Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

என சொல்ல ராதா சந்தோஷமாகி தாராவை அணைத்துவிட்டு

”போலாம்க்கா” என சொல்ல அவளோ

”இல்லை நீ மட்டும்தான் போற அதுவும் தனியா, அதிலயும் ஆட்டோல போற” என சொல்ல ராதாவோ

”அய்யோ அக்கா நான் மட்டுமா தனியாவா இந்த ஊரே எனக்குப் புதுசு, நான் நம்ம ஊர்லயே நிறைய இடங்களுக்கு போனதில்லை, வீடு விட்டா கோயில், காலேஜ் இவ்ளோதான் எனக்கு தெரியும் நீயும் வாக்கா அதுவுமில்லாம தேவியோட வீடு திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம் அக்கா இங்கிருந்து போறதுக்கே அரைமணி நேரமாகும் அக்கா எனக்கு பயமா இருக்கு” என கெஞ்ச தாராவோ

”முதல்ல இந்த பயத்தை விட்டுத்தள்ளு ராதா, 15 வருஷமா உன்னை அத்தை வளர்த்த லட்சணமே சரியில்லை, இந்த 1 வாரத்தில உன்னை நான் மாத்திக் காட்டறேன். திரும்பி ஊருக்கு போறப்ப நீ அத்தை முன்னாடி பயந்துக்கிட்டு, அழுதுக்கிட்டு நிக்க கூடாது தைரியமா நிக்கனும் புரியுதா”

”ஆனா அக்கா என்னை வைச்சி ஏன் இப்படி டெஸ்ட் பண்றீங்க வேணாம்கா நீயும் வாக்கா”

“இப்ப நீ தேவியை பார்க்கனும்னா நான் சொன்னதை செய், இல்லைன்னா 1 வாரத்துக்கு உன்னால அவளை பார்க்க முடியாது எப்படி வசதி” என கேட்க ராதாவோ அதிர்ந்தாள்

”ஆனா அக்கா அவளைப் பார்க்கத்தானே நான் வந்தேன் இப்ப நீ இப்படி சொன்னா எப்படி”

“அப்ப நான் சொல்றதை செய், உன்கிட்ட தேவி வீட்டு அட்ரஸ் இருக்கா”

“இருக்குக்கா”

“சரி இப்பவே காரை விட்டு இறங்கி அங்க ஆட்டோ இருக்குல்ல அதுல ஏறி தேவி வீட்டுக்கு போற, போய் சேர்ந்ததும் எனக்கு ஃபோன் பண்ணி சொல்ற, ஒருவேளை வழியில உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா நான் வந்துடறேன்”

“அக்கா வேணாம்கா” என அவள் கெஞ்ச

”சரி நீ ஆட்டோல முன்னாடி போ, நான் ஆட்டோவை பாலோ பண்ணிக்கிட்டு வந்துடறேன், உனக்கு எதுவும் ஆகாது தைரியமா எல்லாம் செய், பயப்படாத ராதா இங்க அத்தையும் இல்லை, வைகுந்தனும் இல்லை, இது திருநெல்வேலி வீரம் விளைஞ்ச ஊரு, இங்க நீயும் வீரமா இருக்கனும், நீ இப்படி கோழையா இருந்தா தேவிக்கு பிடிக்குமா சொல்லு அவளை இப்பதானே நீ முதல் முதல்ல பார்க்கற, அப்படியிருக்கறப்ப பார்த்த முதல் நாள்லயே உன்னை அவளுக்கு பிடிக்காம போனா என்ன செய்வ” என தாரா கேட்க ராதாவிற்கு அந்நேரம் தாராவின் பேச்சில் இருந்த உண்மை உரைக்கவும் அவள் தெளிவானாள்

”தேவிக்காக இல்லை முராரிக்காக நான் தைரியமா இருக்கனும், அப்புறம் என்னை கோழைன்னு அவர் நினைச்சிடக்கூடாது” என நினைத்தபடியே

”சரிக்கா” என அவள் சந்தோஷமாக தலையாட்டிவிட்டு அவசரமாக வண்டியை விட்டு இறங்கினாள். அவளிடம்

