(Reading time: 16 - 32 minutes)

சனிக்கிழமை.... பெண் பாரக்கும் படலம்...அவனிடம் எப்படி சொல்ல.அப்பாவிடம் பேச வேண்டுமே.

"ஒரு சின்ன குழப்பம் அறிவு...சனிக்கிழமை பெண் பார்க்க வராஙகளாம்"

"என்ன விளையாடறயா?உன்னை சந்திக்க வரேன்னு சொல்லறேன்.இப்போ சொல்ற.."

"கோபப்படாதீங்க..பொறுமையா கேளுங்க ப்ளீஸ்"

"என்ன பொயறுமை.நான் வரலை நீ அலங்காரமா போஸ் கொடு"

"இப்படி சொல்லாதீங்க...நாம பேச நிறைய இருக்கு நீங்க வாங்க ப்ளஸ்"

"நான் வேற ஏன்...அதான் இன்னொறுததன் வரான் இல்ல"

"வார்த்தைகளை வீசாதீங்க.வலிக்குது,நம்ம காதல் பற்றி அப்பாவிடம் பேசனும்"

"பை"

நான் சொல்வதை அவன் கேட்டதாக தெரியவில்லை. அவன் ஆசை அணையை உடைத்த கோபத்தில துண்டித்தான்.

'உங்களை கட் பண்ண மனசு வரலை கயல்'முதல் பேச்சில் அவன சொன்ன வார்ததைகள் என்னை சுட்டது...கண்ணீராய் கண்கங்களை நனைத்தது.

அப்பா எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் காதல் பற்றி பேச மட்டும ஏனோ தயக்கம் இருநதுகொண்டே தான் இருக்கிறது. என் அப்பாவும் அறிவழகனும் மூன்று நான்கு முறை சநதித்து உண்டு.என் தோழன் என்ற வரை அறிந்திருக்கிறார் என் அப்பா என்று எண்ணினேன்.என் காதலன் அவன் என இன்று உடைத்து விட வேண்டும்.என் மனம் புகுந்து காதல் மலர்த்தியவன் அவன் என்றும எனக்காக அவனும் அவனுக்காய் நானும ஏங்கும் இப்த உறவு பற்றி அப்பாவிடம் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும்.அதோ அப்பா.கையில் புத்தகம். முதிர்ச்சியான முகம்.பாசமான கண்கள்.அவரிடம் மட்டும் நான் இன்னமும சிறு குழந்தை. மெல்ல நெருங்கி அவர்ஜமுதுகில் சாய்ந்து

"உன்கிட்ட கொஞ்சம் பேசனும் பா"

"சொலீலுமா"புத்தகத்தை உடனே மூடி வைத்தார்

"வெளியே போய பேசலாமா பா"

"சரி டா"

சட்டென புறப்பட்டார்.அவருக்கு என் மனம் செயல் எல்லாம் தெரியும். என்னை ப்பார்க்கும் கண்ணாடி அவர்.இப்போதும ஏதோ அறிந்திருந்தார். பார்க் பெஞ்ச்சில் அமர்நதோம்.

"என்ன கயல்....தயங்காம சொல்லு.எந்த சூழலிலும் என் அன்பு மாறாது குறையாது"

"அது தெரியும் பா..ஆனா நீ எப்படி எடுத்துப்பே ன்னு தெரியலை"

"உன் தோழனா நினைத்து பேசு மா...பெண் பார்க்க வராங்களே அதைப்பறறியா..(இது தான் என் அப்பா)உன் சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காது கயல் கண்ணா"

"நீங்க தான் என் உற்ற தோழன் அப்பா...எனக்கு கல்யாணம் வேண்டாம்"

சிர்த்துககொண்டார்"இப்போ கல்யாணம் வேண்டாமா இந்த வரன் வேண்டாமா"

"என்ன வித்தியாசம் பா...வேணடாம் அவ்வளவு தான்"

"வித்தியாசம் இருக்கு மா...சின்னதுல நம்ம நெருக்கம் பார்த்து உனக்கு கல்யாணம் ஆனா அப்பாவை பிரியனும்னு சொன்னா நீ கல்யாணம் வேண்டாம் னு சொல்லுவ...அதுக்கும் இப்ப சொல்லறதுக்கும் நிறைய வேற்றுமை இருககு கயல்"

"அப்பா தெரியாத ஒருத்தர் கூட வாழ்க்கை எப்படி பா..."

என் கைகளை அவர் கைகளுக்குள் புதைத்தார்

"கண்ணம்மா உன் மனம் திறந்து நீ நினைப்பதை சொல்லு"

"அது வந்து பா உங்களைப்போல யாதவ் போல அறிவழகன் போல என்னை புரிஞ்ச ஒருத்தர் கிடைச்சா தானே பா நான் நிம்மதியா வாழக்கை ஆரம்பிக்கமுடியும்"

சின்னதாய் ஒரு புன்னகை. அதில் ஆயிரம் அர்த்தத்தை உணர்ந்தேன்.

"யாதவ்?!அறிவழகன் போலவா அறிவழகனே வாழ்க்கை துணையாக வேண்டுமா?"

இப்படி உடைத்துக்கேட்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. தலை குனிந்தேன்.அப்பாவின் எண்ண ஓட்டம் அவர் முகத்தில் தெரியவில்லை.

"அறிவழகன் உன் நண்பன் மட்டும் தானா கயல்? அவருக்கு இதில் சம்மதமா?"

நான் எதிர்பார்த்த கேள்வி"கண்டிப்பாக அப்பா அவரும் தான் என்னை....."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "என் ஜீவன் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"உன் பதிலிலிருந்து உங்க உறவு எவ்வளவு வளர்ந்திருக்குன்னு புரியுது மா.நீ என் இதயம் கயல் எப்போது எப்படி துடிப்பு இருக்கும்னு தெரியும். நீயே சொல்லனும்னு தான் காத்திருந்தேன்.என்னை பொருத்தவரை உன் சந்தோஷம் தான் முக்கியம். உன் முடிவு எப்பவும் சரியாயிருக்கும்னு நம்பறேன்"

"உங்களுக்கு முன்னமே தெரியுமா...என் மேல கோபமா வருத்தமா"

"இல்லை டா..என் உயிரை வெறுக்க முடியுமா.இது தனி நபர் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. குடும்பம் சம்மந்தபபட்டது.அவர் குடும்பத்தில் உங்கள் காதல் பற்றி பேசினாரா"

"இன்னும் இல்லை பா.ஆனா கூடிய சீக்கிரம் நடக்கும் பா.உங்க சம்மதம் தெரிஞ்சிக்க தான் நான இப்போ சொல்லறேன் பா"

"இப்போது சம்மதம் மட்டுமே சொல்லமுடியும் இல்லையா மா?உன் உற்ற தோழன் நான் தான்னு நினைத்தேன்.அந்த இடத்தில் இனி இப்போ அறிவழகன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.