(Reading time: 16 - 32 minutes)

அவன் முகத்திலிருந்து ஏதோ தோன்றியது. அது நல்லது என்று தோன்றவில்லை. அது என் மனத்தின் மாயை.அவன் வீட்டில் சம்மதம் வாங்குவான் என்று என் மனதிற்கு ஆறுதல் கூறிக்கொண்டேன். அன்றைய சந்திப்பில் அவன் வேலை பற்றியும் என் வேலை பற்றியும் இன்னும் பிற உலக நடப்புகள் பற்றியும் சுத்தி சுத்தி பேசினான்.எங்கே ஆரம்ப காலங்களில் இப்படி பேசுபவர்கள் தான். ஆனால் காதல் தோன்றிய பின் எங்கள் பேச்சில் இனிமைகள் இருந்தது. உரிமைகள் சின்ன அத்து மீறல்கள் எல்லாம் கலந்திருந்தது. இப்போது அது இல்லை. அவன் ஒற்றை ஸ்பரிசத்திற்கு ஏங்கியவள் அவனின் ஒற்றை காதல் பார்வை கூட கிடைக்காமல் வாடிபபோனேன். அவன் என்னை பிரியப்போகிறான். என் உள்ளுணர்வு சத்தமிட்டு சொன்னது.

அவனை சந்தித்து திரும்பியது முதல் என் மனம் புலம்ப தொடங்கியது.என் அறிவழகன் எங்கே?ஏன் இந்த இடைவெளி?என்ன நடந்தது?நான் என்ன தவறு செய்தேன்?.எப்போதோ எதற்கோ போட்ட சண்டைகள் எல்லாம் நினைவில் வந்தததுஇதனாலா அதனாலா என்று குழம்பினேன். பித்து ஏறிக்கொண்டிருந்தது.பல நினைவுகளையும் நிகழ்வுகளையும் அசை போட்டது மனது.ஒருமுறை அவன் அலைபேசியில் அழைத்தேன்.பிறகு அழைப்பதாய் துண்டித்தான் பல மணி நேரம் கழித்து அழைத்தான்.

"கயல் நான் கொஞ்சம் பிஸி.ஏதாவது அவசரமா?நான் இரவு வேளை முடித்துவிட்டு கால் பண்றேன்."மறுபடி துண்டித்தான் என் பதிலுக்கு கூட காத்திராமல். நான் அன்று கூற நினைத்தது மூன்றே வாரத்தைகள். இத்தனை நாள் நெஞ்சில் சுமந்து அவன் பிரிவில் பாரமாய் போன வார்த்தைகளை அன்று கொட்டிவிட எண்ணினேன். அது முடியாமல் போனது.மறுநாள் இரவு வரை காத்திருந்தேன். பிறகு நானே அழைத்தேன்.

"உங்ககிட்ட பேசனும் முககியமா ஐந்து நிமிடம் தான் ப்ளீஸ்"

"சொல்லுமா சாரி நிறைய வேலை பேச முடியலை"

"பரவாயில்லை. நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்...அது...."

"சொல்லு கயல்"

அவன் குரலில் எதிர்பார்ப்பா?இல்லை...

"என்னன்னா....."

புரிந்து கொண்டானா தெரியவில்லை. நீண்ட மௌனம்.பின் அவன் வேலை பற்றி பேசினான். சம்மந்தம் இல்லாமல் என் நண்பர்கள் பற்றி கேட்டான்.புரியாமல் குழம்பினேன். சொல்லிவிட வேண்டும்.

"நான் உங்களை காதலிக்கிறேன்...ஐ லவ் யூ அறிவழகன்.... ஐ மிஸ் சோ மச்...என்னிடம் வந்துடுங்க.. நீங்க இல்லாத எதுவும் பண்ண முடியலை அறிவு."குரல் தழுதழுத்தது

"கயல் அழாதே..நானும்.."ஏதோ சொல்ல வந்தவன் அதற்கு மேல பேசாமல் மௌனம் காத்தான்.ஒரு நீண்ட பெருமூச்சுடன்

"சாப்பிட்டியா கயல்?"

"என்ன?"

"இல்லை எனக்கு பசி சாப்பிட போறேன்..நீயும் சாப்பிடு நாளைக்கு பேசலாம்"

"நான் சொன்னது உங்களுக்கு கேட்கலையா?ஏன் பதில இல்லை?"

"கேட்டது கயல்.சாரி.நாம் நேரில் பேசுவோம்"

"இது பதிலா"

"கஷ்டப்படத்தாத கயல்.நான் நிறைய பேசனும்.நேரில் வரேன் பேசலாம்"

"சரிங்க..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"பை"அடுத்து வார்த்தை நான் பேசுவதற்குள் துண்டித்தான். தலையணையில் முகம் புதைத்து அழுது தீர்த்தேன்.இத்தனை ஆசையாய் நான் காதல் சொல்ல அவனிடமிருந்து சக்கையான வார்த்தைகளா?நானும் தான் கயல் என்று அவன் கூறப்போகிறான் எனறு எதிர்பார்த்த எனக்கு பெருத்த ஏமாற்றம். அவன் மனதின் காதல் எங்கே. அவன் உடலளவில் மட்டும் அல்லாது மனதளவிளும் தூரம் சென்றானா?அன்று இருந்த நெருடல் இன்று உரைத்தது.அன்று முதலே அவன் மாறிப்போனதாய் தோன்றியது. என்றுமே உரிமையாய் பொண்டாட்டி என்றழைக்கும் குரல்,இதயத்தை காதல் சாரலால் நனைக்கும் அவன் சிங்கார குறும்புகள், புன்னகைகள்,கெஞ்சல்கள்,கொஞ்சல்கள் எல்லாம் மாறிப்போனது.

என் மனப்போராட்டம் அன்றே ஆரம்பித்து விட்டது என்றாலும் என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். தூரத்தில் இருக்கும் அவனுக்கும் தவிப்புகள் இருக்கத்தானே செய்யும். மேலும் அவன் வேளை பளுவில் நேரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.இல்லை நேரில் சந்தித்து பேச நினைத்திருக்கலாம். இதை விட அவனை ஏதோ ஒன்று அழுத்திக்கொண்டு இருந்தது நான் அறிந்ததே. அவனை நான் முழுமையாக அறிந்தேன் என்று சொல்ல முடியாது. நேரில் பார்த்த பின் எல்லாம் மாறக்கூடும் என்று தான் நம்பினேன். ஆனால் நடந்தது வேறு.அமைதி கிடைக்கவில்லை. ஒரு ஸ்பரிசம் ஒரு தீண்டல் ஒரு ஆசைவார்த்தை எதுவும் இல்லை. உடைந்து போனேன். நாளை வரை ஏன் பொருக்க வேண்டும் இன்றே எனக்கு தெளிவு வேண்டுமெனத் தோன்றியது. எப்போதும் இரவு நேரம் அவன் தனிமை நாடுவது வழக்கம். அது அவன் நேரம்.கண்டிப்பாக என்னுடன் பேசுவான். அலைபேசியில் அழைத்தேன்.

"என்ன கயல் இந்த நேரத்தில்.... தூங்கலையா....நாளைக்கு தான சந்திப்போமே"

"எனக்கு தூக்கம் போய் வெகு நாள் ஆச்சுங்க.முககியமா பேசனும்.குழப்பங்கள் என்னை ஆட்டிப்படைக்குது.ப்ளீஸ்"

"ரொம்ப யோசிக்காதே..நாளை பேசலாம் கயல்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.