(Reading time: 15 - 30 minutes)

காலை சூரியன் வானில் எழும்போதும் சின்ன குயில்கள் பாடும் கீதத்திலும் கலைந்தது என் தூக்கம். இன்று ஏனோ மனதில் மகிழ்ச்சி நிறைவு.ஒரு வாரமாய்ஜநோய்வாய் பட்டிருந்து இன்று புத்துயிர் பெற்றதாய் ஒரு உற்சாகம். வேகமாக என் கடமைகளை முடித்துக்கொண்டு கடல் தேடி ஓடும் நதியாய் அவனிடம் ஓடினேன். அதோ தூரத்தில் அவன்.இன்று தான் பகாதல் கொண்ட முதல் நாளாய் ஒரு சிலிர்ப்பு. என் ஆவலில் அவனை அணைக்க எத்தனித்தேன்.நாகரிகம் கருதி கைக்குலுக்கலோடு நிறுத்திககொண்டேன்.நீண்ட மௌனம் கலைத்தான் அவன் ஸ்பரிசத்தால்.

"கயல் என்னை மன்னிச்சிடு...நான் அன்னைக்கு பேசினது தவறு.அப்படி நான நடந்திருக்கக்கூடாது."

"இத்தனை நாள் கோபமா?என் கால் எடுக்கலை என் மேஸேஜ் பதில் இல்லை.ஏன்.அவ்வளவு வெறுப்பா என் மேல?"

"கயல் இல்லை டா...உன்னை நான் வெறுப்பேனா...கோபம் எல்லாம் எப்பவோ போச்சு.என் குடும்பத்தில் கொஞ்சம் ப்ரச்சனை. அதுல பிஸி ஆகிட்டேன். மத்தபடி நான் அன்னைக்கு பண்ணது தான் தப்பு"

"என்ன ஆச்சு.. என் கிட்ட சொல்லக்கூடாதா?"

"அது சரியாகிடும கயல்.சின்ன சின்ன சிக்கல்கள் அவ்வளவு தான்"

"சின்ன விஷயத்திற்காக என் கூட பேசாம இருந்திருகக மாட்ட...நான் அன்னியமா...சொல்லக்கூடாதா"

"என் கவலை கள் என்னோடு.அதை விடு.நான் பார்ததுக்கிறேன்.உன் முகம் இப்படி வாடியிருக்கே"மெல்ல என் கன்னம் வருடினான்.

"என்ன அறிவு சொல்லக்கூடாதா"

"வேறு ஒரு விஷயம் இருக்கு உன் கிட்ட சொல்ல"

"என்ன"

"முகம் தூக்காத டீ கண்ணழகி.. உன் சிரிச்ச முகம் தான் என் பலம்"

"இதுக்கு குறைச்சல் இல்லை"

"வேறென்ன குறை...நேற்று இரவு குறையா கொடுத்துடடேனா......போன்ல அவ்வளவு தான் முடியும்..இப்போ நேரில் வேணா....."குறும்பாய் சிரித்தான்

"போதும் விஷயம் என்ன"

"முதலில் விஷயம் அப்புறம் விஷமமா?"

"டேய் சொல்லு டா"

"என்ன மரியாதை தேயுது.சரி சரி சொல்லறேன்.நான் ஒரு இன்டர்வூயூ கலந்துகிட்டேன். தேர்ச்சி ஆகிட்டேன்"

"வாழ்த்துக்கள் அறிவு.என்ன திடீரென இன்டர்வூயூ..எங்க எப்போ சேரனும்"

"ஆமா கயல் வளர்ச்சி வேணும் இல்ல..பெங்களூர் சகித்தா சிஸ்டம்ஸ்.. அடுத்த மாதம் சேரனும்...வீடு எல்லாம் ஏற்பாடு செய்திருக்கேன்"

"என்ன பெங்களூரா...சாதரணமாக சொல்லற...உனக்கு வருத்தம் இல்லையா?"

"என்ன கயல் இப்படி சொல்லற...என் வளர்ச்சி உனக்கு மகிழ்ச்சி இல்லையா....ஊரு மாறினா என்ன கயல் நல்ல வேலை நலலசம்பளம் மூவ் ஆக வேண்டியது தானே"

"அப்போ இந்த ஒரு மாதம் தான் நம்ம சந்திக்க முடியுமா?"

"அப்படி இல்லை கயல் நான் அடிக்கடி வருவேன் என் கண்ணழகி பார்க்க..என் வேலை மாற்றம் உனக்கு சந்தோஷம் இவ்லையா?"

"வேலை மாற்றம் சந்தோஷம் ஆனால் இடமாற்றம்?"

"இடம் மாறினா என்ன கயல் மனசு மாறாது.இப்போ மாதிரி நினைத்த படி சந்திக்க முடியாது புரியுது ஆனா கரீயரும் முக்கியம் இல்லை யா?"

"அதுக்கு தான் இந்த வாரம பிரிவு ஒத்திகையா?"

"ஏய் கயல் என்னயிது.ப்ராக்டிகல்லா யோசி.கோபப்படாதே."

"ம்ம்ம்ம்"

மனதில் மட்டும் ஆயிரம் வினா.யாரிவன் புதியவனாய் தெரிகிறானே.ஒரு வாரத்தில் என்ன நடந்தது. திடீரென பிரிவுக்கு தேதி வைக்கிறான்.இது கனவா.அவனுக்கு இதில் துளியும் இழப்பில்லையா?வருத்தமில்லையா.என் புரிதல் தவறா?.அவன் தன் வேளையில் உயர்ந்து செல்கிறான் இதிலென்ன தவறு.அவன் மனதில் நான் இருக்க அவன் எங்கு சென்றால் என்ன.ஆனால் அவன் பிரிவு?குழப்பங்களுடனும் அச்சத்துடனும் தொடங்கியது என் வாழ்வின் அடுதத அத்தியாயம்..

ஒரு மாதம் எப்படி ஓடியது தெரியவில்லை. நாளை அறிவழகன் செல்கிறான். என்னை விட்டு வெகுதூரம். இனி அலேபேசி மட்டுமே எங்களை இனைக்கும் பாலம்.அவன் ஸ்வாசம் ஸ்பரிசம் எல்லாம் நினைவுகளில் மட்டுமே. இந்த மாதம் முழுதும் எத்தனை இனிமைகள். ஸ்பரிசம் தாண்டி அணைப்புகள்.உலகில் இருவர் மட்டுமே இருப்பதாய் பறிமாறிக்கொண்ட காதல் கனங்கள்.கண நனையாமல் வழி அனுப்ப வேண்டும்."உன் சிரிச்ச முகம் தான என் பலம் கயல்".இப்போதெல்லாம் அவன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.என் நினைவாய் ஒரு பரிசு கொடுக்க எண்ணினேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.