(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - என் காதலே – 05 - ரம்யா

En kathale

லவண்ணக்கனவுகளாய் சிறகடித்த எங்கள் காதல் தருணங்கள் ஏனோ அவ்வப்போது ஆட்டம் கண்டது.ஏதோ ஒன்று அறிவழகனை அனுஅனுவாய் தின்றுக்கொண்டிருந்தது. அழுத்தக்காரன் அவனிடம் ஏதும் அறியமுடியவில்லை.அவனின் வாட்டம் என்னை பெரிதும் பாதித்தது.சில நேரங்களில் அவனிடம் பெரும்கோபம் கூட எட்டிப்பார்த்தது. மன்னிப்பு கேட்கும்படி நடக்காதவன் இப்போது அடிக்கடி மன்னிப்பு கேட்டான்.குழப்பங்களாய் நாட்கள் நகர்ந்தது. அப்பாவிடம் உதவி கேட்க நினைத்தேன்.யாதவிடமும் அப்பாவிடமும் எதுவும் மறைத்ததில்லை ஆனால் ஏனோ என் காதல் மட்டும் மறைத்தேன்.என் வேதனை தீர வழி ஒன்று கிடைக்காதா என்று ஏங்கினேன்.அறிவை கேட்டால் பதில் இல்லை. அவன் வலி அறியவும் வழி இல்லை. அவலைபேசி சிணுங்கியது.யாதவ்.

"என்ன கயல்?எப்படி இருக்க?ரொம்ப நாள் ஆச்சு நீ பேசவே இல்லை?!ரொம்ப வேளையா?!"அவன் குரலில் ஏதோ சோகம்.

"யாதவ் இப்ப தான் டா உன்னை நினைச்சேன்.ஏன் ஒரு மாதிரி இருக்க....என்ன ஆச்சு"

"நானே பேசின் இப்படி சொல்லுவ நீ யே பேச மாட்டேங்கற......சரி விடு உன்கிட்ட நிறைய பேசனும் நாளை சென்னை வரேன்....எனக்காக கொஞ்ச நேரம் கொடு கயல் "கெஞ்சலாய் கேட்டான்.

"என்ன யாதவ் நீ வா பேசலாம்.... கொஞ்சம் வேலை அதிகம் டா அதான் பேசமுடியலை"பொய் சொன்னேன் அவனிடம் முதல்முறையாக.

"ம்ம்ம் ரகு இருப்பாரா அவர் கிட்ட கூட பேசனும்"

"நாளைக்கு லீவு தானே எல்லாரும இருப்போம் நீ வா....ஆங் சாப்பிட வந்திடு..இல்லைனா.உங்க அத்தை அப்புறம் திட்டுவா"

"சரி கயல் வரேன்...."

அலைபேசி அணைத்துவிட்டு மொட்டை மாடி சென்றேன்.தனிமை தேவைப்பட்டது.மனம் ஏனோ அலைபாய்ந்தது.என்ன ஆயிற்று எனக்கு யாதவ் ஏன் மறந்தேன்.அவனிடம் சொன்ன பொய் நெஞ்சை நெருடியது.அறிவழகன் நினைவுகள் முழுமையாக என்னை ஆக்ரமித்து கொண்டன.அவனை மீறிய சிந்தனை என்க்கு எதுவும் வரவில்லை. மாறித்தான் போய்விட்டேன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

