(Reading time: 15 - 30 minutes)

"நிதானம் அறிவு...என்ன ஆச்சு இப்போ?"

"ஏதாவது ஆகனுமா...நேற்று நான் கால் பண்ணப்போது என்ன சொன்ன.அப்புறம் பேசலாம்ன்னு...இரவு பத்து மணி தான் அப்புறமா....அந்த கஃபே ல்லதான் நானும் இருந்தேன்."

"என்ன...ஏன் சொல்லல்ல அறிவு"

"சொன்னா என்ன பண்ணிருப்ப....அதான் உங்க யாதவ் இருந்தாரே என்னை கழற்றிவிட்டிருப்ப அந்த அசிங்கம் வேற வேணுமா எனக்கு"

அனலாய் பறக்கும் அவன் வார்த்தைகளை எதிர்கொள்ள முடியாமல் மௌனமானேன்.

"என்ன கயல் என்ன சொல்லி இவனை ஏமாத்தலாம்னு யோசனையா?"

"என்ன பேசறீங்க...அவன் என் நண்பன்."

"என்ன நட்பு கொச்சையான நட்பு"

"வேண்டாம் அப்படி பேசாதீங்க.நேற்று இரவு நான் கால் பண்ணும்போது நீங்க எடுக்கலை.தூங்கியிருப்பீங்கன்னு இருந்தேன்.இப்படி உங்க மனசுல எண்ணவோட்டம் இருக்கும்னு நினைக்கலை.வெகு நாட்கள் அப்புறம் சந்தித்து பேசறோம்.ஏன் நீங்க உங்க நண்பர்கள் கூட நேரம் செலவழிப்பது இல்லையா?அது போல தான் நானும்."

ஏன் பேசினோம் என் வருந்தும் வகையில் வார்ததைகள் வந்து விழுந்தன.இது வரை காணாத புது மனிதனாய் என் அறிவை கண்டேன்.அதை ஏற்கமுடியாமல் நானும் பதில் பேச...சண்டையாய் முடிந்தது எங்கள் சந்திப்பு.இதற்கு முன் சண்டை வரும் போதெல்லாம் மௌனம் எடுப்பான் அல்லது மன்னிப்பு கேட்பான்.ஆனால் இப்போது

"நிறுத்து கயல்!உன் கூட பேச விருப்பம் இல்லை. நீ அந்த யாதவ் கூடவே பேசிக்கோ...நான் போறேன்.முடிஞ்சா பார்க்கலாம்.பை மிஸ்.கயல்விழி"

"நில்லுங்க அறிவு"

என் முகம் கூட பார்க்காமல் சட்டென்று எழுந்து சென்றுவிட்டான். அன்று தான் தனிமை தகித்தது.பிரிவின் துயரம் புத்தகங்களில் படித்த போது புரியவில்லை. அனுபவத்தில் மிகவும் வலித்தது. உயிர் தோழன் சந்திப்பில் இத்தனை சலனமா?அதற்கு தண்டனையா?.பொறாமை மட்டுமே காரணம் என்றால் அதில் நான் கருகுவது அவனுக்கு சம்மதமா.ஒரு வாரமாய் உணவு கொள்ளவில்லை. உறக்கம் இல்லை. அழ முடியவில்லை அழாமலிருக்க முடியவில்லை. நீர் நீங்கிய மீனாய் தவிததேன்.என் அழைப்பு குறுஞ்செய்தி எதற்கும் பதில் இல்லை. உலகமே இருண்டு போனது.என் நட்பை மதிக்கத்தெரிந்தவன் என கனவு கண்ட என் அறிவு இப்படி ஏன் பேசியது என் நெஞ்சை பிழிந்தது.வெறும் கூடாய் நடமாடினேன்.இரகுவும் அப்பாவும் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் மதில் இல்லை. மௌனமாய் அழ கற்றுக்கொண்டேன்.ஜடமாய் நான் மாறத்துவங்கிய போது அலைபேசி அழைத்தது.அறிவழகன்.

"கயல் எப்படி இருக்க?"

அவன் குரல் என்னை உலுக்கியது.கோபமும் அழுகையும் பொங்கி வர

"கால்  மீ மிஸ்.கயல்விழி"என்றேன்.

"கயல் சாரிடா என்னை மன்னிச்சிடு...அன்னைக்கு மனசு சரியில்லை. அதான் ஏதேதோ பேசிட்டேன்.எல்லாம தப்பு நிஜமா மன்னிச்சிடு கயல்"

"பேசி ஒருவாரம் ஆகுது தெரியுமா?"

"அழாதே டா சாரி.கண்ணழகி....மன்னிக்க மாட்டியா....நேரில் பார்க்கலாம் உன் காலில் கூட விழுந்து கேட்கிறேன்.மன்னிச்சிடு கயல்.நான் தான் தப்பா பேசிட்டேன்.ப்ளீஸ்"

வேகு நேர போராட்டம் பின் மன்னிப்பு பெற்றான்.

"சரி பார்க்கலாம்... இப்போ பை"

"என்ன பை...அவ்வளவு தானா...ஒரு வாரம் ஆச்சு...ஏதாவது...... கிடைக்குமா.....பேச்சுக்கள்"

"நாளைக்கு கிடைக்கும்....பேச்சுக்ள் மட்டும்"

"வேறேதும் சத்தம்...."சிலிமிஷ சிரிப்பு

"கோபக்காரனுக்கு குட்டு மட்டும் தான்"

"அது நாளேக்கு வாங்கிக்கிறேன் இப்போ சத்தம் மட்டும் போதும்"

"நான் கோபமா தான் இருக்கேன்"

"பரவாயில்லை கண்ணழகி... சூடான சத்தம் நல்லாத்தான் இருக்கும்"

"முடியாது"

"சரி நான் தரேன் வாங்கிக்கோ...ச்ச்ச்ச்ச்ச்ச்ச"

"வேண்டாம் வேண்டாம்வேண்டாம்"

"அய்யய்யோ வேண்டாமா...சரி திருப்பி கொடு"

"என்ன...எனக்கு வரலை..."

"வரலையா....இதோ தரேன்....ச்ச்ச்ச்ச"

"போதும்....."

நடு இரவு வரை இந்த இனிமைகள் தொடர ஒரு வார அழுகையும் பாரமும் தொலைந்து போனது.மனம் ஆகாயத்தில் பறந்தது.அவன் குரல் தாய் மடியாய் தலைகோதியது.எப்போது உறங்கினேன் தெரியவில்லை. கனவில் அறிவழகன். அவன் கைகோர்த்து கடல் நீரில் கால் நனைத்து நிலா இரசித்துக்கொண்டு அவன் தோள் சாய்கிறேன்.முத்தங்கள்..... கனவெல்லாம் சத்தங்கள்.... எங்கள் காதல் கலைக்க அவன் அலைபேசி அலறல்....பயந்த என்னை அனைத்துக்கொண்டு அலைபேசியை அலைகளில் எரிந்தான்.மகிழ்ந்தேன்.அவன் அனைப்பிலேயே உறங்கியும் போனேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.