(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 02 - தேவி

Kaanaai kanne

**** Contest alert **** Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***

ந்த பொறுக்கியைக் கீழே தள்ளியதோடு , அவனின் தொடையில் நன்றாக மிதித்த படி

“ஏண்டா பொண்ணுங்கன்னா உங்களுக்கு புத்திலே இது மட்டும் தான் தோணுமா? “ என்று சராமாரியாக அடி வெளுத்து விட்டாள்.

நடந்த களேபரத்தில் கண்டக்டர் விசில் அடித்து பஸ்சை நிறுத்தி இருந்தார், காலை அலுவலகம் செல்ல இருந்தவர்கள் முகம் சுழிக்க,

“ஏம்பா , பஸ்ச நிறுத்தின? “

“என்ன செய்ய சொல்றீங்க ? அந்தம்மா அடிக்கிற அடிலே அந்தாள் செத்து போயிட்டான்னா நாந்தான் போலீஸ் ஸ்டேஷன் , கோர்ட்ன்னு அலையணும். முதலில் அந்தாள காப்பத்தனும்” என்றபடி கிருத்திகா அருகில் சென்றார்.

அதற்குள் மற்ற பயணியர்

“ஏம்மா, விடும்மா. அந்தாள் செத்துடப் போறான்”

“செத்தா செத்துட்டு போகட்டும். அவன்லாம் இருந்து இந்தியாவ வல்லரசாக்கப் போறானா என்ன?

“நீ இளரத்தம் இப்படிதான் பேசுவ? இப்போ போலீஸ் வந்தா, வண்டிலே இருக்கிற எல்லோரையும் சாட்சி சொல்ல வாங்கனு கோர்ட்க்கு இழுப்பாங்க. எங்க வேலை எல்லாம் யார் பார்க்கிறது

இப்படி எனக்கு என்னனு எல்லோரும் போறதால தான் இன்னைக்கு பச்சைப் புள்ளைங்கள கூட யார நம்பியும் அனுப்ப முடியல. ஆணோ, பெண்ணோ அவங்களே அவங்களப் பாதுகாத்தாத்தான் உண்டு.

“சொல்றது சுலபம்மா, நடைமுறைலே எல்லோராலும் அவங்க நேரத்தை மற்றவங்களுக்காக செலவழிக்கிறது முடியாத காரியம்.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்போ இவனைப் போன்றவங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு போகச் சொல்றீங்களா?

“இல்லைமா. டிரைவர் வண்டிய நிறுத்திட்டார். அவனை இறக்கி விட்டுட்டு நம்ம பஸ்ச கிளப்பலாம்”

“இப்போ இவனை விட்டுடா அவன் அடுத்த பஸ்சில் இதே வேலையச் செய்வான்”

அங்கிருந்த சிலர் “எங்கே அவன இவ அடிச்ச அடிக்கு இன்னும் மூணு மாசத்துக்கு எழுந்துருக்க மாட்டான். இனிமேல் அவன் பொண்டாட்டியத் தொடக் கூட யோசிப்பான்” என்று முணுமுணுத்தனர்.

கிருத்திகாவிடம் பேசிக் கொண்டிருந்தவர் மேலும் ஏதோ பதில் சொவதற்குள், கண்டக்டர் அருகில் வந்து, கீழே விழுந்தவனை எழுப்பி அவர் பங்கிற்கு இரண்டு அறை விட்டு விட்டு,

 “மேடம் , வண்டிய போலீஸ் ஸ்டேஷன்க்கு விடலாம். அங்கே ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துடுங்க.” என்றார்.

வண்டி நின்று கொண்டு இருக்கும் போதே, நேரத்தைக் கருதியும், பிரச்சினை இப்போதைக்குத் தீராது என்று உணர்ந்தும் மெதுவாக பஸ்சில் இருந்து சிலர் இறங்கிச் சென்று இருக்க, மற்றவர்கள் சற்று முகம் சுளித்தார்கள். இதை தவிர்க்க தான் இத்தனை நேரம் பேசினார்கள். இனி வண்டி ஸ்டேஷன் போகாமல் தீராது.

இந்திய நாட்டு சட்டம் அப்படி. ஒவ்வொரு குற்றத்திற்கும் சாட்சி வேண்டும். அப்படி சாட்சியே கிடைத்தாலும், சட்டத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். எதற்குமே தப்பிக்க முடியாவிட்டாலும் கூட ஒரு சின்ன மயக்கம் போட்டு விழுந்து, மீண்டும் விசாரணைக்கு வருமுன் சாட்சிகளில் பல பேர் ஊரை விட்டே போயிருப்பார்கள். ஏன் அந்தக் குற்றவாளியின் ஆயுளே முடிந்து இருக்கும். அத்தனை வாய்தாக்கள் வாங்க முடியும்.

இது எல்லாம் தெரிந்ததினால் தான் பலர் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு சென்று விடுகிறார்கள்.

ஆனால் கிருத்திகா மாதிரி சிலர் அவ்வாறு இருப்பதில்லை. அவள் அவ்வாறு வளர்க்கப் படவுமில்லை.

“பாதகம் செய்பவர்களைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா” என்ற பாரதியின் வரிகளை உணர்ச்சியோடு சொல்லிக் கொடுத்து வளர்த்து இருந்தார்கள் அவள் வீட்டில்.

பஸ் போலீஸ் ஸ்டேஷன் சென்றவுடன், முன் இருபதுகளில் இருந்த அந்த மனிதனை, கம்ப்ளைன்ட் செய்ய, அவனோ சற்று முன்பு இருந்த பயம் போய் தைர்யமாக நின்று இருந்தான்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அவனை விசாரிக்க, அவனோ திமிராக

“சார், இந்த பொம்பள சொல்லுதுன்னு என்னை அர்ரெஸ்ட் பண்ணினீங்கன்னா, அதோட விளைவுகள் பெரிசா இருக்கும். “ என,

“அவ்ளோ பெரிய அப்பாடக்காரா நீ?” என்று அவரும் இரண்டடி அடித்தார். பிறகு அவனைப் பற்றிக் கேட்க, அவன் அந்த ஏரியா அரசில்யவாதியின் மகன் என்று கூற, அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

கிருத்திகாவிடம் “மேடம், ஆள் பெரிய இடம். நான் இவனை உங்க பக்கம் திரும்பாம வாரன் பண்ணி அனுப்பி வச்சுடறேன். எப்.ஐ.ஆர் போட்டால் பிரச்சினை “ என்று கேட்டார்.

கிருத்திகா “சார், என்ன இது? நீங்க பப்ளிக் செர்வன்ட். எங்களுக்குத் தான் சப்போர்ட் செய்யணும்” என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.