(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 07 - மஹா

enathuyire

ராம் தனது பைக்-கை நிறுத்தி விட்டு பேக்டரி -யின் உள் சென்றான். நேராக மீட்டிங் நடக்கும் அறைக்கு சென்றான். மீட்டிங் முடிந்து வெளிய வந்தவனை கந்தசாமி அழைத்தார்.

"ராம்"

"சொல்லுங்க அண்ணா"

"இவரு இன்னைக்கு தான் இங்க புதுசா சேர்ந்து இருக்காரு. பேரு அன்பு. ரெண்டு வருஷம் சென்னைல ஒரு பேக்டரி ல டெக்னீகள் ஆபரேட்டர்-ஆ வேல செஞ்சி இருக்காரு. நம்ம குருமூர்த்தி அய்யா சிபாரிசு. இவருக்கு பேக்டரி பத்தி எல்லாம் சொல்லிகுடுங்க."

"ஹாய் அன்பு...", ராம் கை நீட்டினான்.

"ஹாய்..." என்றான் கை குளிக்கியவாறு அன்பு.

"அன்பு இது ராம். ரொம்ப திறமையானவர். சேர்ந்த மூணு வருஷத்திலே சூப்பர்வைசார் ஆகி இருக்காரு. இவரு உங்களுக்கு எல்லாம் சொல்லி கொடுப்பாரு" என்று சென்று விட்டார்.

"வாங்க அன்பு பேக்டரி- ய சுத்தி காட்றேன். இங்க அப்புறம் பக்கத்து ஊர்ல இருந்து விலையுற கரும்பு வச்சு சக்கரை தயாரிக்குறோம். அத பாக்கெட் பண்ணி நம்ம பிராண்ட் நேம் ல விக்குறோம்."

"ஓ... ஓகே சார்"

"அன்பு... என்ன நீங்க ராம் னே கூப்புடுங்க."

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"ஓகே ராம்"

பேக்டரி யின் மற்ற சட்ட திட்டங்கள் வழிமுறைகளை கூறியவன் அவனின் வேலையை கூறி விட்டு சென்று விட்டான்.

மதிய உணவின் போது அவனை மீண்டும் சந்தித்த ராம்,

"என்ன அன்பு வேலலா எப்படி இருக்கு. உங்களுக்கு பிடிச்சி இருக்கா?..."

"பிடிச்சி இருக்கு ராம்"

"உங்க கிட்ட அப்பவே கேக்கணும்னு நெனச்சேன். குருமூர்த்தி ஐயாவை உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அவரு வீட்டுக்கு பக்கத்து வீட்டில தான் நா இருக்கேன். அது மட்டும் இல்ல என்ன ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்ன காப்பாத்தி வெளி கொண்டு வந்து இருக்காரு அவருக்கு என்னைக்கும் நா கடமை பட்டிருக்கேன்" என்று அவன் உணர்ச்சி பொங்க சொல்ல. இதற்கு பின்னாடி எதோ ஒரு கதை இருப்பதை உணர்த்த ராம் முதல் நாளே அன்பை சங்கடப்படுத்த விரும்பாமல் பேச்சை மாற்றினான்.

"அய்யாவால எப்போவுமே எல்லாருக்கும் நல்லது தான் நடக்கும். அவர் ஆசிரியர இருந்த பள்ளில தான் நானும் கந்தசாமி அண்ணனும் படிச்சோம். கந்தசாமி அண்ணா எனக்கு மூணு வருஷம் சீனியர். அப்போவே எங்க தமிழ் வாத்தியார் குருமூர்த்தி ஐயா தான் எங்க எல்லாருக்கும் ஹீரோ. ரொம்ப நல்ல மனிதர். எல்லாருக்கும் உதவி செய்யும் மனசு இருக்கிறவர். அவரால அமைச்சு தர பட்ட உங்க வாழ்க்கையும் சிறப்பதான் அமையும். சரி வாங்க சாப்புட போலாம்..." என்று அவனை அழைத்து கொண்டு உணவு அருந்தும் இடத்திற்கு சென்றான் ராம்.

சற்றே மேடிட்ட வயிற்றோட தாய்மையின் பூரிப்பில் மேலும் அழகாய் இருந்தாள் அவள். திடிரென்று யாரோ அவளவனின் அணைப்பில் இருந்து அவளை பிரித்து தனியே இருட்டு அறையில் தள்ளிவிட்டனர். கதவை வேகமாக தட்டி கொண்டு அழுது கொண்டிருக்கிறாள்.அப்போது அவளின் கன்னத்தில் யாரோ பளார் என்று அறைய நிலை தடுமாறி கீழே விழுந்தாள், சற்றென்று தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள் தமிழ்.

சிறுது நேரத்திற்கு ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. தனது வயிற்றை தடவி பார்த்தவள் ஓவென்று அழ தொடங்கிவிட்டாள். சற்று நேரத்திற்கு முன்பு நடந்தது அனைத்தும் கனவு என்று புரியவே அவளுக்கு வெகு நேரம் எடுத்து. தனது மன பாரம் தீரும் வரை அழுதவள் எழுந்து முகம் கழுவிட்டு பூஜை அறை சென்றவள் கடவுளின் முன் நின்று கண் மூடி வேண்டினாள். பிறகு தன் தாலியை எடுத்து அதில் குங்குமம் இட்டவள் அப்படியே அமர்ந்து விட்டாள்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாலோ தெரியவில்லை கதவு தட்டும் ஓசை கேட்டது. வெகு நேரம் அப்படியே அமர்ந்திருப்பாள் போலும் இரவு நேரம் நெருங்கியதால் வீடே இருள் சூழ்ந்திருந்தது. கண் விழித்து பார்த்தவளுக்கு மீண்டும் அதே இருட்டு அதே கதவு தட்டும் ஓசை மனதில் பயம் இன்னும் அதிகமாக கண்களை இறுக்கி மூடி கொண்டாள் கடவுளை வேண்டி கொண்டே. சற்று நேரத்தில் கதவு தட்டும் ஓசை நின்று, "தமிழ் அக்கா... என்ன பண்றீங்க?" என்ற பூங்கொடியின் அழைப்பில் சுதாரித்தவள் தன்னை சமன் படுத்திகொண்டு எழுந்து மின்விளக்கை போட்டுவிட்டு கதவை திறந்தாள்.. அங்கே சிரித்த முகத்துடன் பூங்கொடி நின்று கொண்டிருந்தாள்.

"என்ன கா உடம்பு சரி இல்லையா? முகமே சரி இல்ல?"

"அதெல்லாம் இல்ல டி. தூங்கி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எழுந்தேன் அதான், நீ உள்ள வா" என்று மழுப்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.