(Reading time: 21 - 41 minutes)

கிறுக்கு ரொம்ப முத்தி போச்சுடீ உனக்கு.. இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ இப்படி பேசறேன்னு தெரியல.. அந்த பையன் நம்ம ஆளுங்க கிடையாது டீ.. அவனை போய் நம்ம அருள்க்கு எப்படி கல்யாணம் செஞ்சு வைக்கிறது?”  என்று அவர் கேட்க,

“அம்மா என்ன பேசற நீ.. நம்ம ஆளுங்கன்னு பார்க்கிறதெல்லாம் என்னம்மா.. நம்ம எழில்க்கு அதெல்லாம் பார்த்தா கதிரை கல்யாணம் செஞ்சு வச்சோம்..” என்று புகழேந்தி கேட்டார்.

“நான் சொல்ல வர்றது அதில்ல புகழ்.. ஜாதி மதம் தாண்டி, அந்த பையன் வேற

நாடு இல்லையா? அதுதான் யோசிக்க வைக்குது.. அதுவுமில்லாம நம்ம ரெண்டு பொண்ணுங்களை கட்டிக் கொடுத்திருக்கோம், சம்மந்தி வீட்டுக்காரங்களுக்கு இது பிடிக்காம போயிடுச்சுன்னா..”

“முன்னமே எழிலுக்கு நம்ம ஆளுங்க இல்லாம, வேற இடத்துல தான்  கொடுத்திருக்கோம்னு சொல்லி தானே பொண்ணு கொடுத்தோம்.. அப்போ அவங்க அதை ஏத்துக்கிட்டாங்க தானம்மா.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்ல.. அதேபோல அமுதன் அப்பா வெளிநாட்டவரா இருக்கலாம், ஆனா அம்மா தமிழ் தானே அப்புறம் என்னம்மா?”

“அப்போ உனக்கு இதுல விருப்பம் இருக்கா புகழ்..”

“நீங்க சொன்ன காரணம் சரியில்லனு தான் இதை சொன்னேன்ம்மா.. அதேபோல கலை சொன்னதுக்காகவும் இந்த கல்யாணத்தை நடத்த முடியாது.. அருள்க்கு பிடிக்கணும், அதேபோல அந்த பையனுக்கும் பிடிக்கணும்.. அப்போ தான் மேற்கொண்டு பேச முடியும்..” என்றவர்,

“அருள் நீ என்ன சொல்ற..” என்று அவளிடம் கேட்டார்.

எப்போதும் அன்னை விருப்பத்திற்கு தலையாட்டுபவள், அவரை மீறி செய்த ஒரு செயல் எத்தனை தூரத்திற்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்தவள், இப்போது அன்னை பேச்சை மீறவா செய்வாள்?

“அம்மாக்கு எது விருப்பமோ, அதுல எனக்கு சம்மதம் தான் மாமா..” என்று சொல்லிவிட்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்புறம் என்னங்க.. அருளே சம்மதம்னு சொல்லிட்டா.. முன்னமே அருள் கல்யாணத்துல கலை தீவிரம் காட்ட ஆரம்பிச்சிட்டா, இப்போ இந்த பிரச்சனையில் சீக்கிரம் அருள் கல்யாணம் நல்லப்படியா நடந்தா தான் கலைக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.. அதனால அமுதன் தம்பி ஊருக்கு போறதுக்குள்ள இந்த விஷயமா பேசிடுங்க.. அதுக்கும் முன்ன நம்ம எழில் வீட்டுக்கார்க்கிட்ட முதலில் இந்த விஷயத்தை பேசுங்க..” என்றதும், புகழேந்தியும் சரி என்று ஒத்துக் கொண்டார்.

மகிக்கும் இந்த பேச்சு ஏதோ ஒரு வகையில் நிம்மதியை கொடுத்தது. அதே சமயம் கலை அத்தையின் அவசரத்தை நினைத்து அருள்மொழிக்காக இது நல்ல முடிவு தானா? என்று அவனை யோசிக்கவும் வைத்தது.

