(Reading time: 10 - 20 minutes)

நிலாவும் ரகுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். திருமணம் ஆகிச் சரியாக நாளையோடு ஒரு வருடம். திருமணம் ஆன நாளே முடிவெடுத்தது தான் இந்த விவாகரத்து. ஆனால் இன்று நிலா மனதில் நிறைய மாற்றங்கள், அதை ஏனோ ரகு உணர மறுக்கிறான்.

“மச்சி நா டிரைவிங்ல இருக்கேன். ஸோ நாளைக்குக் கோர்ட்டில் பார்க்கலாம் டா. குட் நைட் “ என்று போனை டிஸ் கணக்ட் செய்து அதற்கு மேல் வினோத்ஐ பேச விடாமல் செய்தான்.

“ஸாரி நிலா, வினோத் சரியான ஈடியட். லூசு மாதிரி ஏதோ பேசிட்டான். டோண்ட் மைண்ட்” என்று வினோத்திற்காக நிலாவிடம் மன்னிப்பு கேட்டான் ரகு.

நிலாவிற்கோ “வினோத் ஈடியட் இல்ல, நீதானடா ஈடியட், நீதான் லூசு. இப்போவது என் மனதில் என்ன இருக்கிறது என்று கேள் டா” என்று கூறி ரகுவை கட்டிப் பிடித்து அழவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. ஆனாலும் செய்யாமல் அமைதியாக மனதுக்குள் அழுது கொண்டிருந்தாள்.

அவள் அழுவது ரகுவிற்கும் தெரியும். அவள் அவனைப் பார்க்காத போது, இவன் அவளைப் பார்த்தான். பார்த்தவனின் உதட்டில் சிறு புன்னகை.

அவள் அழுவது, இவன் சிரிப்பது எல்லாம் ஒருவர் மற்றொருவர் மீது வைத்திருக்கும் காதலால்தான்.

எங்கள் நினைவிற்குத் தெரிந்து ஒருவர் வாழ்கையில் மற்றொருவர் வந்தது சரியா 2 வருசம் 3 மாசத்துக்கு முன்னால். ஆனால் இந்தக் கதை 27 வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்தது.

(ஒரு 27 வருஷ ஃப்லஷ் பேக் போவோமா)  

து ஒரு மழைக் காலம். வெளியே இடியோடு பெரிதாய் மழை பெய்து கொண்டிருந்தது. 

இரு வேறு  மருத்துவ மனைகளில், 2 குழந்தைகள் சுக பிரசவம்.

யாருனு நீங்க கெஸ் பண்ணிருப்பிங்க. உங்க கெஸ் கரெக்ட் தான். நம்ம நிலா, ரகு ரெண்டு பேரோட பிறந்த நேரம் நாள் எல்லாம் ஒன்றுதான்.

அதுகப்பறம் படிசாங்க, வளந்தாங்க, அந்தக் கதை நமக்கு இப்போ வேண்டாம். ஸ்டிரைட்டா 25 வருடம் ஃபார்வர்ட் பண்ணிடலாம்.

ரொண்டு பேருக்கும் இப்போ வயது 25. இப்போ ஸ்டோரி குல்ல போவோம்.

“புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது,

இந்த கொல்லை நில உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

மனம் சுடான இடம் தேடி அலைகின்றது”

இசை புயலின் இசையில் நனைந்து கொண்டிருந்தான் ரகுராஜன். இரவு உறங்குவதற்கு முன்னர் பாடல் கேட்பது அவனுக்கு பிடித்தமான ஒன்று.

ரகு தான் நம்ம கதையோட ஹீரோ. முழுப் பெயர் ரகுராஜன். 25 வயது, அளவான உயரம், மாநிறம் என எல்லாம் சேர்ந்து ஹண்ட்செம் பாய் எனப் பல பெண்களால் அழைக்கப்படுபவன். போட்டோகிராப்பியில் ஆர்வம் என்பதால் அதையே தன் தொழிலாகத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான். இந்தியாவில் பல கார்ப்ரேட் நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், திரைப்படம் துறையினர் எனப் பல தரப் பட்டவர்களுக்கு போட்டோ  என ப்ரெஃபஷனல் போட்டோகிரப்ர். செந்தமாக ஸ்டூடியோ வைத்திருக்கிறான்.

அறையின் கதவை தட்டிவிட்டு கையில் பால் கிளாஸ் உடன் உள்ளே நுழைந்தார் ரகுவின் தாய் பானுமதி.

“ரகு இந்தப் பாலை குடிச்சிட்டு தூங்கு” கிளாஸ்யை அவனிடம் நீட்டினார் பானு.

“டேபில்ல வெச்சிடுங்கமா, கொஞ்ச நேரத்தில் குடிக்கிறேன்” ரகு பதில் அளித்தான்.

“டேய் ரகு, இன்னைக்கு அந்தத் தரகர் வந்தாருடா, ஒரு நல்ல சம்பந்தம் இருக்குனு செல்லி பொண்ணு போட்டோவும், விவரமும் குடுத்துட்டு போனாருடா” பானு தயங்கி தயங்கிக் கூறினார். அவருக்குத் தெரியும் அவனுடைய பதில் என்னவென்று.

“மறுபடியும் ஆரம்பிச்சிடிங்களா, மாம் நான் எத்தனை முறை சொல்லிருக்கேன் எனக்கு இந்த அறேஞ் மேரேஜில எல்லாம் interest இல்ல புரிஞ்சிகோங்க பிளிஸ்” ரகு தான் எப்பவும் கூறும் அதே பதிலை கூறினான்.

“அதுக்கு இல்ல டா, இது நல்ல சம்பந்தம் ரகு, நடந்தால் நல்ல இருக்கும்னு அப்பா கூட சொன்னாருடா, நான் வேணுனா அந்த பொண்ணு போட்டோ காட்டடுமா, பார்த்த உனக்குக் கண்டிப்பா பிடிக்கும், பொண்ணு பேரு வெண்ணிலா, சும்மா தேவதை மாதிரி இருக்கா டா” பானுமதியும் அவனை விடுவதாக இல்லை.

“அம்மா பிளிஸ் எனக்குத் தூக்கம் வருது, காலை சீக்கிரம் கிளம்பனும்” தன் தாயிடம் இருந்து தப்புவதற்காக கண்களை மூடினான் ரகு.

அதற்கு மேல் என்ன பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை. சரியென்று அவன் அறையின் விளக்கை அனைத்துவிட்டு கீழே இறங்கினார் பானுமதி.

வாடிய முகத்துடன் வந்த தன் மனைவியைப் பார்த்த நாகராஜன் “என்ன சொன்னான் உன் செல்ல பிள்ளை”. என்றார்.

“அவன் எப்பவும் சொல்ற அதே பதிலை தான் சொன்னான். நீங்க ஒரு முறை பேசிப் பாருங்க, நீங்கச் சொன்ன அவன் கேட்பான்” தன் கணவனுக்கு அன்பு கட்டளையிட்டார் பானு.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.