Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா

en vazhve unnodu thaan

சில மணிநேரங்களுக்கு முன்பு

கடலூரிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த ஆதித்யவர்மன் காரை ஓட்டிக் கொண்டே தனது அன்பு மனைவி யாமினியிடம்

”ஆமா உன் குடும்பத்தை பத்தி நீ சொல்லலையே” என கேட்டான் ஆதித்யவர்மன். ஆதி யாமினியின் காரில் டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரை சென்னை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த யாமினி அவனிடம்

”ம் ஆமா நீ எங்க எனக்கு டைம் கொடுத்,த என் குடும்பத்தை பத்திச் சொல்றதுக்கு” என அலுத்துக் கொள்ள அதற்கு

”சரி இப்பச் சொல்லு உன் வீடு போற வரைக்கும் சொல்லிமுடி” என ஆதி அலுத்துக் கொண்டே சொல்ல அதற்கு யாமினி

”சரி அலுத்துக்காதே இரு நான் என் பேமிலி போட்டோஸ் காட்டறேன்” என சொல்லி தன் சொல்போனில் இருந்த தன் குடும்ப போட்டோவை காட்டினாள் யாமினி.

ஒரு போட்டோவில் யாமினியின் தந்தை சோமசுந்தரம் மற்றும் அவளது தாய் பல்லவியிருப்பதைப் பார்த்த ஆதி

”இவர்தான் உங்கப்பாவா” என கேட்க

”ஆமாம்” என்றாள் யாமினி அடுத்து பக்கத்தில் இருந்த பல்லவியைப்பார்த்த ஆதியோ

”இது யாரு உன் அக்காவா” என கேட்க அவளோ

”ஏய் இது எங்க அம்மா” என்றாள் கோபமாக

”இவ்ளோ இளமையா இருக்காங்க” என்றான் சந்தேகமாக

”ஆமாம் எங்கப்பாவுக்கு 30 வயசு இருக்கறப்ப எங்கம்மாவுக்கு 18 வயசுதானாம் சீக்கிரமா கல்யாணம் செஞ்சிக்கிட்டாரு அப்பா” என சொல்ல வாய் பிளந்தான் ஆதி

“ஓ அப்படியா உன் அப்பாவோடது அரேன்ஜ்டு மேரேஜா லவ் மேரேஜா”

”அரேன்ஜ்டு மேரேஜ்தான் சொந்த மாமா பொண்ணை கட்டிக்கிட்டாரு” என சொல்ல அதற்கு ஆதியோ அவளை சீண்டும் விதமாக

”நான் கொடுத்து வைச்சவன் உன் வீட்டுக்கு மாப்பிள்ளையா போறதை நினைச்சி ஆமா அத்தையோட பேரு என்ன”

”பல்லவி”

”பல்லவி நைஸ் நேம்” என்றான் சிரித்தபடியே

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”அப்ப என் பேரு” என கோபமாக கேட்டாள் யாமினி

“உன் பேரும் நைஸ்தான் போதுமா எல்லாத்துக்கும் ஏன் போட்டிக்கு வர்ற யாமினி, நீ தனி மத்தவங்க தனி, நான் தெளிவா இருக்கேன் நீ ஏன் குழம்பற” என்றான் அமைதியாக

”நானா எப்போ” என்றாள் கோபமாக

”எப்போவா அகிலா கூட பழக்கமான்னு என்னை நீ கேட்கல” என்றான் நக்கலாக

”அது சும்மா கேட்டேன்” என்றாள் மழுப்பலாக

”ம் கேட்ப கேட்ப இனிமேல எதையாவது கேட்டுப்பாரு” என்றான் கோபமாக

”கேட்டா என்ன செய்வ” என்றாள் வீம்பாக

“ம் அடுத்த முறை வாய் திறக்காத மாதிரி” என பேச அதற்கு அவளோ

”மாதிரி” என அவனையே வெட்கத்துடன் பார்த்து கேட்க அவளது வெட்கத்தைக்கண்டு சிரிப்புடன்

“அழுத்தமா முத்தம் கொடுத்து உன் வாயை கடிச்சி வைச்சிருவேன், வலியில எப்படி வாய்திறப்ப” என சொல்லிச் சிரித்தான் ஆதி, யாமினியோ அவன் சொன்னதை உள்ளுக்குள் ரசித்துவிட்டு பொய்யான கோபத்துடன் அவன் தோளில் அடிக்க

”எவ்ளோ வேணா அடிச்சிக்க எனக்கு வலிக்காது” என சொல்லவும் அவள் தனது கையை இழுத்துக்கொண்டு

”போ ஆதி நீ கெட்ட பையன்”

”உங்கப்பா பேரு என்ன”

“சோமசுந்தரம்”

”என்ன தொழில் பண்றாரு”

”கன்ஸ்ட்ரக்ஷன்”

”ஓ பரவாயில்லையே ரொம்ப பக்கம் வந்துட்டாரே உங்கப்பா”

”அதென்ன உங்கப்பா, உங்களுக்கு அவரு மாமா முறை”

”சரிம்மா என் மாமனாருக்கும் எனக்கும் ஒரே தொழில்தான் கவனிச்சியா” என்றான் பெருமையாக சர்ட் காலரை தூக்கிவிட்டபடியே

”ம் இந்த பெருமைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை ஆனா இப்ப அப்பாவே கஷ்டத்தில இருக்காரு”

”ஏன் நஷ்டத்தில தொழில் செய்றாரா என்ன”

”சீ சீ இல்லை அப்பா நல்லவரு” என்றாள் பெருமையாக

“அப்புறம் என்ன”

”அவரை தொழில் செய்ய விடாம எதிரிங்க தடுக்கறாங்க”

”ஓ”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகாராஜேந்திரன் 2019-01-27 10:49
teaser kalakala irukku aadhi enna seivaru kandipa problems therika oru idea vechiriparu good luck aadhi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகாvijayalakshmi 2019-01-27 10:45
nice twist all the best aadhi :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகாராணி 2019-01-21 23:10
அய்யோ 8 பிரச்சனைகளா!
இன்றைய எபிசோட் நன்றாக உள்ளது
:clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகாmahinagaraj 2019-01-21 15:38
வாவ் சுப்பர் மேம்... :clap: :clap:
நல்ல குடும்பம் யாமினிக்கு.. ஓ.. சந்தானலட்சுமிக்கு.. ;-)
ஆதி யாமினி ரெண்டும் சூப்பர் ஜோடி.. :GL: ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
# Yen vazhve unoduthan 12K.Rani 2019-01-21 15:31
Yamini veetla yella sisters diverse Panna poranganu ore mathiri problems sonathu reala illa konjam vera mathiri sollirkalam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகாAdharvJo 2019-01-21 13:31
:D :grin: Sasi ma'am unga trade mark patalathai irukkitinga ponga :dance: I was bit surprised siblings tholai illadha family-yo-n 8 peraaaaaah and 8 problem :grin: Inga 7 perukkum numerology prigaram name vaikala pole irukkum :P peruketha problem steam interesting and funfilled update ma'am :clap: :clap: aadhi therichi oda porarun ninaikiren. look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகாmadhumathi9 2019-01-21 13:14
:Q: aadhi sonnathupola aadhi veetla ulla pirachinai kuraivu.but yamini veettil ithsnai pirachinaigala? :sad: yamini appavai ninaithal kavalaiyaathaanirukku.Oru manithanukku ithanai pirachinai vanthaal epadi thaanga mudiyum? Aadhieppadi intha pirachinai theerkka pogiraan endru paarppom. :clap: nice epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top