"என்ன டீ கஃப்ட் ?"
"பாரு அறிவு?பிடிச்சிருக்கா?இரு நானே போட்டு விடறேன்"
"ம்ம்ம மணி பார்ககும் போதெல்லாம் இந்த கண்மணிய நினைக்கனுமா?"புன்னகை
"உனக்காக உன் கண்மணி காததிருக்கா என்று நினைக்கனும்"
"உன்னை மறக்க மாட்டேன் கயல்...நீ என் நித்திலம்.ஐ....."
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
"என்ன என்ன"
"ஒன்றுமில்லை"முதல்முறையாக அவனின் வெட்கம்...எத்தனை அழகு..
"அறிவு சொல்லு டா ப்ளீஸ்"
"ஐ லவ் யூ கயல்விழி போதுமா...இப்போ என் கிஃப்ட் வாங்கிக்கோ"
என் கண்கள் குளமாக அவன் சொன்ன வார்ததைகள் என் நெஞ்சில் எதிரொலித்துக்கொண்டிருக்க அவன் முகம் பார்த்து எத்தனை நேரம் நின்றேனோ?என் கைகளில் அவன் இதழ் தவழ சுயநிலை பெற்றேன்.
"என்ன கயல் இதை நான் சொல்லனும் தானே இத்தனை நாள் ஆசைபபட்ட இப்போ சந்தோஷமா...நானும் உனக்கு கடிகாரம் தான் வாங்கியிருககேன் பாரு.நல்ல பொருத்தம் தான நமக்கு"
"இப்போ தான் தெரியுமா?"
"கயல் நான் கொடுக்க நினைத்தது இது மட்டுமல்ல இன்னொன்று இருக்கு...தரட்டுமா?"
"என்ன?"காதலன் கையால் பரிசு எந்த காதலிக்கு ஆர்வய் இருக்காது?!
"தெரிஞ்சி தான் இவ்வளவு ஆர்வமா?இல்ல புரியலையா?"
கீழ் உதடு கடித்து அவன் விடுத்த ஒற்றை புன்னகையில் புரிந்தது அவன் பரிசின் அர்த்தம்.
"அய்யோ வேண்டாம்"நான் சிவந்து சிணுங்க
"உன் வெட்கம் பார்ததா வேணும்ன்னு சொல்லற மாதிரி இருககே"
"ச்சீ போ"
என் கைகள் அவன் மார்பில் பதித்து தள்ள எத்தனிக்க,அவன் கை என் இடை வளைத்து இறுக்கி அனைக்க,அவன் இதய துடிப்பும் என் இதய துடிப்பும் ஒன்றாய் கேட்க,அவன் மூச்சுக்காற்று என் மூச்சுக்காற்றில இனைய,என் கண்கள் அவன் கண் காண முடியாமல் மூடிக்கொள்ள எங்கள் இதழ்கள் மட்டும் பின்னிக்கொண்டன.
உடம்பெல்லாம் மின்சாரம்.காற்றும் நின்றது.உலகமே நின்றது.அவன் இதழ் தான எத்தனை மென்மை அவனைப் போலவே.எத்தனை நேரம் இந்த தவம் தெரியவில்லை. என் கண்ணின் துளி ஒன்று அவன் தவம் கலைததது.
"கயல்"
அவனின் தாழ்ந்த குரல் ன் தவம் கலைத்தது. கண் திறந்தேன் வரமாய் அவன் காதல் பார்வை.அழகிய புன்னகை. மெல்ல தலை சாயததேன அவன் மார்பில்.
"கயல் ஏன் கண் மூடிகிட்ட...மறுபடி....?"
அவனை மெய்யாகவே தள்ளினேன். இழுதது அனைததுக்கொண்டான்... பிரிந்திருக்கும் நாட்களுக்குமாய் சேர்த்து.கொஞ்சலும் தீணடலுமாய் அன்று கடந்தது.அவனும் பிரிந்தான்.
சிற்பம் செதுக்கப்படும்
Go to En Kathale story main page
{kunena_discuss:1244}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.