Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Change font size:
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ப்படி எல்லாம் இருந்திருக்க வேண்டியவன் அவன். எதிர்பாரா திருப்புமுனைகளை கொண்டது வாழ்க்கை என்பதை ஓரளவு புரிந்திருப்பவன் தான் கதிர். ஆனால் தான் இந்தளவு மாறியிருக்க  கூடும் என்று அவனால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.

“ஜனனி…… ஜனனி…. ஜனனி …….”என்று வெறுப்பை கக்கும் இளம்பிறை… அவளை பற்றி அறிந்திருந்தால் இவ்வாறு பேசுவாளா…?

“ஜனனி,” கதிரின் பொக்கிஷம்…!!. அப்படித்தான் அவளை காத்து வந்தான் அவன்.

அவனுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய் அவளை கண்ணும் கருத்துமாய் காக்க நினைத்த காவலன்.

அவள் மட்டும் என்னவாம்? கதி மாமா , டேய் மாமா,  என்று உயிராய் இருந்தாள் அவன் மேல்.

அதிகமாய் பிடிவாதம் பிடிப்பதும் அவனிடத்தில் தான் ….அதிகமாய் அடங்கிப்போவதும் அவனிடத்தில் தான்..!.

பசி இல்லையென்றாலும் அவனுக்காக உண்ணுபவள், பசி இருந்தாலும்  அவன் அருகில் இல்லையெனில் உண்ண மறுப்பவள்.

இவனும் குறைந்தவனல்ல….ஹனி முதல் அவள் பெரியம்மா வரை எவரையும்  அவளை ஒரு சொல் சொல்ல விடமாட்டான் அவன். கண்டிப்பு அவசியம் என்று சில கட்டுப்பாடுகளை அவர்களின் பாட்டி விதித்திருந்தாலும் அதை அவள் மீறும் போது தண்டனையை இவன் ஏற்றுக்கொள்ளும் தியாகி அவன்.

பள்ளியில்  கால்பந்து  விளையாட்டில் சேர்ந்திருந்தான் கதிர். தினமும் பள்ளி முடிந்து பயிற்சி  எடுக்க வேண்டும். அவன் பயிற்சி முடித்து வரும் வரை இவள் காத்திருப்பாள். இவன் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டாள் அந்த பிடிவாதக்காரி.

“ஜெனி நீயும் எதாவது ஸ்போர்ட்ஸ்ல ஜாயின் பண்ணிக்கலாம் இல்ல?” என்று மனம் தாளாமல் இவன் கேட்க

“போடா கதிர் மாமா… நான் உனக்காக படிக்கிறதே பெரிய விஷயம் இதுல ஸ்போர்ட்ஸ் எல்லாம் என்னால முடியாது டா” என்பாள்.

ஆனால் அட்டை பூச்சியாய் அவனோடு ஒட்டி கொள்வாள். இவனும் அவளை விட்டு எங்கும் போக நினைத்ததில்லை அனைவரிடமும் பழக இனிமையானவள் ….எனவே இவனின் நட்பு வட்டாரமும் இவளை ஏற்றுக்கொண்டது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஒரு விஷயம் கதிர் காதுக்கு சென்றால் அது அவனை தாண்டி எங்கும் போகாது என்பது எவ்வளவு உறுதியோ …அவ்வளவு உறுதி ஜனனியிடம் ஒன்றை சொன்னால் அது கதிரை தவிர்த்து வேறு எவர் செவியையும்  எட்டாது என்பது.

அன்று காலை முதலே  லேசான வயிற்று வலியோடு பள்ளிக்கு சென்றவள், நேரம் கடக்க,.. கடக்க வலி அதிகரிப்பது போன்ற உணர்வு. அப்போது அவன் இன்டெர் ஸ்கூல் டௌர்ன்மெண்ட்டிற்காக   கால் பந்தாட்ட பயிற்சிக்கு வந்தவன்  அவள் முக வாட்டத்தை  கண்டதும்

“என்னடா…. என்னாச்சு?” என்று கேட்க

“பெயினிங் கதிர் ..”என்று அவள் வயிற்றை பிடித்துக்கொள்ள

“ஜெனி நீ  வீட்டுக்கு போ, நான்  ப்ராக்டிஸ் முடிச்சிட்டு தான் வர முடியும்” என்று சொல்ல

அவளோ போக மாட்டேன் என்று மறுத்துவிட்டாள். வலியில்  முகம் வாடியது.