”ராதா ராதா இரு பணம் கொண்டு போ” என சொன்னது அவள் காதில் விழவேயில்லை கையில் பையை கூட கொண்டு செல்லாமல் வெறும் செல்போனுடன் ஆட்டோ ஸ்டான்டிற்கு சென்றாள். அதைக் கண்ட தாராவோ

”இன்னும் குழந்தையாவே இருக்காளே, பணம் இல்லாம ஆட்டோல எப்படி ட்ராவல் பண்ணுவா” என நினைத்தவள் உடனே ட்ரைவரிடம்

”ட்ரைவர் ஆட்டோக்காரன்கிட்ட சொல்லிடுங்க, பணம் நான் கொடுத்துடறேன், ஆட்டோ பின்னாடிதான் நம்ம கார் வரும்ங்கறதையும் பத்திரமா அவளை கூட்டிட்டு போகனும்னு சொல்லிடுங்க” என சொல்ல ட்ரைவரும் ஆட்டோ ஸ்டான்டிற்கு சென்று ஒரு ஆட்டோக்காரனிடம் தெளிவாக பேசிவிட்டு அந்த ஆட்டோவில் ராதாவை ஏற்றி விட்டு திரும்பி காரிடம் வந்து ஏறிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

ஆட்டோ முதலில் கிளம்பியது ராதாவோ தலையை வெளியே நீட்டி காருக்குள் இருந்த தாராவைப் பார்த்து

”அக்கா டாட்டா டாட்டா” என கையாட்டிவிட்டே புறப்பட தாராவோ ட்ரைவரிடம்

”வண்டியை ஆட்டோ பின்னாடி விடுங்க” என சொல்ல வண்டியும் ஆட்டோவை பாலோ செய்தது.

முழுதாக 30 நிமிடம் கழித்து முராரி இருந்த வீட்டின் தெருமுனையில் திரும்பி ஆட்டோ 4 வீடு தள்ளி நின்றது. தெரு முனையில் நின்றது தாராவின் வண்டி. ராதா என்ன செய்கிறாள் என தாரா பார்க்க ராதாவோ ஆட்டோவை விட்டு இறங்கியதும் ஆட்டோவும் யு டர்ன் போட்டு திருப்பிக் கொண்டு நேராக தாராவின் காரிடம் வர அவள் ஆட்டோக்காரனிடம்

”அந்த வீடுதானே என் தங்கச்சி சொன்ன வீடு”

“ஆமாம் மேடம்”

“எவ்ளோ ஆச்சி” என கேட்க அவன் சொன்ன பணத்தை தந்தவள் அவனிடம்

”அந்த வீடு யாரோடது” என கேட்க

”ஹரிஹர வம்சத்தவங்க வீடும்மா”

”ஓ அங்க நம்பிக்கையானவங்க யாராவது இருக்காங்களா”

“நம்ம முராரி அண்ணா இருக்காருங்களே” என சொல்ல

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகாராணி 2019-01-27 11:01
கதையில் விருவிருப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது இனி ராதாவின் செயல்கள் என்ன முராரியின் எண்ணங்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை. தாரா கோவிந்த் என்ன ஆனார்கள்? :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகாராஜேந்திரன் 2019-01-27 10:57
nice story teaser padithen athuvum super radha murarikaga vandhala? devi pavam? ivangala pathi theriyama vambula matika pora facepalm
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகாvijayalakshmi 2019-01-27 10:39
story romba interstinga poguthu good luck inimela radha, thara life eppadi marumnu therinjikka aavala irukku :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகாmahinagaraj 2019-01-25 11:09
செம கலக்கல்.... :clap: 👏👏
வர்ணனைகள் சூப்பர்...
என்ன நடக்க போகுதோ....😱😵😟
:thnkx:
Reply | Reply with quote | Quote
# கலாபக் காதலா...சசிரேகாரேணுகா சிவா 2019-01-24 20:55
Nice mam.waiting for next epi.radha enna panna pora? Thadava patha kovinth epadi react panna poran :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 03 - சசிரேகாmadhumathi9 2019-01-24 20:51
:clap: nice epi.interesting aaga poguthu. (y) :thnkx: 4 this epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top