யாதவ் வருகைக்காக என் அம்மா காத்திருந்தாள்.அவனுக்கு பிடித்த உணவு சமைத்து உற்சாகமாய் உலவினாள்.சென்னை வந்தபின் அவனை அவள் பெரிதும் இழந்தாள்.வந்த புதிதில் நானும்தான்.இந்த இரண்டாண்டு சென்னை வாசத்தில் அவன் ஒருமுறை தான் வந்துபோனான்.எப்போதும் தன் நண்பர்களுடன் வெளியே செல்லும் கண்ணண் கூட யாதவ் வருகைக்காய் காத்திருந்தான். எங்கள் குடும்பத்தில் எப்படி இழைந்துவிட்டிருநதான் அவன்.அக்கம்பக்கம் வீடாயினும் எங்களுக்கு பேதம் தெரியவில்லை. அவனோடு சண்டையில் ஆரம்பித்த உறவு ஆழ்ந்த நட்பாய் மலர்ந்தது.எப்போது எப்படி தெரியவில்லை.அறிவழகனுடன் நேரம் செலவழிக்க துவங்கியதும் அவனை மறந்து போனேன்.வாரம் தவறாமல் அவனுடன் மணிகணக்கில் பேசும் நான் இரண்டு மூன்று வாரம் கூட பேசாமல் இருந்தேன்.இப்போது அவனுடன் சரியாகபேசி இரண்டு மாதம் இருக்கும்.அவனாய் பேசும் போதும் ஏதோ காரணம் சொல்லி சில நொடிகளில் பேசிமுடித்தேன்.அதைவிட பெரிய உறுத்தல் அவன் பேச்சில் இருந்த சோகம்.ஏதோ ப்ரச்சனையில இருககும் அவன் என் நட்புக்காய் ஏங்கியிருக்கிறான்.இதை நான் எப்படி அறியாமல் அவனைவிட்டு தள்ளி நின்றேன்.இன்று அவன் வந்ததும் அவனுடன் மட்டுமே பேச நினைத்தேன். தோழியாய் தோள் கொடுத்து அவனை உற்சாகப்படுத்த உறுதிகொண்டேன்.

தனியாக பேச வேண்டுமென்றான்.கஃபே அழைத்து போனேன்.நானும் அறிவழகனும் செல்லும் இடம்.ஏனோ அவன் என் அருகில் இருப்பதாய உணர்ந்தேன்.அலைபேசி அழைத்தது.அவன் தான்

"கயல்....எங்கயிருக்க"

"நான் சொன்னேனே யாதவ் வந்திருக்கான்.அவனோட தான் இருக்கேன்.அப்புறம் பேசறேன்"

மறுமுனையில் பதிலுக்காக கூட காத்திருக்காமல் ...யாதவ் அருகில் இருப்பதால் அலைபேசி அமைதியாக்கினேன்.என் முழு கவனமும் யாதவிடம் செலுத்தினேன்.என்னிடம் பேச இவ்வளவு வைத்திருககிறானா என்று வியக்கும் வகையில் அத்தனை பேசினான்.வெகு நாட்கள் கழித்து என் ஊர் கோயிலில் நாங்கள் பேசும்போது ஏற்படும் மகிழ்ச்சி உள்ளமெங்கும் பரவியது.எவ்வளவு நேரம் போனது தெரியவில்லை. எத்தனையோ பேசினோம் ஆனால் என் காதல் மட்டும் பேசவில்லை.

திடீரென"கயல் நீ யாரையாவது காதலிக்கிறாயா?"என்றான்.சற்றும் இதை எதிர்பாராத நான்

"என்ன யாதவ் ரகு கேட்டானா?அப்பா?"

"சே சே மாமா பற்றி உனக்கு தெரியாதா ...ரகு கிட்ட என் பிஸினஸ் விஷயமாத்தான் பேசினேன்..நானே தான் கேட்டேன்.பதில் சொல்லு கயல்"

"இப்போ என்ன கேள்வி... அதைவிடு நீ ஏன்சோகமாயிருக்க....என்ன ப்ரச்சனை..... நீ சிரித்து பேசினாலும் ஏதோ உன்னை படுத்துது என்ன அது சொல்லு யாதவ்"

"ம்ம்ம்ம் சொல்லறேன்.உனக்கு இராணி ஞாபகம் இருக்கா?அவளுக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது"

"இதென்னடா இப்படி சொல்லற...உன்னை தானே மாமா மாமா ன்னு சுத்துவா...அதான் துரை சோகமா....உனக்கு முறை பொண்ணுதான டா....வீட்டில் சொன்னா முடிஞ்சிடுமே...நான் வேணா மாமா கிட்ட பேசவா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.