(Reading time: 15 - 30 minutes)

ச்சே என்னதான் எதிர்பார்ப்பு வைக்காமல் இருந்தால் ஏமாற்றம் கிட்டாது எனத் தெரிந்திருந்தாலும் கூட மனம் கேட்பதில்லையே? சரி எனக்கும் ஜீவனுக்குமான உறவில் எதிர்பார்ப்பே வைக்காமல் எப்படி இருக்க முடியும்? என்னுடைய வாழ்க்கையில் அவன் எனக்கு எப்படி முதலாவதோ? அப்படியே அவனுடைய வாழ்க்கையில் நானும் முதலாவதாக இருப்பது முடியாதா மனம் அடிப்பட்ட குழந்தையாய் சுணங்கியது.

மேடம் உங்க பாஸைப் பார்க்க அனுமதிக் கிடைக்குமா? ஆளுமையான குரலில் சட்டென எழுந்தாள்.

பாஸ் என்ன பாஸ்? இது சட்டென சிரித்து விட்டிருந்தாள் திவ்யா.

வந்திருந்ததோ ரூபன். சில மாதங்கள் ரூபனது தொழிற்சாலையில் பணி புரிந்தவளை, ஏதேதோ காரணம் சொல்லி வலுக்கட்டாயமாக ஜீவன் தன் அலுவலகம் ஆரம்பித்த போது தன்னிடம் வேலை செய்யுமாறு மாற்றியிருந்தான்.

குறுகிய நாட்கள் ரூபனிடம் பணிபுரிந்ததன் காரணமாகவே திவ்யாவின் அந்த பாஸெனும் விளிப்பு.

ரூபனின் ஆளுமையும், அமைதியாக வேலை வாங்கும் பண்பும், பொறுமையும் அவளுக்கு மிகவே பிடிக்கும். முக்கியமாக அனிக்கா மீதான அவன் காதல் அவளுக்கு பிரமிப்பை ஏற்படுத்துவதொன்று.

திவ்யா முன்னேச் செல்ல கேபினிற்குள்ளாக அவள் பின்னே சென்றான் ரூபன்.

என்னடா ஜீவா? அண்ணனின் குரல் கேட்டு அவசரமாய் எழுந்த ஜீவன் அவனை மேலும் பேச விடாதவனாக, அந்த ஸ்வீட் பாக்ஸை எடுத்து அவன் வாயில் ஒரு பேடாத் துண்டை அழுத்தினான் அவன்.

தம்பியின் செய்கையில் சிரிப்பு வரப் பெற்றவன், இரண்டுக் கைகளையும் தூக்கி அவனிடம் சரண்டரானான். அவசரமாய் இனிப்பை விழுங்கியவன்.

சரிடா நான் ஒன்னுமே சொல்லலை, தயவு செய்து இன்னொரு ஸ்வீட்டை திணிச்சிராதே…

அஃது …என்றவனாய் கெத்தாய் அமர்ந்தான் ஜீவன். அடுத்த இருக்கையில் அமர்ந்தான் ரூபன்.

ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவிடம் …

பார்த்தீல்ல சாருக்கு தான் முதல்ல விபரம் போயிருக்கும். அமைதியா இருக்கிற மாதிரி இருப்பான். ஆனா எல்லாம் தெரிஞ்சு வச்சிருப்பான்…பல்லைக் கடித்துக் கொண்டே அண்னன் புகழ் பாடினான் ஜீவன்

இப்ப என்னடா? டெண்டர் உனக்கு கிடைச்ச சந்தோஷத்திலத்தான் வாழ்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்.

அப்ப இந்த டெண்டருக்காக நான் முயற்சி செய்யும் முன்னே என்னை இதில இறங்காதேன்னு சொன்னது? ம்ம் ..இப்பச் சொல்லு?

