(Reading time: 15 - 30 minutes)

"கயல்...அவளுக்கு உன்னை கண்டாலே ஆகாது.ப்ரச்சனை அது இல்லை. அவ கேட்ட கேள்விகள்"

"யாதவ் அவளுக்கு உன் மேல அன்பு அதிகம்.உன்னை விட்டுககொடுக்க முடியாம தான் என் கிட்ட சண்டை போடுவா.புரிஞ்சிப்பா...அதுக்கு பபோய் தயங்கற...நீ விடு நான் பேசறேன் மாமா கிட்ட ராணி அப்பாகிட்ட..உன்னை போல ஒருத்தன் வரம் டா அவங்களுக்கு."

"அப்ப்பா.....கொஞ்சம் பொறுமையா கேளு.ரொம்ப துடிப்பாதான் இருக்க...எனக்கு அப்படி எல்லாம் இல்லை. ஆனால் அவ கேட்ட கேள்விகள் அதனால எனக்கு வந்த எண்ணங்கள் எல்லாம் உன்கிட்ட பேசனும்"

"என்ன கேட்டுட்டா...நீயும் நானும் வெறும் நண்பர்கள் தானா?இதே தான் பல வருஷமா கேட்கறா....அவ மட்டுமா....காலேஜில் கூட பல பேர்"

"ம்ம்ம் ஆனா அவ கேட்டது காலம் முழுதும் என் கூடவே வரப்போறவ என் மனைவியா மட்டும் தான் இருக்க முடியும்..கயல் உன்னைவிட்டு விலகிடுவா....இல்லைன்னா உனக்கு வாழ்க்கை துணை ஆனாமட்டும் தானே முடியம்?"

"என்ன இது"

"கயல்!எனக்கு சரியா தப்பா சொல்ல தெரியலை.ஆனா நீ சென்னை வந்தப்புறம் உகனக்காக ரொம்ப ஏங்கினேன்.என் கூடவேஎஅ நிழலா நீ இருக்கனுங்கறது என் ஆசை தான். என் வாழ்வில் உன்னைவிட எந்த பெண்ணும் நுழையல கயல்..சில சமயம் இராணி சொலவது சரிதானோ என்று தோன்றியது.யாரையோ கல்யாணம் பண்ண உன்னை பண்ணிட்டா என்னன்னு தோணிச்சு.முதல் முறை இந்த எண்ணம் வந்த போது அபத்தமா இருந்தது...ஆனா போக போக ஏன் கூடாதுன்னு தோணிச்சு.உன் கிட்ட பேசினா சரியாகும்ன்னு பார்த்தேன்.நீ தான் ரொம்பபிஸி ஆகிட்ட. நேரிலேயே பேசி முடிவு பண்ண வந்தேன். உனக்கும் அப்படி எண்ணம் வந்திருக்கா கயல்...இது சரியா?"

"யாதவ்!கல்யாணம் என்பது என்ன?கணவன் மனைவி உறவு என்பது எப்படிப்பட்டது?என்ன உணர்வுகள் சங்கமிக்கும் உறவு அது...உனக்கும் எனக்கும் அப்படி எப்படி டா?ஏன் குழப்பம் உனக்கு?நான் ஏன உன்னை பிரியப்பொறேன் யாதவ்...உன்ககும்எனக்கும் இடையே யாரும் வரமுடியாது.என்னையும் உன்னையும் உண்மையாக நேசிக்கும் யாரும் புரிஞ்சிப்பாங்க நம்ம நேசத்தை"அறிவழகன் மனக்கண்ணில் தோன்றினான்.

"ஆனால் கயல் இராணி உன்னை வெறுக்கறா....அவ கூட என் பயணம் நீ இருக்க மாட்ட கயல்...அது எனக்கு வேண்டாம்..நம்மை நல்லா தெரிஞ்சவளே இப்படி இருககா வேறொருத்தி பற்றி கேட்கனுமா?"

"வாழ்க்கை துணை சொன்னதும் உனக்கு இராணி தான் ஞாபகம் வரா....அவ என்னை வெறுக்க காரணம் உன் மேல இருக்கும் காதல் யாதவ்.அவளைவிட நான் உனக்கு முக்கியம் என்ற எண்ணம் நான் உன்னை அவளிடமிருந்து பிரிச்சிடுவேனனு பயம்...என் கூட பழகினதே இல்லையே...போக போக புரிஞ்சிப்பா பாரு.யாதவ் என் தப்பு உன் கூட நான் சரியா பேசறதுகூட இல்லை.என்னை மன்னிச்சிடு யாதவ்.உனக்குண்டான நேரம் உனக்கு கொடுக்காம விட்டுட்டேன."

உளமார்ந்த மன்னிப்பு கேட்டேன் அவனிடம்.வாழ்க்கையில் தோழமைகள் எவ்வளவு பெரிய வரம் என்பது அது சரியாக அமையாமல் போனவர்கள் தான் அறிவார்கள்.எனக்கு எல்லாம் நன்றாய் அமைந்திருக்கிறது.அதை காப்பாற்றி போற்ற மறந்துவிடுகிறேன்.இதை தொடர்ந்து நிறைய பேசினோம்.தெளிவாக பேசினோம்.விடைபெறும் நேரம் இராணியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

"மோப்பம் புடுச்சிட்டா டா யாதவ்....பேசாம சரண்டர் ஆகிடு"

"போடீ"என் தலையில் குட்டி வெட்கத்துடன் சிரித்தான் யாதவ்.என் உள்ளம் நிறைந்தது.

யாதவ் சந்திப்பில் அவன் கூறிய விஷயம் என்னை யோசிக்க வைத்தது. எங்கள் நட்பு அறிவழகன் அறிந்ததே.அவன் எங்களை நன்றாய் புரிந்து கொண்டான்.நான் அதிர்ஷ்டசாலி ன்று பெருமையின் உச்சியில் இருந்தேன்.ஆனால் என் பெருமை சந்தோஷம் எல்லாம் உடைத்தெரிந்தான் அறிவழகன். ஒரு வாரம் என்னோடு பேசாமல் இருக்க முடிந்தது. காரணம் யாதவ் சந்திப்பில் அவனை மறந்ததாய் குற்றச்சாட்டு. ஏன் இந்த வெறுப்பு ஏன் இந்த கோபம் என்று புரியாமல் கண்ணீர்விட்ட நாட்கள் அவை.பொதுவாக கோபத்தில் மௌனம்மட்டுமே ஆயுதமாக எடுக்கும் அவன் ஏனோ இன்று கொப்பளிக்கும் வார்த்தைகளை வீசினான். அவன் மௌனனத்தின் காயமே மேல் என தோன்றியது.

"நேற்று மகாராணியார் ரொம்ப பிஸியோ?"

"யாதவ் வந்திருந்தான்.சொன்னேனே."

"என்னை அதான் மறந்தாச்சு.ஒரு நாள் முழுதும் அவன் கூட என்ன வெட்டிப்பேச்சு"

யதார்ததமாய் எங்கள் சந்திப்பு உரையாடலே ஒருவாரு கூற வெடித்தது அவன் கோபம்.

"ஓ ப்ரபோஸ் பண்ணத்தான வந்தானா அவன்.எவ்வளவு நாளா இந்த எண்ணம் அவனுக்கு."

"கோபப்படாத அறிவு.அவன் வெகுளி.குழம்பிட்டான்."

"இப்போ நான் கோபக்காரனா?...அவன் தான் உனக்கு முக்கியமா போயிட்டானா?"

இப்படி ஒரு முகம் என் அறிவழகனுக்கா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.