரிச்ஞ முகம் தான் என் பலம்"
நெகிழ்ந்து போனேன் அவன் செயலில்.
சிற்பம் செதுக்கப்படும்
Go to En Kathale story main page
{kunena_discuss:1244}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.