இப்பவும் தான் சொல்றேன், அந்த படேல் & க்ரூப் ரொம்ப மோசமானவனுங்க. எதுக்கு நமக்கு வம்பு? வழக்கமா அவனுக்கு கிடைக்கிர டெண்டர் நமக்கு கிடைச்சா அவனால பொறுக்க முடியுமா? வீண் விரோதம் தான் மிச்சம். இதெல்லாம் தெரிஞ்சு தான் நான் இதுவரை இந்த விஷயத்தில இறங்கவில்லை. இல்லைன்னா நான் இந்த காண்டிராக்ட் முன்னமே எடுத்திருக்க மாட்டேனா? ஏற்கெனவே நமக்கான எக்ஸ்போர்ட் ஆர்டர் இன்னும் நிறைய வரப் போகுது. நீ அதில கவனம் செலுத்துவன்னு பார்த்தேன். நீ என்னன்னா…

அதெல்லாம் நான் சரியாதான் செஞ்சிட்டு இருக்கேன் அண்ணா, நீ கவலைப் படாதே. எக்ஸ்போர்ட் ஆர்டர் வேலைக்கு தட்டுப் படும்னா பேக்டரியை இன்னும் கொஞ்சம் விஸ்தரிச்சுப்பேன். நான் இப்ப புது புது வேலையை எடுத்துச் செய்யலைன்னா பின்ன எப்ப?

அருகில் சென்று தம்பியை அணைத்துக் கொண்டவன் தோளில் கைப் போட்டு….

ஏன்டா கடுகுப் போல பொரியுற? சரி வேணும்னா உனக்கு கொஞ்ச நாளைக்கு செக்யூரிட்டி போட்டுக்கலாமா? அவன் மெதுவாகத்தான் சொன்னான் கேட்ட திவ்யாவுக்கு உள்ளுக்குள் சிலீரென்றது.

ரூபன் அநாவசியமாக பேசுகின்றவன் அல்ல, டெண்டர்களுக்காக நடைப்பெறும் சம்பவங்கள் பல அவள் அறிந்திருக்கிறாளே? ஏதேனும் ஆபத்து நேரும் என்பதற்காகத்தான் செய்தி கிடைத்ததும் உடனடியாக அவன் தன் தம்பியைப் பார்க்க வந்திருக்க வேண்டும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "உன்னாலே நான் வாழ்கிறேன்..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தன் வேலை விஷயத்தில் தன் குருவான அண்ணனையே மதிக்காமல் பேசுகின்றவன். அவள் ஆலோசனைக் கூறினாலும் அவளின் பேச்சைக் கேட்பான் என்பதில் எல்லாம் அவளுக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், விபரம் தெரிந்துக் கொள்ள தொற்றிக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தாள்.

ரூபன் என்னென்னவோ சொல்லி தம்பியிடம் தணிவாக பேசிக் கொண்டிருந்தது இவளுக்குப் புரிந்தது.

நாம இந்த டெண்டரை சொன்னபடி வெற்றிகரமா முடிப்போம்னு நம்பிதானே அவங்க நமக்கு தந்திருக்கிறாங்க அண்ணா, அதெல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது. நீ சொல்லுற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்காது. அது யார் என்னை என்ன செய்வான்னு பார்த்துக்கலாம். நீ கவலைப் படாதே அண்ணா… தனக்கு ஆலோசனை சொல்ல வந்தவனுக்கே ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தான் ஜீவன்.

ரூபன் ஒவ்வொரு மெஷினாக சற்று தூர நின்றே பார்வையிட்டுக் கொண்டு இருந்தான். அவன் தொழிற்சாலையின் வாயில் தெரியும்படியான இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான்.

ஜீவனோ அவனுக்கு எதிரில், அதாவது வாயிலுக்கு முதுகு காட்டியவனாக நின்றுக் கொண்டிருந்தான். தன்னருகில் நின்றுக் கொண்டிருந்த திவ்யாவிடம் சற்றுக் குனிந்தவன்… அவள் காதருகேச் சென்று…

10 comments

  • Mam, Is this continuation of your first story.. I liked the story very much :) Great update Mam.. Looking forward to read more
  • Lovely update jansi ma'am 👏👏👏 poem :cool: y is Jeevan like dis steam divya-va kandukura mathiriyum irukku appadi illandra mathiriyum therirare. :Q: it's offending chottu facepalm as always his love n care towards ani and ruban is cute 😍😍 and everlasting energy 👌 what is the thirupam.waiting in Robin's bday ? Look forward to read the next update. Thank you and keep rocking.
  • [quote name=&quot;Sahithyaraj&quot;]Hey welcome back :clap:[/quote]<br />நன்றிகள் பல சாஹித்யாராஜ்
  • [quote name=&quot;saaru&quot;]Welcome back<br />Nice update janci...[/quote]<br />மிக்க நன்றிகள் சாரு
  • நிறைய ஸ்பெல்லிங்& வார்த்தைகள் மிஸ்டேக் இந்த எபில...ப்ளீஸ் மன்னிச்சு ப்ர்ண்ட்ஸ்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.