Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 13 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 13 - சசிரேகா

en vazhve unnodu thaan

சென்னையில் உள்ள யாமினியின் வீட்டில்

அந்த வீட்டில் ஒரு பக்கம் மகாலட்சுமி தன் கணவர் சத்யனிடம் ஏதோ ஒரு விசயத்திற்காக சத்தமாக கத்திக் கொண்டிருந்தாள்

இன்னொரு பக்கம் கதிரவன் தனது மனைவி தான்யலட்சுமியை திட்டி அவளை உலுக்கி  அழவைத்துக் கொண்டிருந்தான்.

மறுபக்கம் வீரலட்சுமியும் மனோகரனும் தங்கள் கையிலிருந்த பேப்பர்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து மாறி மாறி திட்டிக்கொண்டு இருந்தனர்.

அடுத்து மிக அழகான ஐஸ்வர்யலட்சுமியிடம் அவளது கணவர் வினோதன் சிறிய மாடர்ன் ட்ரஸ் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அவளிடம் காட்டி அந்த உடையை அணியச் சொல்லி வற்புறுத்த அதற்கு அவள் மறுக்கவும் இருவரும் கோபமாக அது குறித்து வாதாடிக் கொண்டு இருந்தனர்.

ஒரு பக்கம் டிவி ஓடிக்கொண்டிருக்க அதில் ஷேர்மார்கெட்டிங் போய்க் கொண்டிருக்க அதன் முன் தனலட்சுமியை நிற்க வைத்து அவளது கணவர் சந்திரன் கோபமாக டிவியை காட்டி காட்டி அவளிடம் ஏதோ கத்திக் கொண்டிருந்தான்.

அடுத்து நந்தகுமாரிடம் அவனது மனைவி கஜலட்சுமி பயந்து பயந்து பேச அவனோ அவளது தோளை பிடித்து உலுக்கிக் கொண்டும் அவளது காதருகில் ஏதோ  சொல்ல சொல்ல அவளோ அதைக் கேட்டு பயந்துபோய் நடுங்கிக் கொண்டிருந்தாள். 

அடுத்து குணசீலன் தன் மனைவி விஜயலட்சுமியை சோமசுந்தரத்திடம் நிற்க வைத்து தனிப்பட்ட பிரச்சனையைப் பேசி கத்திக் கொண்டிருக்க அவளோ அழுதுக் கொண்டிருந்தாள். சோமசுந்தரம் குணசீலனை சமாதானம் செய்ய போராடிக் கொண்டிருந்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

யாமினியின் தாயார் பல்லவியிடம் அவரது தம்பி விஸ்வா நின்று கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருக்க பல்லவியோ குழப்பத்துடன் விஸ்வா சொல்வதை கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

ஆதித்யவர்மனோ உள்ளே நடக்கும் நிகழ்வுகளை ஒரு முறை பார்த்துவிட்டு நொந்து போய் கண்கள் மூடியவன் சில நொடிகள் கழித்து கண்கள் திறந்து கோபமாக அந்த வீட்டினுள் நுழைந்து தைரியமாக நின்றுக் கொண்டு சத்தமாக உரத்த குரலில் கத்தினான்.

”ஏய்ய்ய்ய்ய்”

அவனது குரல் அந்த பங்களாவை ஒரு நிமிடம் ஆட்டி வைத்தது. அவன் கத்திய கத்தலில் அங்கிருந்தவர்கள் அமைதியாகி அவனையே வேடிக்கை பார்த்தனர். டிவி மட்டும் ஓடிக் கொண்டிருக்கவே வேறு எந்த சத்தமும் வராமல் போக மெதுவாக உள்ளே நுழைந்தான் ஆதி.

வந்தவன் நேராக பல்லவியை பார்த்தான். அடக்கமாக அழகாக இருந்தாள். அவளைப் பார்த்து சிரித்துவிட்டு திரும்பியவன் கோபமாக அனைவரையும் பார்த்து

”இது என்ன வீடா இல்லை மார்கெட்டா, படிச்சவங்கதானே நீங்க, புத்தியில்லை, நீங்க கத்தற கத்தல் தெருவுக்கு கேட்குது, சண்டை போடறதாயிருந்தா தெருவில போய் போடுங்க வீட்டுக்குள்ள ஏன் இப்படி கத்தறீங்க” என அவன் கத்தவும் அவனையும் அவனது செயலும் பேச்சும் கண்டு அங்கிருந்தவர்கள் வியப்பாகவும் குழப்பமாகவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாமினி தன் தந்தையிடம் அமைதியாகச் சென்று நின்றது கூட யாரும் கவனிக்கவில்லை அனைவரின் பார்வையும் ஆதியின் மீதே சந்தேகத்துடன் பதிந்திருக்க அவர்களில் முதலில் தன்னிலை பெற்றவள் மகாலட்சுமியே. ஆதியின் பேச்சால் கோபமடைந்தவள் அவன் முன் வந்து தைரியமாக நின்று பேசினாள்

”யார் நீ? எங்க வீட்டுக்கு வந்து எங்களை எதுக்கு அதிகாரம் பண்ற” என திமிராக கேட்கவும் அவளை ஏற இறங்கப் பார்த்தான்

ஜீன்ஸ் பேன்ட் மற்றும் சர்ட்டில் பார்க்க பெரிய கம்பெனியில் வேலை செய்யும் சிஇஓ போலவே இருந்தாள்.

