Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Change font size:
Pin It

தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகா

kalaba Kathala

திருநெல்வேலி

ஞாயிற்றுக்கிழமை

காலை 4.30 மணிக்கு

டிக் டிக் டிக் டிக்.......

அலாரம் அடிக்கும் ஓசை கேட்டு கண்கள் விழித்தான் கோவிந்த். தினமும் ஜாக்கிங், வாக்கிங் செய்வது அவனது பழக்கவழக்கம். வேலை பளுவின் காரணமாக ஜிம்மிற்குச் செல்ல முடியாமல் போனாலும் வீட்டில் சில உடற்பயிற்சி சாதனங்களை வைத்துக் கொண்டு அவ்வப்போது அதை பயன்படுத்திக் கொண்டும், தினமும் தோட்டத்தில் ஜாக்கிங் சென்று தனது உடலை மிகவும் பிட்டாக வைத்திருந்தான். 6 பேக் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவனது ஆசை, அதுவும் மெல்ல மெல்ல அவனது உடலில் தெரிந்தது அது இன்னும் முழுமையடையவில்லை.

போர்வையை விலக்கியவன் தூக்க கலக்கத்துடனே அலாரத்தை ஆப் செய்துவிட்டு மெதுவாக எழுந்து தான் அணிந்திருந்த நைட் ட்ரஸ்ஸை மெதுவாக களைந்தபடியே ரெஸ்ட் ரூம் சென்றான். 5 நிமிடம் கழித்து திரும்பி வந்தவன் ஜாக்கிங் செல்வதற்கான உடையை மாற்றிக் கொண்டு கண்ணாடி முன் நின்று தலைமுடியை வாரிக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தான். 4.45 என காட்டவே தனது செல்போனை தேடிப்பிடித்து அதில் பேஸ்புக் மெசேஜ் ஏதாவது வந்துள்ளதா என பார்த்தான். ஒரே  மெசேஜ் அதுவும் தாராவிடம் வந்திருப்பதைக் கண்டு உற்சாகத்தில் முகம் மலர்ந்தான் கோவிந்த்.

”என்ன மெசேஜா இருக்கும் அதுக்குள்ள ஊருக்கு வந்துட்டாளா, எனக்காக ஒரு பொண்ணு என்னைத் தேடி வர்றதை நினைச்சாலே உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுதே” என படபடவென மகிழ்ச்சியில் தன்னிடமே பேசியவன் எதிரில் கண்ணாடியைப் பார்த்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”6 பேக் வைச்ச பின்னாடி தாரா வந்திருந்தா நல்லாயிருக்கும், பரவாயில்லை இப்ப கூட நான் அழகாதான் இருக்கேன். சீக்கிரமா ஜாக்கிங் முடிக்கனும்” என நினைத்தபடியே மெசேஜ் பார்க்க அதில்

”ஹாய் கோவிந்த் நேத்து நைட்டே நான் காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பிட்டேன். விடிகாலையில நான் திருநெல்வேலி வந்துடுவேன், உன்னைப் பார்க்க நிச்சயம் வருவேன், எத்தனை மணிக்கு வரனும்னு சொல்லு நான் கண்டிப்பா வந்துடறேன்” என எழுதியிருக்க அதைப் படித்துவிட்டு கோவிந்த் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான்

”என் தாரா வந்துட்டா, எனக்காக வந்துட்டா, எத்தனை மணிக்கு வரச் சொல்லலாம். நைட்டெல்லாம் ட்ராவல் பண்ணியிருப்பா, டயர்டா இருப்பாளே, இங்கயே தங்க வைக்கலாமா இல்லை நான் வீட்ல யார்கிட்டயும் அவள் வர்றதை சொல்லலையே சே பேசாம அவளை ஓட்டல்ல தங்க வைச்சிட்டா என்ன, அதான் கரெக்ட் ஓ காட் இன்னிக்கு குலதெய்வ கோயில்ல பூஜை இருக்குன்னு சொன்னாங்களே அம்மா, நான் மறந்துட்டேன் வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க இந்நேரம் எல்லாரும் கிளம்பியிருப்பாங்க நானும் கட்டாயம் போகனுமே இல்லைன்னா அம்மா திட்டுவாங்க.

