(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - என் காதலே – 06 - ரம்யா

En kathale

ன்றோடு ஒரு மாதமாயிற்று என் அறிவழகன் பிரிந்து.தினமும் அலைபேசியில் பேசினாலும் அவன் தீீண்டல் இல்லாமல் அவன் நிஜ தோற்றம் இல்லாமல் வாடித்தான் போனேன்.

"கயல் எப்படி இருக்க?"

"நல்லாயிருக்கேன் நேற்று தான பேசினோம அதுகுள்ள என்ன கேள்வி இது."

"நேற்றைய பரிசு உன்னை தூங்க விட்டிருக்காதுன்னு நினைததேன்"

"நல்லா தான் தூங்கினேன்"

"அப்போ சரியா வந்து சேரலையா?நேரில் வந்து சேரட்டுமா?"

"நிஜமா வந்திருக்கீங்களா?"

"அவசரம் என்ன...ஆன் தி வே."

"எப்ப வருவீங்க எங்க பாரக்கலாம்"

"ம்ம்ம்ம் என் நண்பன் கதிர் வீட்டில்?நாம் மட்டும்?"

"வீடா?நாம் மட்டுமா?வேண்டாமே...வழக்கம் போல கோயில் பீச் பார்க்?"

"ஏன் கயல்...அவன் வீட்டில் தனிமை கிடைக்கும்"

"அது தான் வேண்டாம்..ரொம்ப நாள் அப்புறம் பார்க்க போறோம் அதுனால...அதுனால"

"அதனால என்ன....எல்லை மீறிடுவோம்னு பயமா?என் மீது நம்பிக்கை இல்லையா?அப்படி மீறினா என்ன கயல்..."

"என் மீது கூட நம்பிக்கை இல்லை அறிவு...தப்பாயிடும்"

"என்ன தப்பு..நான் தானே"

"உங்கள் பார்வையில் இதுவும் காதல் என் பார்வையில் இது வாழ்க்கை, புனிதம். இறுதிவரை நெஞ்சில் நிற்கின்ற விஷயம்.அது முறை படி முழு அங்ககீகாரத்துடன் நடக்கனும்னு நினைககிறேன்.உணர்ச்சி பெருக்கில் இல்லை"

"முழு அங்கீகாரத்துடனும் உணர்ச்சி பெருக்கு இருக்கும கயல்.இதை ஏன் நம் காதலின் முழுமையா பார்ககக்கூடாது?"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"அந்த முழுமை நாம் கணவன் மனைவியா நடக்கனும்னு ஆசைபடறேன்.என் பக்கம் கொஞ்சம் யோசிஙக.நமக்கு கல்யாணம் ஆகி கணவன் மனைவியா நம்ம வீட்டிற்குள் முழு சுதந்திரத்தோட முழு உரிமையோட எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சேரநதா நல்லாயிருக்கும் இல்ல"

"பின்னிட்ட போ பொண்டாட்டி"

"என்ன?"

"நீ தானடி கண்ணழகி என் பொண்டாட்டி"

கண்கள் பனித்தது. இதயம் குளிர்ந்தது. இது நிஜமாகும நாள் விரைவில் வராதா என் ஏக்கம் என்னை தொற்றிக்கொண்டது. பெண்களுக்கு காதல் வந்தால பெரும்பாலும் கல்யாண க்கனவாகி விடுகிறது. ஆண்களுககு மட்டும் ஏனோ அப்படி இல்லை. கல்யாண்ததில் காதல் குறைவதாய் நினைக்கிறாரகளோ...?

வார்த்தையாக அவன் அழைத்த உரிமை பெயர் எனக்கு சுகமளித்தது.இனி அவன் மட்டுமே என் வாழ்வென என் மனம் பச்சை குத்திக்கொண்டது.அவ்வப்போது சந்திப்பகளுடனும் கனவுகளுடனும் நாட்கள் ஓடின.அவன் முகம் காணாமல் அவன் ஸ்பரிசம் பெறாமல் நெஞ்சம் பலவாறு ஏங்கியது. அலைபேசி மட்டுமே எங்களை இணைத்துக்கொண்டிருந்ததால் ஊடல்கள் அதிகமாயின.சின்ன சின்ன விஷயங்கள் கூடவிஸ்வரூபம் எடுத்தது.மன்னிப்பு கேட்கவோ தோள் சாயவோ முடியாமல் ஊடல்கள் எல்லாம் முடிவு காணாமல் ஊசல் ஆடின.நாட்கள் எல்லாம் சுமையாய் தான் போனது.அறிவழகன் அவ்வப்போது என் இணைப்பை துண்டித்தான்...தனிமை வேணடினான்.அவனை துரத்திக்கொணடிருக்கும் பூதம் என்ன என்று விளங்கவில்லை எனக்கு. இதனிடையில என் வீட்டில் மறுமுறை பெண் பார்ககும் படலம்.அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும். அறிவழகன் வீட்டார் சம்மதம் அடுத்த கட்டம்.அப்பாவிடம் இனியும் மறைக்க கூடாது.ஆனால் எப்படி?

காதல் தென்றலாய் தவழ்கிறது ஆனால் கல்யாணம் ஏனோ சூறாவளியாய் பயம் காட்டுகிறது.காதலில்தெரியாத ஜாதி மதம் இனம் மொழி எல்லாம் கல்யாணம் அப்படடமாய் காட்டுகிறது. காதல் கனவு கல்யாணம் வாழ்க்கை. வாழ்க்கை தான் கண்ட கனவாய் இனிமையாய் எத்தனை பேருக்கு வாய்ககும்.அலைபேசி அழைத்தது

"மிஸஸ்.கயல்விழி அறிவழகன்?"

"நீங்க?"

"உங்க புருஷன் தான் பொண்டாட்டி....."அவன் சிணுங்கல் என் வெட்கம் எழுப்ப

"என்னங்க இது"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"வெட்கமா?இப்படி போன்லயே வெட்கப்பட்டா எப்படி"

"நேரில வெட்கப்பட வைப்பது உங்கள் பொறுப்பு"

"யார்க்கிட்ட என்ன பொறுப்பு கொடுக்கறோம்னு யோசி கயல்.அப்புறம் என்னை குற்றம் சொல்லக்கூடாது"

"தெரிந்து தான் சொல்லறேன்"

"கள்ளி!இந்த சனிக்கிழமை என்னோடு தான் உன் நாள்.அப்போ பாரக்கிறேன் உன் வெட்கத்தை.இப்போவே சொல்லிட்டேன்.ப்ளான பண்ணிகோ பொண்டாட்டி"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.