கையில் ஒரு ஆபிஸ் ஃபைலுடன் முகத்தில் ஆணவமும் கண்களில் திமிரும் பார்த்த உடனே ஆதிக்கு அவளின் கம்பீரம் மிகவும் பிடித்துவிட்டது.

அவளின் அருகில் சென்று நின்றான். அவளோ அவனைக் கண்டு பயப்படாமல் சற்று கூட அசையாமல் நிற்பதைப் பார்த்து சிரித்துவிட்டு

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரம்யாவின் "என் காதலே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”அழகா இருக்கற பொண்ணுங்களுக்கு அறிவு இருக்காது, அறிவா இருக்கற பொண்ணுங்களுக்கு அழகு இருக்காதுன்னு யாரோ சொன்னாங்க ஆனா, உனக்கு ரெண்டும் இருக்கு அதனாலதான் இவ்ளோ கம்பீரமா இருக்க, பிடிச்சிருக்கு, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீ அழகாயிருக்கறதால இல்லை இவ்ளோ கம்பீரமா திமிரா இருக்கியே இந்த திமிர் எனக்கு பிடிச்சிருக்கு” என்றான் அமைதியாக

அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் தன் திமிரான பார்வையை  மாற்றி கண் இமைகள் படபடக்க அமைதியாகி சற்று விலக முயன்றவளிடம் ஆதி

”என்னை யார்னு கேட்ட, நான் பதில் சொல்றதுக்கு முன்னாடியே நீ பின்னாடி போனா என்ன அர்த்தம்” என அவன் சொல்லி சிரிக்கவும் அவள் மெதுவாக

”யார் நீ” என்றாள் மென்மையாக

”இப்படியா கேட்கிறது இது நல்லாயில்லை, யாமினி பேசற மாதிரி இருக்கு, எனக்கு பிடிக்கலை கொஞ்ச நேரம் முன்னாடி கேட்டியே அப்படி கேளு அட கேளு மகா” என அவன் உரிமையாகச் சொல்லவும் அவளுக்கு சிரிப்பே வர யாமினியைப் பார்த்தாள்

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8  9 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 13 - சசிரேகாராஜேந்திரன் 2019-01-29 15:25
kalakitta aadhi first ballaye 7 run adichitiye dhool superya
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 13 - சசிரேகாராணி 2019-01-29 15:17
சூப்பர் ஆதி அந்த வீட்டு பொண்ணுங்களோட பேசற விதம் புத்திசாலித்தனம் நல்லாயிருக்கு அருமையான எபி :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 13 - சசிரேகாvijayalakshmi 2019-01-29 15:11
hahaha nice update aadhiyoda smartness super :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 13 - சசிரேகாmahinagaraj 2019-01-29 13:02
ரொம்ப அருமை மேம்.. :clap: :clap:
ஆதி செம கில்லாடி எல்லா பிரசனையும் சமாளிச்சிக்குவாறு... :GL:
ரொம்ப அருமையான கதை களம் மேம்.. ஜாலியா இருக்கு.. :lol: :D
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 13 - சசிரேகாAdharvJo 2019-01-28 14:38
:D Sasi ma'am highlight aadhi oda pitch thaan, Avaru kathave thevai illai :grin: Loud speaker!! I think in process of solving others issue Aadhi's life will be trapped :D Ithanai pullaingalai pethukuradhu perasu illai uncle problem vandha solve pana theriyanum :yes: Already aadhi last 5yrs idhula ippadi oru sodhapal family anyway looks like he will sort out everything easily. thank you for the fun-filled update sasi ma'am :clap: :clap: Veedula sandai podakudadhama road la podanumam :D hearing it for the first time apro road-k vandha Mr Adhi solve panuvaram :P Pesi Pesi aalai kavukuraru pa bheemboy. Look forward to read the next update. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 13 - சசிரேகாmadhumathi9 2019-01-28 11:25
wow nice epi.aadhi seiyarathu nallathaan irukku.eppadi ellorum than manaivigaludan sergiraargal endru therinthu kolla aduthu varum epiyai miga aavalaaga ethi paarthu kondu irukkirom. :thnkx: 4 this epi :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top