அப்படின்னா ஒண்ணு செய்யலாம் மதியம் டைம் பிக்ஸ் பண்ணிடலாம், அதுக்குள்ள வீட்ல எல்லாரும் பூஜை முடிஞ்சி திரும்பி வந்துடுவாங்க, அதான் கரெக்ட் ஆனா அப்படியே தாரா வந்தாலும் வீட்ல இருக்கறவங்க என்ன நினைப்பாங்க, எனக்காக வந்தாள்னா நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுன்னு நினைச்சிட்டா என்ன செய்றது, நான் தாராவை பார்க்கவேயில்லை அப்படியிருக்கறப்ப எப்படி வீட்ல இருக்கறவங்களை சமாளிக்கறது,

ஃப்ரெண்டுன்னு சொன்னா கண்டிப்பா நம்ப மாட்டாங்க என்ன செய்யலாம் வேணாம் முதல்ல நாம தாராவை பார்க்கலாம், பேசலாம், பழகலாம், 1 வாரம் டைம் இருக்கே, கடைசி நாள் கூட வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம், இப்பவே வேணாம் இங்க இருக்கறவங்க அவளையும் என்னையும் சேர்த்து வைச்சி பேசிடுவாங்க, இதனால அவளுக்கு கஷ்டம், எனக்கும் பிரச்சனை, அவளை ஓட்டல்லயே தங்க வைச்சிடலாம் எனக்கு தெரிஞ்ச பெஸ்ட் ஓட்டல் இருக்கு அந்த அட்ரஸ் அவளுக்கு மெசேஜ் பண்ணிடலாம், அதுல அவள் தங்கட்டும் அங்க போய் நாம பார்க்கலாம்” என நினைத்தவன் சட்டென அவளுக்கு

”ஹாய் தாரா வெல்கம் டு திருநெல்வேலி, நீ வந்தது நினைச்சி எனக்கு சந்தோஷமா இருக்கு, நான் ஒரு ஓட்டல் அட்ரஸ் கொடுக்கிறேன், தி பெஸ்ட் ஓட்டல் அது, அங்க நீ தங்கிக்கலாம், இப்பவே உன்னை நான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா வீணா என் வீட்ல எல்லாரும் நம்ம பிரண்ட்சிப்பை பத்தி தப்பா நினைப்பாங்க,  அதனால நீ திரும்பி ஊருக்கு போறப்ப வந்து எங்க வீட்டைப் பார்த்தா போதும், இப்போதைக்கு நீ ஓட்டல்ல தங்கிடு, நானும் ஓட்டல் ஓனர்கிட்ட பேசிடறேன், காலையில என்னால உன்னை பார்க்க வரமுடியாது, முக்கியமான வேலையிருக்கு நீ ரெஸ்ட் எடு, நான் மதியம் 3 மணிக்கு உன்னை ஓட்டல்ல சந்திக்கிறேன் பை” என பதில் மெசேஜ் அனுப்பிவிட்டதோடு

”இதுக்கப்புறம் ஜாக்கிங் போறது வேஸ்ட், பேசாம வீட்டு மொட்டை மாடியிலயே சில எக்ஸர்சைஸ் பண்ணிட்டு வந்துடலாம், கோயிலுக்கு கூப்பிடுவாங்க சீக்கிரமா ரெடியாகனும், மத்தவங்க போய் எல்லா வேலைகளையும் செய்யட்டும், நாம கரெக்டா 10 மணிக்கு போய் நிக்கலாம் ஊருக்கு முன்னாடி போய் என்ன வேலை செய்றது, எப்படியும் வேலைக்காரங்கதான் எல்லாம் செய்வாங்க, அங்க நின்னு நேரத்தை வீணடிக்கறத விட தாராவுக்காக கிப்ட் வாங்க போலாம், அவள் என்ன மாதிரியான கிப்ட் கொண்டு வராள்ன்னு தெரியலை, அதைவிட காஸ்ட்லியா வாங்கனும் எஸ் அதான் செய்யனும்” என அவன் மனதில் நினைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறி மாடிக்குப் போனான்.

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Comments  
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகாராணி 2019-01-27 11:01
கதையில் விருவிருப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது இனி ராதாவின் செயல்கள் என்ன முராரியின் எண்ணங்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை. தாரா கோவிந்த் என்ன ஆனார்கள்? :Q:
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகாராஜேந்திரன் 2019-01-27 10:57
nice story teaser padithen athuvum super radha murarikaga vandhala? devi pavam? ivangala pathi theriyama vambula matika pora facepalm
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகாvijayalakshmi 2019-01-27 10:39
story romba interstinga poguthu good luck inimela radha, thara life eppadi marumnu therinjikka aavala irukku :clap:
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகாmahinagaraj 2019-01-25 11:09
செம கலக்கல்.... :clap: 👏👏
வர்ணனைகள் சூப்பர்...
என்ன நடக்க போகுதோ....😱😵😟
:thnkx:
# கலாபக் காதலா...சசிரேகாரேணுகா சிவா 2019-01-24 20:55
Nice mam.waiting for next epi.radha enna panna pora? Thadava patha kovinth epadi react panna poran :Q:
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகாmadhumathi9 2019-01-24 20:51
:clap: nice epi.interesting aaga poguthu. (y) :thnkx: 4 this epi.waiting to read more. :GL:

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top