(Reading time: 21 - 41 minutes)

முதன் தான் பேசறான்..” என்று அனைவருக்கும் சொல்லியப்படியே மகி அழைப்பை ஏற்றான்.

“ஹலோ மகிழ்..” என்று அமுதன் குரல் கேட்டதுமே,

“அமுதன்.. அருள் உன்னோட தான இருக்கா.. ஏன் அவ போனை எடுக்க மாட்டேங்குறா. அவளை வெளியே கூட்டிட்டுப் போனா சொல்ல மாட்டியா.. அவளை பொண்ணு பார்க்க வர சமயத்துல அவ வெளிய போனதும் இல்லாம.. இவ்வளவு நேரம் அவளை காணும்.. அதனால இங்க என்னல்லாம் நடந்துச்சு தெரியுமா? அதுக்கூட பரவாயில்லை. ஆனா அவளை காணும்னு வீட்ல எல்லோரும் பயந்துட்டோம்..” என்று பதட்டத்துடன் பேசவும்,

“என்ன மகி சொல்ற.. அருளை பெண் பார்க்கவா வந்தாங்க..” என்று அமுதன் அதிர்ச்சியோடு கேட்டான்.

“சுடர் வேறு ஏதோ கூறினாள். மகி இப்போது வேறு ஏதோ சொல்கிறானே, அருளை பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் அவள் ஏன் முன்பே சொல்லவில்லை, அதுமட்டுமில்லாமல் ஏன் வீட்டில் என்னோடு வருவதாகவும் சொல்லவில்லை..” என்று குழம்பியவன்,

“சாரி அமுதன் எனக்கு இந்த விஷயம் தெரியாது.. அருள் என்கிட்ட இதைப்பத்தி சொல்லவேயில்லை. அதுமட்டுமில்லாம உங்கக்கிட்டேயும் சொல்லிட்டு வந்திருப்பான்னு நினைச்சேன்.. இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல சாரி..” என்று விளக்கம் கொடுக்கவும்,

“பரவாயில்லை அமுதன்.. வீட்ல சொன்னா அனுப்பமாட்டோம்னு சொல்லாம விட்ருப்பா.. சரி அதைவிடு.. சீக்கிரம் வந்துட்றதா சொல்லிட்டு தான் அருள் இங்க இருந்து கிளம்பியிருக்கா, ஆனா இவ்வளவு நேரம் ஆகியும் வரல, என்னாச்சு எதுவும் பிரச்சனையில்லையே, அங்க இருந்து கிளம்பிட்டீங்க இல்ல..”

“இல்ல மகி அதை சொல்ல தான் போன் பண்ணேன்.. வந்த இடத்துல அருள்க்கு உடம்புக்கு முடியாம போச்சு.. அதாவது வயிறு வலி..” என்று அவன் சொன்னதும் மகிக்கும் அருள்மொழியின் பிரச்சனை புரிந்தது.

“அய்யோ அப்படியா.. வயிறு வலின்னா தாங்க மாட்டாளே.. இப்போ எப்படி இருக்கா..” என்று அவன் பதட்டமாக கேட்டதிலேயே அனைவரும் என்னவோ ஏதோ  என்று மகியை பார்த்தனர்.

“இங்க டாக்டரை வர வச்சு பார்த்தேன்.. வலி குறைய ஊசி போட்ருக்காங்க.. கூடவே தூங்கவும் மருந்து கொடுத்திருப்பாங்க போல, அதான் தூங்கறா, மீட்டிங்க் அப்போ ரெண்டுப்பேரோட மொபலையும் சைலண்ட்ல போட்டோம்.. அதுக்குப்பிறகு இந்த பதட்டத்துல மொபைல் சைலண்ட்ல இருந்ததை மறந்துட்டோம்.. இப்போ தான் ஞாபகம் வந்துச்சு சாரி.. அதான் உடனே இன்ஃபார்ம் பண்ணேன்..’

“இருக்கட்டும் அமுதன், இப்போ நீங்க எங்க இருக்கிங்கன்னு சொல்லுங்க.. நான் வரேன்..” என்றவன் அமுதனிடம் முகவரியை வாங்கிக் கொண்டு அலைபேசி அழைப்பை அணைத்தான்.

“என்ன மகி அருள்க்கு என்னாச்சு..” பூங்கொடி தான் முதலில் கேட்டார்.

“எப்போதும் வர வயிற்று வலி தான் ம்மா.. அமுதன் டாக்டரை வர வச்சு பார்த்திருக்கான்.. இப்போ அருள் தூங்கறளாம்.. ரெண்டுப்பேரும் மீட்டிங்க் அப்போ மொபைலை சைலண்ட்ல போட்ருக்காங்க.. அதான் அவங்க கால் அட்டண்ட் பண்ணல போல..” என்று அனைத்தையும் கூறினான்.

“அதான் அருள்க்கு நம்மக்கிட்ட பேச முடியல போல.. சரி உடனே போய் அவளை கூட்டிட்டு வா மகி..” என்று பூங்கொடி பதட்டத்துடன் கூறினார்.

“அவங்க எங்க இருக்காங்கன்னு சொன்னாங்களா மகி..” என்று அறிவுக் கேட்க,

“ஈஞ்சப்பாக்கம் பக்கதுல அந்த ரெசார்ட் இருக்காம் அறிவு..” என்றதும்,

“சரி வா நாம போய் கூப்பிட்டிட்டு வந்துடலாம்..” என்று அறிவும் கூறினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஆமாம் முதலில் போய் கூப்பிட்டு வாங்க..  வெளிய போன இடத்துல புள்ளைக்கு இப்படி ஆகிப்போச்சே, வலி வந்தா துவண்டு போயிடுவாளே, ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா..” என்று பாட்டி கவலையொடு கூறினார்.

“அருள் நல்லா இருக்கறதா தான் அமுதன் தம்பி சொல்லுதே, பயப்பட வேண்டாம் ம்மா..” என்று புகழேந்தி கூறினார்.

“சரி நாங்க கூட்டிடு வரோம்..” என்று மகியும் அறிவும் கிளம்ப,

இத்தனை பேச்சு வார்த்தைகள் நடந்தும், அனைவரும் பதட்டத்துடன் காணப்பட்டும், கலையரசி மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். அவரின் மௌனத்திற்கான காரணத்தை ஒருவராலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அமுதன் சொன்ன ரெசார்ட்டிற்கு மகியும் அறிவும் போய் சேர்ந்த போது அருள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். உடனே அவளது உறக்கத்தை கலைக்காமல், அவள் விழிக்கும் வரை காத்திருந்து பின் அவள் எழுந்ததும் அவளுக்கு சாப்பிடக் கொடுத்து அவளை வீட்டிற்கு அழைத்து வரும் போது நள்ளிரவை நெருங்கியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.