(Reading time: 12 - 23 minutes)

இப்போது இன்ஸ்பெக்டர்க்கே கோபம் வந்து விட்டது. அசிட் ஊற்றும் அளவிற்குப் போயிருக்கானா என்று நினைத்தவர், மளமளவென்று எப்.ஐ.ஆர் போட்டு கிருத்திகா மற்றும் அவள் பெரியப்பாவிடம் கையெழுத்து வாங்கினார்.

உடனே அவனை ஜெயிலில் போட்டு கான்ஸ்டபிள் இடம் “அவன் இங்கே உள்ளே இருக்கானு சாயந்தரம் வரைக்கும் யாருக்கும் தெரியக் கூடாது. நம்ம ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுத்து முடிச்சதுக்கு அப்புறம் அவன் வீட்டுக்கு போன் பண்ணுங்க” என்று கூறவும், பிரதாப் புரிந்து கொண்டதாக தலை அசைத்தார்.

பிரதாப் இன்ஸ்பெக்டரிடம் “நாங்கள் கிளம்பவா சார்?” எனக் கேட்க,

“சார், உங்களுக்கே நம்ம சட்டம் தெரியும். என்னால் கொஞ்ச நேரம் தான் பிடிச்சு வைக்க முடியும். பிறகு எப்படின்னாலும் அவன் வெளியே வந்துடுவான். நீங்க நம்ம பொண்ண பார்த்துக்கோங்க” என்றார்.

“நிச்சயம் சார்” என்று விட்டுக் கிளம்ப, கிருத்திகாவும் “தேங்க்ஸ் சார்” என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.

இருவரும் நேராக வீட்டிற்குச் செல்ல, நேரம் கெட்ட நேரத்தில் தன் மகள் வரவும் என்னவென்று துர்கா பார்த்தாள்.

பிரதாப் வரும்போதே சக்தியை வரச் சொல்லிருக்க, இருவரும் என்னவென்று மகளிடம் கேட்டனர்.

கிருத்திகா எந்த விஷயத்தையும் வீட்டில் மறைப்பதில்லை. அதனால் அவள் சொல்லவும், கேட்டு இருந்தவர்கள்.

“சரிதான் கிருத்திகாமா. அவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் இப்படிதான் செய்யணும் . “ என்றார்.

துர்கா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, பிரதாப்

“எல்லாம் சரிதான். கிருத்திகா இனிமேல் நம் செக்யூரிட்டி வண்டியில் காலேஜ் போகட்டும். இல்லை என்றால் அவளுக்கு ஒரு ஷேடோ கார்ட் போட வேண்டும்” என்றார்.

“பெரியப்பா, நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி? ஷேடோ போடுமளவிற்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை. அதோட நீங்க சொல்லிக் கொடுத்த தற்காப்புக் கலை எல்லாம் எப்போவும் ப்ராக்டிஸ் பண்ணிட்டு தான் இருக்கேன். சோ டோன்ட் வொர்ரி”

“ஹ்ம்ம் . நீ சொல்றது எல்லாம் ஒருத்தர சமாளிக்க உதவும். நிறைய பேரா வந்து எதுவும் செஞ்சா உன்னைக் காப்பத்திகிறது கஷ்டம். முடிஞ்ச வரை நாம தான் முன்னெச்சரிக்கையா இருக்கணும்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் பதில் சொல்லுமுன், சக்தி “கிருத்தி, அண்ணா சொல்றதக் கேளு. “ என்று சொல்லி விடவே அதற்கு மேல் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்றாள்.

துர்கா பின்னோடு வந்தவர் “கிருத்திமா, ஏன் இப்படிப் பண்ற? அவங்க பெரிய இடம் இன்ஸ்பெக்டரே தயங்கும் போது, நீ இந்த வேலைப் பண்ணிட்டு வந்து இருக்க? நாளைக்கு உனக்கு எதாவது ஒண்ணுன்னா நாங்க என்ன பண்ணுவோம்?

“போம்மா, இவனை மாதிரி ஆளுங்களுக்குப் பயப்படுறது தான் முட்டாள்தனம். முதல் முறை இவன் டீஸ் பண்ணும் போது திரும்பிப் பார்த்து முறைச்சாலே இவன் பயந்து ஓடிப் போயிருப்பான். அவனை வளரவிட்டு வேடிக்கைப் பார்த்தது தான் தப்பு”

ஒரு பெருமூச்சோடு அவர் வெளியேற, கிருத்திகாவும் தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்து படுத்தாள்.

காலையில் கண்ட இன்கேம், இன்கேம் கனவைத் தொடரலாம் என்று எண்ணி கண்ணை மூட, அவளுக்கோ பஸ்சில் நடந்தக் காட்சியே தொடர்ந்தது. அவன் தொடவும் அனிச்சையாக அவனைப் பிடித்து தள்ளிய அந்த நிகழ்வு, இதற்கு முன் நடந்தாக நினைவு. அதனைச் சரியாக காட்சிப் படுத்தும் முன், அவள் அம்மா அவளை அழைக்க, அந்த நினைவு அப்படியேக் கலைந்தது.

அதே சென்னையில் வேறு ஒரு பகுதியில் “அம்மா” என்று அழைத்துக் கொண்டே இறங்கி வந்தான் பிரித்விராஜ்.

“என்னப்பா? “ என்று அவன் அம்மா ராதா கேட்க,

“அம்மா , எனக்குக் கொஞ்ச நாள் வெளியூர் வேலை இருக்கும்மா” என்றான்

“எப்போபா போகணும்?

“சரியாத் தெரியல. ஆனால் நான் போயிட்டு வரதுக்கு மாசக் கணக்கில் ஆகும்.”

“ஹ்ம்ம். சரி” எனும்போதே,

“ஹப்ப.. விடுதலை.. விடுதலை.. “ என்று ஒரு குரல் கேட்க, ப்ரித்வியின் தங்கை தாரிணி வந்தாள்.

“எதுக்குடி விடுதலை..?

“வேறே என்ன? உன் சீமந்த புத்திரன் கெடுபிடியில் இருந்து தான். அவன் வீட்டில் இருந்தா காலையில் எழுந்துக்கச் சொல்வான். படின்னு சொல்லுவான்.  மிலிடரி மாதிரி இருக்கும் வீடு. மாசக் கணக்கில் வரலைனால் எனக்குத் தான் கொண்டாட்டம். அதோட இத்தனை நாள் மாதிரி உன் புள்ளைக்குச் செய்யறேன்னு சொல்லி இலை தழை எல்லாம் போட்டு என்னை வாட்டி வதைக்காமல், நல்ல சாப்பாடா கண்ணுலே காட்டுவ.

“ஏண்டி, ஆம்பளை புள்ள, எவ்ளோ பொறுப்பா இருக்கான்? பொம்பளப் புள்ள நீ எதுடா சாக்கு கிடைக்கும் வேலைக்கு ஓபி அடிக்க அப்படின்னு திரிஞ்சுகிட்டு இருக்க?

“யா இட்ஸ் மீ.. வீட்டில் ஒருத்தருக்கு மேலே பொறுப்பா இருந்தா அந்த வீட்டில் வடைக்கு பருப்பு வேகாதுன்னு சுவாமி பருப்பானந்தா சொல்லிருக்கார்” என்று கூற,

“அடிங்க..” என்று இருவரும் அவளை அடிக்க வர, அவளோ வீட்டைச் சுற்றி ஓடினாள்.

**** Contest alert **** Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***

தொடரும்!

Episode # 01

Episode # 03

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.