(Reading time: 16 - 32 minutes)

"அப்பா..."

"கோபம் இல்லை டா சின்ன வருத்தம். நம்ம குடும்பம் சம்மதம் என் பொறுப்பு. அவர் குடும்பம் சம்மதம் முக்கியம்"

"கண்டிப்பாக அவர் பேசுவார அப்பா"

"முதலில் உங்களுக்கு இடையே இருக்கும் ஊடல்கள் விரிசலகள் ஆகும் முன்னம் சரி பண்ணு..அத்தோட பெண் பார்க்கும படலம் ரத்து போதுமா"காதை செல்லமாக திருகினார்.

என் அப்பா எனக்கு இமயம் போல தெரிந்தார்.எத்தனை புரிதல் எத்தனை பாசம் இத்தணை அரவணைப்பு இந்த உலகில் யாருக்கும் கிடைக்காது யாராலும் கொடுக்கவும் முடியாது. ஊடல்கள் எப்படி தெரியும் அவருக்கு. அன்னையாய் அப்பனாய் ஆசானாய் தனயனாய் தோழனாய் சில சமயம் தோழியாய் எந்த விஷயமும் பேச முடியுமென இருந்த அந்த மாமனிதனுக்கு ஒரு வருத்தம் கொடுத்து விட்டேன.அது தான் வலித்தது.

"கயல் என்றைக்கும் உறவுகள் மேம்பட மன்னிப்பு கேள் மன்னிப்பு கொடு.எப்பவும் நிதானமாக பேசனும்.அலேபேசி வழியா பேசும் போது அடுத்தவர் சூழ்நிலை அறிந்து முன்எண்ணம் எதுவும் இல்லாமல் வெளிப்படையா பேசனும் மனம் திறந்து கேட்கனும்.வாழ்க்கை முழுதும் கூடவே வரும் உறவு இல்லையா.விரிசல் வரவே கூடாது"அப்பாவின் வாரத்தைகள் என் மனதில் ஆழமாக பதிந்தது.

இருமாதமாய் அறிவழகனிடமிருந்து சரியான தொடர்பு இல்லை ஆயினும் அவவப்போது அவன் அனுப்பும் குறுஞ்செய்தி சற்று நிம்மதி அளித்தது.அவன் வேளையில் இத்தனை பாரமா.புரியவில்லை எனக்கு.என் அப்பா சொன்ன வார்த்தைகளை அசை போட்டுக்கொண்டும் செயல்படுத்திக்கொண்டும் நாட்கள் நகர்த்தினேன்.அறிவழகன் சந்திக்கும் நாள் வந்தது.அவனுக்காய் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்த தருணம்.மனதில் எத்தனை எண்ணவோட்டம். நான் வருகிறேன் என்று அவன் அனுப்பிய ஒற்றை குறுஞ்செய்தி எத்தனை முறை படித்துவிட்டேன்.கல்யாண கனவுகளாய கண்டு கொணடிருநதேன்.என் அப்பா சம்மதம் பற்றி அவனிடம் நேரில் சொல்ல காத்திருந்தேன்.மணமகனாய் அவன் மணமகளாய் நான் வானம் அட்சதை தூவ இயற்கையே எங்களுக்காய் வாழ்தது பாட அவன் கைகோர்தது தீ வலம் வந்து அம்மி மிதித்து மெட்டி வாஙகி......கனவு கலேத்தது அவன் கை.

"என்ன மேடம் பகல் கனவா...கூப்பிடுவது கூட கேட்கலை?"

"ஆமா ஆனால் நிஜமாகும் கனவு தான்...நம் கல்யாண கனவு...."என் முகம் சிவந்தது. அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"நிறைய பேசனும் அதுககு தெம்பு வேணும் ஏதாவது சாப்பிட போகலாம வா கயல்"

அன்று ஆட்டோவில் பயணம்.இடைவெளி விட்டு அமர்ந்து பயணம்.எப்போதும் அருகில் அமரும் அவன் ஹோட்டலில் எதிர்புறம் அமர்ந்தான்.இந்த சினன விஷயம் கூட என்னை கீறியது.அவன் என்னை விட்டு விலகி நிற்பதாய படுகிறது.எப்போதும் காதல் பாஷைகளும் தீணடலகளுமாய் இருக்கும் எங்கள் சந்திப்பு அன்று உணர்ச்சயற்று இருந்தது.நானே தீணடினாலும் விலக்கி விட்டான்எப்போதும் ஊட்டி விடும் அவன் அமைதியாய் சாப்பிட்டான்.என் அமைதி தான் போனது.

"அறிவு நீங்க எனக்கு புதுசா தெரியரீங்க..என் மீது ஏதாவது கோபமா வருத்தமா"

"அப்படி எல்லாம் இல்லை கயல்"

"அப்போ ஊட்டிவிடுங்க"

"ஏய் எல்லாரும் பார்ககிறாங்க நல்லா இருக்காது"

"இது புதிதில்லையே..நான் வேணடாம்னனு சொன்னாலும் என் பொண்டாட்டி தானேன்னு ஊட்டாம இருக்கமாட்டீங்களே...இப்போ என்ன ஆச்சு"கோபமும் ஏமாற்றமும் என் வாயை கட்டிப்போட்டது.ஏதோ வருத்தம் என் வாரத்தைகள விழுங்கியது.கண்களில் நீர் திரை போட்டது.

"அது நடக்கும் போது பார்ககலாம்.கண் துடை சாப்பிடு"சாதரணமாக அவன் கூறானான்.

என் மனம் மட்டும் ஓய்வினறி அலறியது.

"நடக்கும் அறிவு.ன் அப்பா கிட்ட பேசிட்டேன்.அவருக்கு சம்மதம்"

அவன் முகத்தில் அதிர்ச்சி.

"என்ன திடீரென?"

"என்ன அதிர்ச்சி அறிவு.நம் காதல் அடுத்த கட்டம் போக வேண்டாமா...என் வீட்டு சம்மதம் கிடைச்சாச்சு இனி உன் மூவ் தான்"

"எதுக்கு இவ்வளவு அவசரம் கயல்"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"நம்ம காதல் தெரியும் வரை பெண் பார்க்கும் படலம் ஓயாது அறிவு"

வெகு நேரம் யோசனையில் மூழ்கினான்.பின்னர் மெல்ல

"கயல் நாம் நாளை சந்திக்கலாமா...இப்போது குழப்பமா இருக்கு.. உன் கிட்ட நான் நிறைய பேசனும் கயல். நாளை உன்னால சந்திக்க முடியும் இல்ல?"

"கண்டிப்பாக அறிவு.நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?"

"ஒன்றுமில்லை கயல் நாளை பேசலாம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.