(Reading time: 9 - 17 minutes)

அன்பு வேலையில் சேர்ந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. அவன் வரும் வரை பூங்கொடி தமிழுடன் தான் அரட்டை அடித்து கொண்டிருப்பாள். பூங்கொடியே வராமல் இருந்தாலும் தமிழே சென்று அவளை மேலே அழைத்து கொண்டு வந்து விடுவாள். சற்று நேரம் அவளிடம் வம்பளந்தவள் சமைக்க சென்று விட பூங்கொடி தனது பையில் இருந்து சில புத்தகங்களை எடுத்து வீடு பாடம் செய்ய ஆரம்பித்தாள். அவளுக்கு காபி போட்டு குடுத்துவிட்டு சமையல் வேலையில் மூழ்கினாள் தமிழ்.

அவளுடன் பேசியதில் தெளிந்தவள் அந்த கனவை மறந்து போனாள்.

ராம் வீட்டினுள் நுழையும் போது கயல் தன் அன்னையுடன் அமர்ந்து டிவி யில் ஓடும் சீரியலை பற்றி வம்பளந்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து சிரித்தவாறே வந்த ராம் அவள் அருகில் வந்து , "உடம்பு சரில்லனு லீவு போட்ட கொஞ்சமாவது உடம்பு சரி இல்லாத மாதிரி நடிக்கவாது செய்யலாம்ல?" என்று கேட்க லதாவும் (அவர்களின் தாயார்) சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

"அண்ணா..." என்று சிணுங்கியவள் "எனக்கு நெஜமாவே உடம்பு சரி இல்ல ஈவினிங்ல இருந்து தான் பெட்டெர் ஆஹ் இருக்கு அதான் டிவி பாக்க வந்தேன்"

"ஹ்ம்ம்... சரி சரி நம்பிட்டேன். எங்க உன் அண்ணி?. இந்நேரத்துக்கு உனக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்து இருக்கணுமே ?"

"அண்ணி புது டிஷ் எதோ ட்ரை பன்றாங்க"

"ஓ..." என்றவன் ரெப்பிரேஷ் ஆக சென்றுவிட்டான்.

சீதாவுக்கு கல்யாணம் ஆன புதிதில் சமையல் சுத்தமாக தெரியாது. அவளது வீட்டில் சமையலுக்கு வேலையாட்கள் இருந்ததால் கேட்டதை செய்து கொடுப்பார்கள். அதனால் கிட்சேன் பக்கம் செல்லும் அவசியம் ஏற்படவில்லை. அதுவும் வீட்டிற்கு ஒரே குழந்தை என்பதால் மிக செல்லமாக வளந்தவள்.

கல்யாணத்திற்கு பிறகும் லதா அவளை செல்லமாக தான் பார்த்து கொண்டார். அணைத்து வேலைகளையும் அவரே செய்து விடுவார். அனால் சீதாவிற்கு தான் என்னவோ போல இருந்தது. அவள் வீட்டில் அவள் எவ்வளவு சந்தோஷமாகவும் வசதியாகவும் இருந்தாலோ அதே அளவு இல்லாவிட்டாலும் ராமால் முடிந்த அளவுக்கு அவளை அவளின் வீட்டில் இருப்பதை போல் உணரவைக்க முயற்சி செய்தான். அதனாலேயே அவளை அவன் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.அதுவும் இல்லாமல் அவர்கள் ஊரில் அவள் படிப்பிற்கான எந்த நிறுவனமும் இல்லை. அதனால் சீதாவும் வேலைக்கு செல்வதை பற்றி அவனிடம் அடம்பிடிக்கவில்லை. அவன் வேண்டாம் என்றதும் சரி என்று சொல்லி விட்டாள். அவனை பொறுத்தவரை சீதா அவனுக்கு கிடைத்த பொக்கிஷம். பின்ன? தன்னை செல்லமாக வளர்த்த தன் பெற்றோரிடம் வாதாடி சண்டை இட்டு உண்ணாவிரதம் இருந்து அல்லவே ராமை அவள் கரம் பிடித்தாள். சில நேரம் அவன் மேல் அவள் வைத்து இருக்கும் அன்பை காதலை பார்த்து ராமே வியந்திருக்கிறான். இப்படி ஒருத்தியை பொக்கிஷம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும் அவனால். ராமின் வீட்டிலேயும் அனைவரும் அவளை செல்லமாக பார்த்து கொண்டாலும் எல்லா வேலையையும் லதா அத்தையே செய்வது அவளுக்கு கஷ்டமாக இருந்தது அது மட்டும் இல்லாமல் எவ்வளவு நேரம் தான் அவளும் சும்மாவே அமர்ந்திருப்பது. ஒரு நாள் முடிவெடுத்தவளாக தன் அத்தையிடம் சென்று பேசினாள். பிறகு அவருடன் சேர்ந்து சிறு சிறு வேலைகள் செய்ய ஆரம்பித்தாள். சிறிது நாள் கழித்து சமையலில் ஆசை வரவே இன்டர்நெட் இல் பார்த்து புது புது உணவை முயற்சி செய்ய ஆரம்பித்தாள். உணவு சரி இல்லை என்றாலும் யாரும் அவளின் மனம் கோணும் படி பேசியதில்லை. கயலிற்கும் அண்ணியின் மீது பிரியம் அதிகம். எப்போதும் ஒன்றாகவே இருப்பர்.

தான் சமைத்த உணவை எடுத்து வந்து அடுக்கி கொண்டிருந்தாள் தமிழ்.

அன்றைய நாள் பேக்டரி யில் நடந்தவற்றை கூறி கொண்டே இரவு உணவை உண்டான் அன்பு. இரவு உணவை உண்டவர்கள் சற்று நேரம் உக்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.

"தமிழ்..."

"ம் சொல்லு மாமா"

"நீ சந்தோஷமா தான இருக்க உனக்கு ஒன்னும் நா கஷ்டம் குடுத்துடுலேயே?"

"என்ன மாமா கேள்வி இது நீ பக்கத்துல இருக்க அப்போ எனக்கு என்ன கஷ்டம்?"

அவன் எதிர் பார்த்த பதில் தான் என்றாலும் அவளின் பதிலில் அவள் தன் மேல் எவ்வளவு காதலும் நம்பிக்கையும் வைத்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு. பேச்சை தொடர்ந்தான்

"இன்னும் கொஞ்ச நாள் தான் சம்பளம் வந்துடும் டா. எல்லாம் சீக்ரம் சரி ஆகிடும்"

"மாமா... எனக்கு எந்த சங்கடமும் இல்ல இருக்கற பணத்தை வச்சி என்னால சமாளிக்க முடியும். நீங்க எத பத்தியும் கவலைப்படாம தூங்குங்க" என்றாள் அவனை ஆறுதலாக அணைத்த படி.

"சரி டா" என்றவன் அவளின் நெற்றியில் முத்தம் இட்டு எழுந்து சென்று விளக்கை அணைத்து விட்டு வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.