கலையின் முடிவை ஏற்றுக் கொண்ட பின்பும் கலை அருள்மொழியிடம் சரியாக பேசவில்லை. அதனால் அறைக்குள்ளேயே அவள் அடைந்துக் கிடக்க, இலக்கியா அவளை தேடி வந்தாள்.

“மச்சி.. எப்பவும் இல்லாத துணிச்சலோடு நேத்து தான் அத்தையை மீறி ஒரு காரியம் செஞ்ச.. ஆனா அது இப்படியா முடியணும்..”

“விடு இப்படி நடக்கணும்னு இருக்கு என்ன செய்ய?”

“ஆமாம் அங்க ரொம்ப கஷ்டப்பட்டியா மச்சி.. இந்த மாதிரி நேரத்துல என்ன இருந்தாலும் சார்லஸ் ஆம்பிளை இல்லையா? உனக்கு ஒருமாதிரி தர்மசங்கடமா இருந்திருக்கும் இல்ல..”

“இருந்துச்சு தான், ஆனா அமுதனோட அக்கறையான நடவடிக்கைல முதலில் இருந்த சங்கடம் அப்புறம் இல்ல..”

“அத்தை கண்டிப்பானவங்கன்னு தெரியும், ஆனா இப்படில்லாம் பேசுவாங்கன்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல.. அவங்களுக்காக தான் சார்லஸ்க்கிட்ட இருந்து தள்ளி நின்னன்னு இப்போ புரியுது..

நான் கிண்டலா உங்களை இணைச்சு பேசியிருக்கேன்.. ஆனா இப்போ அத்தை இந்த கல்யாணப் பேச்சை எடுத்தது எனக்கே பிடிக்கல.. ஜஸ்ட் ஒரு பையனோட வெளியப் போனா தப்பா.. அதுக்காக கல்யாணமா? அத்தை அப்படி சொல்லும்போது உனக்கு கஷ்டமா இருந்திருக்குமில்ல..”

“அம்மா என்னை புரிஞ்சிக்கலன்னு எனக்கு கஷ்டம் தான், ஆனா அது தான் அவங்க குணம்னு எனக்கு முன்னமே தெரியும், அதனால அதை என்னால சுலபமா ஏத்துக்க முடிஞ்சுது.. அதுவுமில்லாம அமுதன் எனக்கு தெரிஞ்ச ஆள் தானே அதனால இந்த கல்யாணப் பேச்சும் எனக்கு தப்பா தெரியவே இல்லை..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நிஜமாவா சொல்ற மச்சி..மனசார தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீயா?  கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு டீ..”

“ஆனா இப்படி ஒரு விஷயத்தை வச்சு அமுதனை என்னை கல்யாணம் செஞ்சுக்க சொன்னா, அவர் ஒத்துப்பாரா?”

“ஏன் ஒத்துக்காம, என்னோட அருளை அமுதன் வேண்டாம்னு சொல்வார்னா நினைக்கிற, கண்டிப்பா இந்த சான்ஸை மிஸ் பண்ண மாட்டார்னு தான் எனக்கு தோனுது.. சார்லஸோட டயானாவை வேண்டாம்னு சொல்ல முடியுமா டயானா..” என்று இலக்கியா சொல்லி சிரித்தாள்.

அதில் அருள்மொழிக்கும் சிரிப்பு வந்தது. கூடவே அமுதன் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று அவள் மனம் எதிர்பார்க்கவும் செய்தது. அன்னைக்காக என்றாலும், அவள் அமுதனுக்காகவும் தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் கூறினாள்.

அவளைப்பற்றி எல்லாவிதத்திலும் தெரிந்தவனாக, புரிந்தவனாக அமுதன் இருப்பான்  என்று அவள் உள்மனம் சொல்ல, அது மெய்யாகுமா? பொய்யாகுமா?

உறவு வளரும்...

Episode # 44

Episode # 46

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.