Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு

handsTogether

வங்க வேணா பெரிய கம்பெனியா இருக்கலாம். அதற்காக வலுக்கட்டாயமாக நம்மகிட்ட கம்பெனியை கேட்க முடியுமா?”

கௌதம் மனம் கொதிக்க கேட்டான்.

விலை பேசி வந்தவனை திட்டி அனுப்பிவிட்டான் கருப்பையா.

அவன் போகச் சொல்லியும் கேட்காமல் அவன் அவர்களை மட்டம் தட்டிப் பேசியதுதான் அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.

“இப்ப என்ன பண்ணலாம்?”

நண்பனிடம் கௌதம் கேட்க அவன் யோசனையுடன் நின்றான்.

அவன் கேள்விப்பட்ட வரையில் ஆதித்யா பில்டர்ஸ் தான் முதலாவது இடத்தில் இருக்கிறது. ஆரம்பத்தில் கூட கருப்பையா அந்தக் கம்பெனிக்குத்தான் வேலைக்காக முயற்சி செய்தான். ஆனால் அவன் படித்தது வெறும் டிப்ளமோ என்பதால் அங்கே வேலை கிடைக்கவில்லை. அவனை விட அதிகம் படித்தவர்கள் அங்கே போட்டிக்கு வந்துவிட்டனர்.

அவன் யோசனையுடன் இருக்கும்போதே வீட்டிலிருந்து போன் வந்தது.

சிவரஞ்சனிக்கு வலியெடுத்துவிட்டதாம். இருவரும் பதட்டத்துடன் விரைந்தனர். அதற்குள் சரவணன் காரை வரவழைத்து அவர்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். இரு வீட்டு உறவினரும், கூடவே மகாலெட்சுமியும்.

மகாலெட்சுமி தாய்க்கு வலியெடுத்து அவளுக்கு முடியாமல் போகும்போதே முகம் சுண்டிப்போய்விட்டாள்.

“ஆத்தா. அம்மாவுக்கு என்னாச்சு?”

அழுகைக் குரலில் கேட்டாள்.

“அம்மாவுக்கு ஒன்னுமில்லைடா. தம்பிப் பாப்பா பிறக்கப்போறான்ல. அதான் அம்மாவை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டு வந்திருக்கோம்.”

வடிவு சமாதானப்படுத்தினாள்.

அவர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் கருப்பையாவின் செல்வ மகன் பிறந்துவிட்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சிவரஞ்சனி ஆசைப்பட்ட மாதிரியே அவளுக்கு மகன் பிறந்துவிட்டான்.

கருப்பையாவிற்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. வரவேற்புப் பெண்தான் அழைத்திருந்தாள்.

ஆதித்யா பில்டர்சிலிருந்து மீண்டும் அந்த ஆள் வந்திருக்கிறான்.

இதற்கு மேல் பொறுமையாக இருக்க வேண்டாம் என்று கௌதமுடன் உடனே கிளம்பிவிட்டான்.

தித்யா பில்டர்ஸ்.

வரவேற்பறையில் சென்று தான் வந்திருக்கும் விசயத்தைச் சொன்னான்.

அவன் எதிர்பார்த்திருந்தது போல் அல்லாமல் நல்ல மரியாதையுடனே அவர்களை வரவேற்புப் பெண் அனுப்பி வைத்தாள்.

கதவைத் தட்டி அனுமதி கேட்டான்.

“எஸ். கமின்.”

உள்ளிருந்து கம்பீரமான குரல் அவர்களை உள்ளே அழைத்தது.

உள்ளே நுழைந்தனர்.

அங்கே இருவர் அமர்ந்திருந்தனர். தகப்பன், மகன் என்று பார்த்த உடனே தெரிந்தது. ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் போல.

“சார் நான் கருப்பையா. மகா...”

அவன் சொல்லும்போதே புன்னகையுடன்

“தெரியும் தம்பி. இவர் உங்க நண்பர் கௌதம். முதல்ல உட்காருங்க.”

பெரியவர் சொன்னார்.

அவர்கள் அமர்ந்த உடன் இன்டர்காமை எடுத்து அவர்களுக்கு குடிப்பதற்கு பானம் கொண்டு வரச் சொல்லிவிட்டு வைத்தார்.

உடனே ஒரு உதவியாள் அவர்களுக்கான பானத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றான்.

“ம். சாப்பிடுங்க.”

அவர்கள் எடுத்துப் பருக ஆரம்பித்தார்கள்.

“இப்பச் சொல்லுங்க தம்பி. எங்களை எதற்காக பார்க்க வந்திருக்கீங்க?”

பெரியவர்தான் பேசினார். மகனின் முகம் இறுக்கமாய் இருந்தது.

பெரியவர் கேள்வி கேட்டு அவன் திகைத்தான்.

அவர் பேசுவதைப் பார்த்தால் அவன் எதற்காக வந்திருப்பான் என்று புரியாமல் பேசுகிறாரா? இல்லை வேண்டுமென்றே கேட்கிறாரா?

“சார். என்னைப் பார்க்க ஒருத்தர் வந்தார். என்னோட கம்பெனியை என்ன விலைக்கு விற்கப்போறேன்னு கேட்டார்.”

அவன் எதற்காக இதை இங்கே வந்து சொல்கிறான்? என்று புரியாத பாவனையில் அந்த பெரியவர் அமர்ந்திருந்தார். அவன் என்னதான் சொல்ல வருகிறான்? என்று பொறுமையுடன் அமர்ந்திருந்தார்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசுsaaru 2019-01-22 22:11
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசுRaasu 2019-01-23 21:49
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசுmadhumathi9 2019-01-22 05:32
wow nice epi.karuppaiah ennam karthik,mano santhikka vaithathu arumai. :clap: (y) :clap: waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசுRaasu 2019-01-22 17:57
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசுSAJU 2019-01-21 19:16
SUPERRRRRRRRRRR
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசுRaasu 2019-01-21 20:05
Thank you Saju.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசுAdharvJo 2019-01-21 19:14
Aaha Aaha Mr Black beauty you kadhaliching :Q: nangalum vaai pilandhu parthing :eek: enga kitta sollala parthingala :D nadathunga nadathunga :dance: unga MMu mattum eppodhum MMu thaan :o
cute and interesting update Rasu ma'am :clap: :clap: pch but Saravan-k mano-n ninaichen facepalm ;-) emathitingale!!
Will adhithya builders create problem? Look forward to read next update. Karups rombha theritaru..adhanga wedding-k muna match making :P :cool: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசுRaasu 2019-01-21 20:04
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசுmahinagaraj 2019-01-21 18:07
ஹாஹா செம... :clap: :clap:
ரொம்ப வேகமா போகுது மேம்.. ;-)
ரொம்ப அழகான இயல்பான குடும்பம்... செம.. :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசுRaasu 2019-01-21 20:02
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top