Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 30 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 30 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

னனி…… அவனை ஆட்டி படைத்திருந்தாள்…!. உண்ண மறந்தான்…. உறங்க மறந்தான்… தன்னையே மறக்க விரும்பினான் அவன்.

ஆனால்….. அவனது அந்த விருப்பம்….. அவனின் நிலா வாழ்வை பாதிக்கும் என்று அவன் அறிவானா என்ன..?

“போதாதா  டா கதிர்..? இந்த பழக்கத்தால் நான் இழந்தது போதாதா….? என்று  அவனுள் இருந்த அவள் கேட்க, அதற்கு மேலும் அங்கே இருக்க பிடிக்காமல் மீண்டும் காரை எடுத்தவன் மனது, தன் மீது மோதிய அந்த வாலிபன் தன்னை பார்த்து இளக்காரமாக சிரித்தபடி “மச்சி கிளம்புறான் டா, கார் ட்ரைவர் போலிருக்கு” என்று எவனிடமோ சொல்லியது நினைவில் வர

“மதி…!!!” என்று யோசித்தவன் மீண்டும் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான் .

தனது இந்த நிலைக்கு கதிர் மட்டுமே காரணம் இல்லை என்று உணர்ந்த போதும், இன்பமோ…, துன்பமோ.., வெறுப்போ.., சலிப்போ.., இயலாமையோ.. குழப்பமோ ...வேதனையோ  அதை அன்பு கொண்டவரிடம் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்பதால் அவனிடத்தில் அவள் உணர்வுகள் மொத்தத்தையும் கோபம் என்ற பெயர் சூட்டி அவள் கொட்டிவிட,

தன்னவளின் பாரங்களை…. பழியாக…..துளி கூட வேறெவர் மீதும் சிந்தாமல் ...சிதறாமல்  மொத்தமாய் தானே ஏற்றுக் கொள்ள விரும்பினான் கதிர் ..!!

விரும்பி ஏற்றுக்கொண்ட பாரத்தின் அழுத்தம் தாங்காமல் ….. அதை தாங்கும் வழி அறியாமல்… மீண்டும் மதுவை நாட, அதை நாடவிடாமல் அவனவளே தடுத்ததில் இப்போது  நடப்பிற்கு வந்திருந்த அவனது மனது, “மதிக்கு ஆபத்தோ..?” என்று சிந்திக்க தொடங்கியது ....மதி மற்றும் இளம்பிறையை முன்னே அனுப்பி அவர்களை பின் தொடர்ந்தவன், சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபடி வந்ததில் தெளிவாய் சிலவற்றை கண்டறிந்திருந்தான் ....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நிலாவும் ..தானும் மனமொத்த தம்பதியராக சுந்தரி முன்பு நிற்கும் வரை அவர்கள் முகத்தில் விழிக்க  தயங்கியது  மடத்தனமோ..? என்ற யோசனை அவனுள்…

ஆனால் பாட்டி…. ஏதேதோ சொன்னார்களே மாதம் ...பணம் தருவதாய் ...??

அவன் தாய் வாடியபடி பேசிய பேச்சுக்கள் ....?எதையும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட முடியவில்லை அவனால் ...

ஆனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ ..இளம்பிறையிடம் சமாதானமாக எடுத்து சொல்லி இந்த இடத்தை விட்டு அதி விரைவில் கிளம்ப வேண்டும் என்று தீர்மானித்திருந்தான் அவன் ...

அவளை சீண்டும் வண்ணம் எதையும் பேசிவிட கூடாது என்று தெளிவாக முடிவெடுத்திருந்தான் கதிர் ...

மதிக்கு ஏதேனும் ஆபத்தோ என்று எண்ணியவன் வேகமாய் வீட்டை நோக்கி வர …. வீட்டின் கதவு மூடியிருக்கவும் வேகமாய்  மொட்டை மாடிக்கு செல்ல… அங்கே இளம்பிறை இல்லாததால் கீழே வந்தவன்  “மதி…. வான் மதி” என்று கதவை தட்ட  அக்கம் பக்கம் இருந்தவர்கள் இவனை ஒரு வாறு பார்க்க தொடங்க “மதி” என்று மீண்டும் தட்ட உள்ளே தாழிடப்பட்டிருக்கவும் “மதி கதவை திற” என்று இரு முறை சொல்லிவிட்டு வேறு வழியில்லாமல் வேகமாய் இடிக்கவும், அவ்வளவு சிரமம் தேவையில்லை என்பது போல் சுவரில் போய் இடித்து மீண்டும் மூட வந்த கதவை தள்ளி உள்ளே செல்ல

அங்கே கண்ணீரோடு மதி நின்றிருந்தாள் .

