(Reading time: 10 - 20 minutes)

மனசும் மனசும் புரிஞ்ச பின் வார்த்தைகள் வீண். எத்தனை உண்மை.காதல் இருவருள்ளும் இருக்க ஏன் ஊமை நாடகம். நானே சொல்லி விடுகிறேன். என்க்கு நானே சொல்லிக்கொண்டு அலைபேசியில் அழைத்தேன். எதிர்முனையில்

"என்ன கயல் இன்னம் தூங்கலையா?"எதோ குறும்பு புன்னகை.

"கோபம் போச்சா பேசலாமா"

"உன் மேல எனக்கென்ன கோபம்..பேசலாம் கண்ணழகி"

"பெண் பார்க்கவந்தாங்கனு சொன்னேன் ல"ஏன் இதை பேசினேன் தெரியவில்லை.

"அது நின்னு போச்சு தானே"

"உனக்கெப்படி?"

"ஆமா பெரிய ரகசியம்.நீ என்னை பார்க்க வரும் போது சிரிச்சிகிட்டு தானே வந்த...இல்லைனா அழுது வடிஞ்சிருப்ப"

"நான் ஏன் அழனும்...அத விடு நீ கொலுசு கொடுத்தது....."

"ஏதோ கிஃப்ட் கொடுக்க தோணிச்சு அதான்... ஏன் பிடிக்கலையா?"என் தவிப்பை இரசிக்கிறான்.நன்றாய் புரிந்தது.

"கொலுசும் பிடிசசிருக்கு..."வெட்கத்துடன் வாரத்தைகள் வெளியேற என்னை மேலும் அவஸ்தை படுத்தினான்

"வேற என்ன பிடிச்சிருக்கு"

"அது..."இதயம் துடிதடிக்க உடல் வியர்க்க என் வாரத்தைகள் எல்லாம் பெருமூச்சாய்வந்து விழுந்தது.

"வெறும் காற்று தான் வருது கண்ணழகி"

""

"வார்த்தைகள்ல தான் சொல்லனும்னு இல்ல"அவன் காதல் குறும்ப புரிந்தவளாய் உதடு கடித்தபடி

"வேறெப்படி"

"ஆமா.....நானே எல்லாம் சொல்லறேன் ...போ டீ.....சரி கவனமா கேட்டுக்கோ"

"அலைபேசியை காதில் கவனமாய் அழுத்த எதிர்முனையில் நீண்ட மௌனம்...பின் ஒரு சத்தம்.

"ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச"

என் உயிர் உயிப்பித்த சத்தம்.என் நாடிநரம்பெல்லாம் உயிர்த்து எழச்செய்த சத்தம்.எங்கெங்கோ எனை தீண்டி என் பெண்மை மலர்த்திய சத்தம்.

"கேட்டதா?"தாழ்ந்த குரலில் அவன்

"ம்ம்ம்ம"வெட்கத்துடன் நான்

"நல்லா கேட்டுதா?உன் குழப்பம் போச்சா?"

"ம்ம்ம்ம்"

"அப்புறம் ஏன் இன்னும் கண் மூடிகிட்டிருக்க..இன்னமும் சொல்லட்டடுமா?"

"ஆங் போதும் வேணாம"

"இதுவே போதுமா?இப்போ போதுமா?"

"இப்போ போதும்"

"உன் வெட்கத்த பாரக்க முடியலையே டீ முதல் முத்தம் முதல் வெட்கம்"

"ச்சீ போ"

"எங்க போகட்டும்"

"எங்காவது"

"நீயும் வா"

"நான் எதுக்கு"

"என் கூடவே வர சம்மதம் சொன்ன?!"காதல் சிரிப்பால கொன்றான்.

இனிமையான உரையாடல்கள் உணரவு பூர்வமான பகிர்தல்கள் அழகான கனவுகள் இடையே காதல் தருணஙகள் என்றெல்லாம்சுகமான நிமிடங்களாக கரைந்தது.மறுநாளே சந்திக்க வற்புறுத்தினான.ஏனோ என் வெட்கம் என்னை திண்ண சற்று தயங்கினேன்.என்னவன் காணத்தானே என் வெட்கம் ஒப்பக்கொண்டேன்.அவன் சந்திககும் நேரத்திற்காக காத்திருந்தேன்.

"கண்ணழகி இன்னும் மயக்கம் தெளியவிலலையா?"

சிறுவர் பூங்காவில் அமர்ந்திருந்த என் தோளை அவன் தோளால் தட்டிகண்ணடித்தான்.வெட்கம் மறைக்கமுடியாமல் முகம் திருப்பிககொணடேன்.

"கயல்!உன் முகம் பார்க்கத்தான் ஓடி வந்திருககேன் இப்படி திருப்பினா எப்படி"

"அறிவு கொஞ்சம் பேசாம இருஙக ப்ளீஸ்"

"என்னங்க மரியாதை பலமா இருக்கு...ஒரு முத்தம் இத்தனை வேலை பண்ணுமா...அறிவு உனக்கு மரியாதை க்கு குறைச்சல் இருக்காது...இல்லையா கயல்"

"அய்யோ கொல்லாதீங்க ப்ளீஸ்"

"என் முகம் பாரு கயல்விழி.. உன் சிவந்த காது அழகா இருக்கு உன் சிவந்த முகம் பார்க்க வேண்டாமா"

"என்ன இப்படிபேசறீங்க நான் கிளம்பிடுவேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.