(Reading time: 10 - 20 minutes)

“சரி பானு, நாளைக்கு அவனுக்கு லிவுதானே, அவங்கிட்ட பேசுறேன்.” என்றார் நாகராஜன்.

“இல்லங்க, நாளைக்கு எங்கேயே வெளியே போகனும் நு சொன்னான்.” என்று பதில் அளித்தார் பானு.

“சரி மா நான் பேசுறேன்” என்று கூறி விட்டு படுக்கைக்கு சென்றார் நாகராஜன்.

மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் வெளியே போவதற்காக கிளம்பி கீழே இறங்கி வந்தான் ரகு.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அம்மா காப்பி இருந்த குடுங்க நான் கிளம்பனும்” என்று அவசரப் படுத்துவது போல் கூறினான் ரகு.

“இதோ ஒரு நிமிசம் பா எடுத்துட்டு வறேன்” சமையல் அறையில் இருந்தே பதில் கூறினார் பானுமதி.

சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த நாகராஜன் “ ரகு உன் கூட கொஞ்சம் பேசனும், இப்போ பேசலாமா” என்று தன் மகனிடம் பேசுவதற்கு அனுமதி கோரினார்.

தன் தந்தை எதைப் பற்றி பேசப் போகிறார் என்று ரகுவிற்கும் தெரியும்.”அப்பா, கொஞ்சம் urgentஆ வெளியே போகனும் பா. முக்கியமான விஷயமா இல்லனா ஈவினிங் பேசலாமா, இப் யு டோண்ட் மைண்ட்” என்று பதில் அளித்தான் ரகு.

“முக்கியமான விஷயம்தான், ஆனால் அவசரம் இல்ல பா. போயிட்டு வா ஈவினிங் பேசிகளாம்” அவனின் விருப்பத்திற்குச் சம்மதம் சொன்னார் நாகராஜன்.

இதை கேட்டுக் கொண்டே வெளியே வந்த பானுமதி, தன் கணவனை முறைத்துக் கொண்டே தன் மகனுக்குக் காபியும் இட்லியும் தந்தார். அவர் முகத்தை ரகுவும் நாகராஜனும் கவனிக்காமல் இல்லை. இருந்தாலும் யாரும் அதற்கு மேல் பேசவில்லை.

சாப்பிட்டு விட்டு ரகு இருவரிடமும் விடை பெற்றுவிட்டு கிளம்ப, “என்னங்க இது, அவன்கிட்ட பேச வேண்டியது தானே” என்று சற்று கடுமையாகக் கேட்டார்.

“பையன் ஏதோ அவசர வேளையா போறான் பானு. வெளியே போரவனுக்கு கவனம் வேளையில் இருக்கனும். அவனை டிஷ்டரப் பண்ணக்கூடாது. அதான் ஈவினிங் பேசுரதா சொல்றான் இல்ல. விடு ஈவினிங் கண்டிப்பா பேசிடலாம்.” என்று தன் மனைவிக்கு ஆறுதல் கூறினார் நாகராஜன்.

“என்னமோ போங்க. இவனுக்குநு ஒரு பொண்ணு எந்த ஊருல இருக்காலோ” தன் கணவன் கூறியது சரி என்று பானுமதிக்கு பட்டாலும், தன் மன குமுறலை வெளியே கொட்டினார்.

“ஏய் நிலா, ஏந்திரி டீ, மணி 7 ஆகுது” என்று கத்திக் கொண்டே வெண்ணிலாவின் அறையின் உள்ளே நுழைந்தார் நிலாவின் தாய் சிவகாமி.

படுக்கையில் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு தூங்கிய தன் மகளைப் பார்த்து கடுப்பானார் சிவகாமி. “வயசு பொண்ணு, இப்படியா 7 மணி வரைக்கும் தூங்குறது” என்று புலம்பிக் கொண்டே தூங்கும் மகளைத் தட்ட, அது உள்ளே அமுங்கியது. என்னடா இது என்று போர்வையை விலக்க, ஆள் உறங்குவது போல் தலையணை அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

“அடி ஏமாத்துக் காறி” என்று சிவகாமி நிமிர, “டார்லிங் “என்று கூறிக் கொண்டே பின்னால் வந்து தன் தாயை அனைத்துக் கொண்டாள் வெண்ணிலா.

“எப்ப பார்த்தாலும், சின்ன குழந்தை மாதிரி உனக்கு விளையாட்டுதான்” என்று அவள் பிடியில் இருந்து விடுபட்டு திரும்பிய சிவகாமி தன் மகளை பார்த்து அசந்து போனார்.

சிகப்பு நிற சேலை, தலையில் மல்லிகைப் பூ என அழகு தேவதை போல் வெண்ணிலா நின்று கொண்டிருந்தாள்

ஆமாங்க உங்க கெசிங் கரைக்ட் தான். நிலா எங்கிற வெண்ணிலா தான் நம்ம கதையோட ஹீரோயின். நல்ல அழகு, செம friendly, ஜாலியான அதே சமயத்தில் மெட்சுரான பெண்ணு. பி.ஈ. ஆர்கிடெக் முடிச்சிட்டு, ஒரு தனியார் கண்சல்டண்சில ஆர்கிடெக் கண்சல்டெண்டா வேளை பார்க்குறா.    

தொடரும்

Episode # 02

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.