சைக்கிளில் வந்த வாலிபனும், இவளிடம் விசிலடித்து வம்பு செய்த அந்த வாலிபனும் அவளிடம் கத்தியை காட்டியபடி நிற்க ……. இருந்த ஆத்திரமும், கோபமும் அவர்களை பந்தாடும் ஆற்றலென மாற கூட்டம் கூடத்தொடங்கியது அங்கு..

“மாமா ….வேணாம்… வேணாம்…”. என்று இவள் அவன் பின்னே வர “உள்ள போன்னு சொல்றேன் இல்ல” என்று இவன் கர்ஜித்ததில் அரண்டு மதி  வீட்டுக்குள் சென்றுவிட

“ஏய் நான் யாரு தெரியுமா,…?” என்று ஒருவன் கேட்க… கேட்டவனின் வாயில் கதிர் ஓங்கி குத்தி இரத்தம் வழிய,..  அனைவரும் சிறிது நேரம் வேடிக்கை பார்த்தபடி இருக்க… காவல் நிலைய வண்டி அங்கு வந்து நிற்கவும் இவர்கள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு   அழைத்து சென்றனர்.

அதன் பின் கதிர் தனது குடும்ப வக்கீல் மூலம் வெளியே   வர ……காவல் நிலைய அதிகாரியோ “என்ன சார் உங்க ஸ்டேட்ஸ்க்கு நீங்க போய் இவனுங்க கிட்ட …? மோசமான பசங்க சார் இவனுங்க…… ஏற்கனவே கஞ்சா கேஸ் ல ரெண்டு தடவ அர்ரெஸ்ட் ஆகியும் அடங்க மாட்டேன்றாங்க” என்று சொல்லவும்

“வொய் இன்சு…. என்ன அவன் முன்னாடி ஸீன் காட்ரியா?.. மேல கை வெச்சிட்டான் இல்ல இனி பங்கம் தான்” என்று சிறையில் இருந்த ஒருவன் சொல்ல

கோபம் இன்னும் அடங்காமல் இருந்த கதிரோ  சிறை கம்பிகளை நோக்கி செல்ல

“சார்…. சார் கூட்டிட்டு போங்க சார்….. இவரு வேற” என்று காவல் துறை அதிகாரி சொல்லவும் இருவரையும் கதிர் முறைத்துவிட்டு செல்ல

“ஏய் என்ன முறைக்கிற? போடா…. போடா…. போடா” என்று சொன்னவனை பொருட்படுத்தாமல் வக்கீலுக்கு நன்றி சொன்னவன் நேராக வீடு நோக்கி சென்றான்.

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 30 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-01-27 19:31
Pch what is this prama ma'am avanga dance dance sollite irundhanga adave chance kodukalaye facepalm next epi la fire dance pole irukke :D madhi nijamave pisasu than ma'am 😉😉 enama kalaikuranga :grin: namba royal Richard ippadi vandhu sikitare :sad: ungalukku budget problem-n ninaikran just konjam luxury suite book panikudungale and then continental breakfast instead concrete (uppuma) :D
ila manasula Ena?? Imbuttu torture panurangale :eek: anyway enjoyed reading today's update...look forward to read next update. Thank you for this entertaining epi 👏👏👏👏 keep rocking. Sundari aunt we r waiting. Kadhirai kaptravarungal viraindhu :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 30 - பிரேமா சுப்பையாrspreethi 2019-01-25 23:39
Super update... Mathi house scenes super... Kashtatha meerina oru vidha magizhchi... Idhupola kudumbangala irukkum.... Paavam Kathir... Yevlo sufferings... Baby moon kum dhan... Irundhalum kathir paavam dhan... Upma scenes super :grin:
Waiting for next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 30 - பிரேமா சுப்பையாsaaru 2019-01-25 17:38
Nice update...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 30 - பிரேமா சுப்பையாmahinagaraj 2019-01-25 17:11
செம பயங்கரம் மேம்... :clap: :clap:
ரொம்ப நல்ல மச்சினி.. :GL: ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 30 - பிரேமா சுப்பையாSahithyaraj 2019-01-25 13:14
Machinichi mazhaila puyal adichathupola irukku. Kastamana oru visayatha comedy kalanrhu sonnalum andha soozhal padikkum podhu kanneer Vara vachuduchu. :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top