“ஜனனி சொன்னா கேக்கணும்” என்று சொல்ல

“மாட்டேன் போடா” என்று அமர்ந்து கொண்டாள்.

இன்னும் இரண்டே நாட்களில் போட்டியை வைத்துக்கொண்டு பயிற்சிக்கு வராமல் போனால் கோச் கிழித்து தொங்க போட்டுவிடுவாரே என்று யோசித்தவன்

“கேன் யு மேனேஜ் ஜனனி?” என்று கேட்க

“ஐ கேன், யு கோ கதிர்” என்று சொல்லிவிட்டு கண்களை இறுக்கி மூடிக்கொள்ள

மனமின்றி அவ்வப்போது அவளை கண்டவாறே ஆட்டத்தில் கவனம் செலுத்தியவன் முழுதாய் தனது கவனத்தை ஆட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டிருக்க

“கதிர்” என்று கத்தியபடி ஓடி வந்தாள் ஜனனி…எதையும் யோசிக்காமல் ஆட்டத்தை விட்டு வெளியேறிவன் பதறிவிட்டான் …கோச்சும் கூட அவள் அலறலை கண்டு ஒரு நொடி திகைத்து பின் மற்றவர்களை ஆட்டத்தை கவனிக்குமாறு சொல்லிவிட

“ஜனனி என்னாச்சு…?” என்று அவளை நெருங்கியவனை அணைத்து கொண்டு தேம்ப தொடங்கிவிட்டாள்.

“ஜனனி பெயின் ஜாஸ்தியா இருக்கா? என்ன ஆச்சு?” என்று கேட்க

அவன் தோளை அழுத்தி தனது முகமருகே அவன் காதை கொண்டு வந்தவள் சொன்ன செய்தியை கேட்டு நெற்றி தேய்த்தவன் …..சுற்றி பார்க்க அங்கே அவனோடு படித்த பெண், ஹாக்கி கோச்சிங்  முடித்து வந்து கொண்டிருப்பதை பார்த்தான்.

“ஜெசிகா” என்று அவளை அழைத்து "கேன் யு ப்ளீஸ் ஹெல்ப் ஹேர்” என்றவன் “ஜெனி இவளை கூட்டிட்டு போ” என்று சொல்லிவிட்டு உடனே தனது பாட்டியை தொடர்பு கொள்ள அடுத்த அரை மணி நேரத்தில் பாட்டி, அவள் பெரியம்மா என்று அனைவரும் வந்திருக்க

அவள் உடன் நின்றிருந்த ஜெசிக்காவிற்கு இவன் நன்றி சொல்ல

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையாmahinagaraj 2019-01-21 17:36
ரொம்ப கஷ்டமான எபி மேம்... :clap: :clap: :sad:
ஜனனி.. வளர்ந்த குழந்தை.. :yes: அந்த பிஞ்சு மனசை கெடுத்து வச்சிருக்காங்க..
கதிர் சூப்பர்.. அமேஸ்ஷிங் மேன்.. :hatsoff:
கண்டிப்பா இளா புரிஞ்சுப்பாங்க.. :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையாrspreethi 2019-01-21 15:57
Super update.... Kathir view la yenna nadandhuchunu therinjuka mudinju dhu... Feeling sad for janani..... Waiting for baby moon n kathir scenes....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையாSAJU 2019-01-21 14:00
hoooooooo nice epi sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையாSahithyaraj 2019-01-21 13:10
Superb FB :clap: . Valarndha nadugalla adhigama nadakkara crime. :angry:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-01-21 12:48
facepalm oh my god ippadiaagivittathey. :sad: jananikku nadanthathu kashtamaa thaan irukku.but childisha behave panninathu sari illai.nice epi.waiting to read more :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-01-21 12:33
facepalm ouch what is this prema ma'am rombha jolly and interesting aga start seithinga ippadi vechi sanjitingale steam kadhir and Janani oda bonding is very beautifully portrayed indha kirukku pidicha frnds ippadi jenny-a divert seithu kadaisila facepalm
Kadhir sema thelivaga irukaru at the same time jenny kaga ve situation vandha will marry her-n sollura idam simply superb :hatsoff: sad that Jenny didn't understand this til the end. Its okay inime indha athiri sad scene ellam vaikadhinga pavam nanga :P Look forward to read next update. Hope andha loose kuda offscreen la shoot panitingan namburen ;-) thank you and keep rocking. :clap: :clap:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top